மன்னித்துவிடு...
மனச்சாட்சியே இன்றி
இழைத்து விட்டேன்
பெரும் துரோகம்
மன்னிப்பாயா? - இந்த
அறியாமையின் அசிங்கத்தை...
தனிமையின் கொடுமை
உணர்வுகளின் போராட்டம்
இழப்புகளின் இயலாமை
பாசத்தினை வலை விரிப்பு
தவிப்புகளின் அதிகரிப்பில்
இழைத்து விட்டேன்
பெரும் சங்கடத்தை..
மனதிலே ஆயிரம் வலி
ஒவ்வொறாய் சொல்லிட
ஓராயிரம் அழைப்புகள்
பயனற்று போனது
எதிர்பார்ப்புகள்.
அசுரனாய் மாறிய என் மனம்
அழிந்து விட்டது
உன் நிம்மதியை..
வருந்துகிறேன் இப்போது
அங்கணப் பொழுதுகளை எண்ணி..
கனவில் கூட நினைத்தில்லை - உன்
கண்ணீரில் கவி பாட
இடியாய் இன்னும்
அதிர்ந்து கொண்டிருக்கிறது
என் இதயம் - உன்
அழுகையின் ஓசையிலே..
மன்னித்து விடு என்னை..
மெளனம்
உன் சுட்டுவிரல்
காட்டும் திசை நோக்கி
பாய்ந்தோடும் என் மனசு - இன்று
கற்களிலும் முட்களில்
சிக்கி தவிக்கும் நிலையினை
நீ அறியாயோ...
நேற்றுவரை நீ
என்னோடு இருந்த
பசுமையான நினைவுகள்
இன்று பற்றி எரிகின்றது
ஆயிரம் எரிமலையாய்..
நெருப்பாற்றை கடக்கும்
நிலையறியாது தவிக்கும்
என் நிலை அறியாயோ...
என் வாழ்வின் வெற்றிகள்
உன் உத்தரவின்றி
என்னை முத்தமிட்டதில்லையே..
இன்று
சாபங்களே வரமாய்
தோல்விகளே நிரந்தமாய்
வலியே வாழ்வாய்
துடி துடிக்கும்
அபலையின் அழு குரல்
உன்னை தீண்டவில்லையா?
என் வாழ்வில்
வசந்தங்கள் வீசிட
வரமாய் யாசிக்கிறேன்
கலைந்து விடு
உன் மெளனத்தை...
வாழ்க்கை பயணம்...
மனித வாழ்வில்
எண்ணில் அடங்கா ஆசைகளை
எண்ணி எண்ணி வடிவமைத்தாலும்
மாற்றம் என்னும் சொல்லை
மாற்றியே செல்கின்றது
வாழ்க்கை.
கற்பபை வாசலில் இருந்து
துளிர்விடும் தருணம் முதல்
நான்கு கால்களில்
ஊர்வலமாக செல்லும் வரையில்
எத்தனை உறவுகள்
பாச வலையில்
பாலம் அமைக்கின்றன...
தாயின் வடிவில்...
தந்தையின் வடிவில்...
சகோதர வடிவில்...
காதல் வடிவில்...
நட்பின் வடிவில் என...
விரிந்தே செல்கின்றது
வாழ்க்கை பயணம்...
சந்திப்பவர்கள் எல்லாம்
கூடவே இருப்பார்கள் என
சிந்திக்கும் வேளையில்
வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு நிறுத்ததிலும்
ஒவ்வொருவராக மறைந்து
போகின்றார்கள்....
இல்லை இல்லை
மறந்தும் போகின்றார்கள்...
உறவுகள் இன்றி
உயிர் துடிக்கும்
உறவு ஒன்று - இங்கே
தொடங்கிய பயணம்
முடிவினை நோக்கி
காலியான வண்டியாய்
தனித்தே பயணிக்கின்றது
அடுத்த நிறுத்தத்தை நோக்கி.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக