பேரறிஞர் அண்ணா
இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த, வலிமையான அரசியல் தலைவர்களுள் ஒருவராக கருதப்படுபவர் அறிஞர் அண்ணா.
அது மட்டுமல்லாமல் இவர் அனைவராலும் பாராட்டுப்பெற்ற ஒரு சிறந்த பேச்சாளராகவும், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய எழுத்தாளராகவும் மற்றும் ஒரு மேடை நாடகராகவும் புகழ் பெற்றார்.
ஆரம்ப வாழ்க்கை
அண்ணா அவர்கள் நடராஜன் மற்றும் பங்காரு அம்மாளுக்கு மகனாக 1909ம் ஆண்டு செப்டம்பர் 15ம் திகதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். இவர் செங்குந்த முதலியார் வகுப்பை சார்ந்த ஒரு நடுத்தர நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தனது பள்ளி படிப்பை சென்னையிலுள்ள பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் தொடங்கினார்.
ஆனால் தன்னுடைய குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் கிளர்க்காக வேலை புரிந்தார். பிறகு அவர் தன்னுடைய பட்டப் படிப்பை பச்சையப்பா கல்லூரியில் தொடர்ந்தார்.
1930ம் ஆண்டு தனது 21வது வயதில் ராணியை மணம் முடித்தார். பின்னர் 1934ம் ஆண்டு பி .ஏ (ஹானர்ஸ்) பட்டமும், பிறகு எம். ஏ (பொருளாதாரம் மற்றும் அரசியல்) முதுகலை பட்டமும் பெற்றார்.
தன்னுடைய கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு ஆங்கில ஆசிரியராக பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆசிரியர் பணியை தொடர்ந்தார். ஆனால், குறுகிய காலத்திலேயே ஆசிரியர் தொழிலை விட்டு பத்திரிக்கை மற்றும் அரசியலில் ஈடுபாடுகொண்ட அண்ணா தன்னை முழு அரசியல்வாதியாக தன்னுடைய வாழ்க்கை