வெற்றிக்கு முன் வரும் தடைகள்!
ஆன்மாவிற்கான சிக்கன் சூப் கதைகள் (Chicken
Soup for the Soul ) பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். தன்னம்பிக்கை, அன்பு, அறிவு,
வாழ்வியல் ஆகியவற்றை விளக்கும் உண்மைக்கதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றின்
தொகுப்பு அவை. அந்தத் தலைப்பில் 200 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. பதினோரு கோடிக்கும் மேற்பட்ட
புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. நாற்பதற்கும் மேற்பட்ட மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்த அளவு வெற்றியடைந்த அந்த நூல்களில் முதல்
நூலைப் பதிப்பிக்க அதன் தொகுப்பாளர்கள் ஜேக் கேன்ஃபீல்டு (Jack
Canfield) மற்றும் மார்க் விக்டர் ஹான்சென்
(Mark Victor Hansen) இருவரும் சந்தித்த தடைகள் கொஞ்ச நஞ்சமல்ல.