வியாழன், 8 டிசம்பர், 2011

அவளுக்காய்...


அவளுக்காய்...

 விதியேன எண்ணியே
விலகிட்ட போதிலும்
வழியதில் வந்தும்
நிழல் போல் வலியது
தொடருதே என்னை

உறவுகள் உருவாகும் போது
உணராத அர்த்தங்கள்
உருமாறும் போது
உதிரத்தை உறிஞ்சுதே
ஊமையாய் இருந்தே..

வஞ்சம்மில்லாத அவள்
நெஞ்சமதில் - நான்
நேசிக்கப்பட்டதினால்
வஞ்சியவள் வாழ்வில்
வளம் மிகுந்து ஒளிர்வதற்காய்
அன்பு எனும் அணையாய்
அகல்விளக்குக்கு ஒப்பாய்
மாய விம்பத்தினால்
திரியும்மிட்டு அதில்
யாரும் அறியாமலே
அகம் வடிக்கும்
கண்ணீராய் என்னையாக்கி
அதில் ஒளியை தேடுவதை
எனைத் தவிர யார் அறிவர்

அறியாமை....



என் வாழ்வின் பயணத்தில்
எங்கிருந்தோ வந்தவளே - எனை
தனதாக்கி சென்றதனை
நானே அறியவில்லை
வழிமாறி வந்ததினால்
பழியேதும் வந்திடுமோ?


அழியாத என் பாத சுடுகளில்
வழி தேடி வந்து என்னை - சொந்தம்
குழி தோண்டி புதைந்திடுமோ?

வெளியேற முயலுகிறேன்
துளிகூட முடியவில்லை - அவள்
இதய குழியில் விழுந்த என்னால்...

காதல் தோல்வி....


சொல்லிக் கொடுத்திட்ட
பள்ளிக் கணக்குடனே
மன பாசத்தையும்
அள்ளிக் கொடுத்ததால்
அதில் மூழ்கிட்டாள் அவளும்

சோகம் மறந்து
துள்ளிக் திரிகையிலே
உள்ளம் கொள்ளை போனதினால்
கள்ளத்தனமாகவே அவர்கள்
காதல் வளர்த்தனர்.

ஒட்டி இருந்த சொந்தமெல்லாம்
திட்டியே தீர்த்தமையால் தினம்
வெட்டியே விலகி பகையினை
கிட்டிய நாட்டுக்கு சென்று - தாலி
கட்டியே வாழ்வதற்கு - இருவரும்
திட்டம் வகுத்தார்கள்

பெட்டியை கையிலேந்தி - கால்
முட்டியின் வலி மறந்து
எட்டியே பார்த்து நின்றான் தெருவை

கட்டிக் காத்து வளர்த்திட்ட
பெற்றவர் சிந்தையது
முட்டியே மோதியதால் மூளையை
வெட்டியே விட்டுவிட்டாள்
வெளிக்கிட்ட பயணத்துடன்
விரும்பிய உள்ளத்தையும்..

உயிரிலே கலந்திட்ட அவன்
உருவமதால் உடைந்த மனம்
ஊரார் எய்திட்ட - வார்த்தை
அம்புகளின் அவமானத்தினாலும்
மாத்திரையை துணைக்கணைத்து
மரண தேவதையின்
மடியினிலே தலை சாய்ந்தாள்..

தோழியே....


எங்கெங்கோ பிறந்து
எல்லையற்று மிதங்கும்
எண்ணங்களை எம் கைக்குள்
அடக்க நினைப்பது 
நிலையா? நியாயமா?

பிறக்கின்றே போதே
விதித்தி்ட்ட விதியை
விலகிட்டே நீயும்
வென்றிடலாமா வாழ்வை
நினைக்கின்ற போதே
கனக்கின்ற மனதை
களைத்திடத்தான் ஏதும்
மார்க்கமுண்டா தோழி?

வாழ்வின் உயர்ச்சிக்காய்
முயற்சிக்கின்றோம் தினம் - ஆனாலும்
மூழ்கியே எழுகின்றோம்
விதியெனும் சமூத்திரத்தில்..

விதிவழியாய் வரும்
வலியானது இங்கே
விழி வழியாய் விடும்
கண்ணீரோடு சங்கமம்

முடியவில்லை என்னால்.!!!!

ஆயிரம் வார்த்தைகளால் -என்னை
புரிந்திட வேண்டினேன் உன்னிடம்
புரிந்தும் புரியாமல் புலம்புகின்றாயா?
புரிந்தும் ஏற்க மறுக்கின்றாயா?
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!


தோழனாய் எப்போதும் தோள் கொடுத்தாய்
நல்லவை தீயவை எடுத்துரைத்தாய்
காதலனாய் என்னை அரவணைத்தாய்
இன்று என்னை புரிய மறுக்கின்றாய்
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!


பாசத்தால் வேலியிட்டாய் அன்று
பாசத்தை வேசமென்கின்றாய் இன்று
பங்குபோட பாசமென்ன  விலைப்பொருளா?
உறவுகள்மேல் பாசம் கொள்வது தவறா?
உன்னைமட்டு நேசியென்பது நியாயமா?
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!


வாழ்க்கையின் ஆணிவேர் நம்பிக்கை-அதனை
புடுங்கி எறிகின்ற கோடாரியாய் சந்தேகம்
எதிலும் சந்தேகம் கொள் தீர்விருக்கும்
பாசம்மேல் சந்தேகம் கொண்டாய் என்ன செய்வேன்
புரியவைக்க முடியவில்லை 
புலம்புகின்றேன் தனிமையிலே
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!

உன் குழப்பத்திற்கு விடைதேடி
வினவினேன் வினாக்களை என்னிடம்
விடை கண்ணீராய் விழிவழியே.
 புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!


 .....................................................................

நட்பாயிருக்கையில் நம்பிக்கைகொள் நட்புமேல்
காதலராயிருக்கையில் நம்பிக்கைகொள் காதல்மேல்
கணவனாயிருக்கையில் நம்பிக்கைகொள் மனைவிமேல்
மனைவியாய் இருக்கையில் நம்பிக்கைகொள் கணவன்மேல்
நல்ல தந்தை தாய் இருக்கையில் நம்பிக்கைகொள் பிள்ளைமேல்
பாசமாய் நீ இருக்கின்றாயா? பாசம்மேல் நம்பிக்கைகொள்
உண்மை உறவுகள்மேல் நம்பிக்கைகொள்
சந்தேகம் உன்னை நெருங்காது.
*********************************************************************************

முத்தம்...

முத்தம் இதன் அர்த்தம்
அவர் தத்தம்
உறவுகளுக்கேற்ப
நித்தம் நேசிக்கப்படுகிறது

அன்பு நெஞ்சங்களாய்
அளவிட முடியாத
அன்பின் ஆழமதை
அள்ளியே வழங்கிடுவர்
அன்பு முத்தத்தினால்

கொஞ்சி பேசிடும் குழந்தையிடம்
கெஞ்சியே வாங்கிடுவர்
முந்தி தவமிருந்து
மூன்னூறு நாள் சுமந்து
புவிதனில் பிறந்ததும்
உச்சி முகர்ந்தவள்
அளித்திடும் அன்பு முத்தமதில்
அனைத்தையும் மறக்கின்றாள்

பிஞ்சு பாதங்களினால்
நெஞ்சில் கோலமிட
கஞ்ச தனமின்றி அன்பு
கரைபுரட்டோடுது தந்தையின்
அன்பு முத்தத்தில்..

கூடப் பிறந்தோரும்
கூடி ஓடி விளையாடுவோரும்
கூட வரும் உறவுகளும்
கொடுத்து பரிமாறிடுமே

பக்கத்தில் இருந்து மட்டுமல்ல
காற்றில் பரந்தும்
கடிதத்தில் புதைந்தும்
தொலைபேசி தொடர்பிலும்
பாரிமாறுகிறார் பாசமாய்...

அன்பின் அமுத சுரபியாய்
அனைத்து உயிர்க்கும் பொதுவாய்
அகில உலகமே பரிமாறும்
அன்பின் சின்னம் முத்தம்.

மகா கவி...!


எட்டைய புரத்திலே
ஏழ்மையின் மடியிலே
ஆதிபகவானுக்கு
அலுக்காமல் தொண்டு செய்யும்
அந்தனர் குலத்திலே அவதரித்தாராம்..


மலர்ந்த முகத்துடன் கூடிய
முறுக்கு மீசையிலே
தெரிவது தோற்றமட்டுமல்ல
தெளிந்த உணர்வுகளும்


ஆண்டவன் கொடையாம்
இயற்கையை வியந்தான்
ஆதிசக்தி அன்யை
அருள் வேண்டியே புகழ்ந்தான்
ஓடி விடையாடும் குழந்தையை
கூடியே பாடி விளையாட
பறவைகள் பண்பினை
பாடலாய் பாடினான்


அறியாமல் கொண்டே
அடங்கிய சமூகத்தில்
அடங்கிய பெண்மையினை
வெளியே கொண்டு வர
அறிவினை ஊட்டியே
புரட்சியை நடத்தினார்.


ஏழ்மையை மறந்து
ஏற்றத் தாழ்வின்றி
எம்மினம் வாழ்ந்திட
சாத்திரம் அளித்தே - புது
சரத்திரம் படைந்தார்


கலைகளில் திகழ்ந்வன்
கண்ணமைமிதினிலே
காதலில் விழுந்தே - அவள்
கைத் தலம் பற்றினான்


அஞ்சியே வாழ்ந்ததற்கு
அஞ்சாமை ஊட்டியவன்
ஆர்வம் மிகுதியால்
ஆபத்தை ஏற்றான்


புரட்சிக் கவியிலே விஞ்சியவன்
மதம் மிஞ்சியே நின்ற
யானை அருகினில்
அஞ்சாது சென்றமையால்
பஞ்சாய் தூக்கியே
பரலோகம் சேர்ந்திற்று
மலர்ந்து மணம் பரப்பி
மக்கள் மனதில்
இடம் பிடித்தமையால்
மஹா கவியானர் 
பாரதியார்..


விதியின் வழியில்..



வாழ்வின் எல்லையை அறியாத
தொல்லைகள் புரியாத
துள்ளித் திரிந்திட்ட
பிள்ளைப் பருவத்தில்
உள்ளத்தை கொடுத்தவள்
கொள்ளை இன்பத்தில்
காதல் வளர்த்தாள்

கள்ளத்தனமின்றி
உள்ளச் சோகத்தோடு
செல்லக் கதைதனையும்
சேர்ந்தே பயின்றதினால்
சொர்க்கத்தின் படிகளில்
செல்கின்ற சந்தோசம் - அவள்
உள்ளத்தில் பளிச்சிட்டது

வீதி வழியில்
ஏற்பட்ட விபத்தாய்
விதி அவள் வாழ்வில்
திருமணம் எனும் வழியில்
வாழ்க்கைப் பயணத்தில் துணையாக
கரம் சேர காக்கையில்
கல்பட்டு நொறுக்கிட்ட
கண்ணாடி போன்றே
நொறுக்கிற்று அவள் நெஞ்சு

விழிதனில் நீர் கொட்ட
விரல் நுனியாலே அதே தட்டி
பாதி வழியிலே திசை மாறும்
விதியின் வழியிலே
அவள் வாழ்வு செழிந்திட
விலகியே சென்றிட்டான்

உயிர் அது துடிக்கவே
உணர்வினை ஊனமாக்கி
உறவுகள் மகிழ்ந்திட
உரிமையை தனதாக்கி
ஏற்றிட்டாள் மண மாலையை....!

வழிகாட்டி..



தோழனாக வந்து
தோள் கொடுத்து உதவியவன்
தோல்வியேதும் வந்திடாது - அவள்
வாழ்வு துலக்கிடவே
தூதனானான் அவள் வாழ்வில்..

வாழ்கை எனும் ரதம்
தடம்மாறி போகையில்
வடமாக மாறியே
வழிகாட்டி ஆனான்

திடமான வாழ்வுக்காய்
உரமுட்டிய வார்த்தையால்
வளமுடனே செழிந்து
ஓங்கியது அவள் வாழ்வு....

புது வாழ்வு...

 காதல் என்னும் பாடத்தை
கருத்துடனே கற்ற அவள்
தேர்வெழுதும் நேரத்தில்
தோற்றி தவறியதால்
வேறுதுறை தேர்ந்தெடுத்து
வெற்றி பெற்ற நேரமதில்
எண்ணியே பார்க்கிறாள்
மின்னி மறைந்த எண்ணங்களை...


கண்ணில் தோன்றும் காட்சிகளோடு
பல கற்பனைகள் கடந்தே
காலத்தை காதலோடு
கழித்த அவள் வாழ்வில்
இனிய தென்றலாய் வந்து
இனிய சுவாசமாய்
இணைந்த அவன் உறவால்
புத்துயிர் பெற்றே அவள்
புழுதி படிந்த சுவர்தனில்
புத்தோவியம் தீட்டினாள்...
****************************************************************************

புரியாமல் புலம்புகிறேன்

 வழிமாறி போன கண்ணில்
கருவிழியாக வந்து - என் வாழ்வை
உருமாற்றி வைத்த - அந்த
உள்ளத்தை தேடுகிறேன்

தெருவோரம் கிடந்த என்
அருகோரம் அன்று நீ
அருகாமல் விட்டிருந்தால்
அறியேனே இன்று இந்த
அவல நிலை தனை
உனை பிரிந்து

புயல் காற்றில் அகப்பட்ட
புழுதி போன்ற என் வாழ்வை
பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்

தடம்புரட்ட என் வாழ்வில்
தடைக்கற்றகள் பல தாண்டி
தரணியிலே தடம் பதிக்க வைத்தவனே(ளே)
தத்தளிக்க விட்டதினால் - தினம்
தவிக்கின்றேன் உன் நினைவால்

கரைபுரண்டு ஓடியே
கடல் நீரும் வற்றலாம்
காலை சூரியன் ஓர் நாள்
திசை மாறி உதிந்தாலும் - என்
உருவத்தில் நுழைந்து
உயிரான உன் நினைவு
நீங்கிடுமா எனை பிரிந்து.....

அப்பா...

  நாம் தழைக்கவென
தன் தலைமுறையை தனதாக்கி
தன் மார்பில் எனை தாங்கி
வளர்திட்ட அன்பு உருவே
என் தந்தை

எடுத்தடி எடுத்து வைக்கையிலும்
ஏடுடெடுத்து படிக்கையிலும்
என்னருகே தானிருந்து
தன் வலியாய் தாங்கிட்டார்
என் வலிகள் அத்தனையும்

முதல் எழுத்துடனே உறவின்          
முகவரி அளித்து - அன்பின்
முழு உருவாய் அன்னையுமாய்
ஆசானுமாய் அரவணைத்தே
அகிலமதில் அடி எடுத்து வைக்க
அரண்மனை அமைந்த அன்புருவே

அடி எடுத்து வைத்த நாள் முதல்
படிகள் பல தாண்டி நான்
பயணிப்பதை பார்ப்பதற்கு - முன்னே
பறி கொடுத்தால் உம்மை
பரி தவிக்கின்றேன் இங்கு

ஈருவாய் இவ்வூலகில்
இன்னல்கள் பல தாண்டி
இணையற்ற அன்பளித்தே
இரவு பகல் எனை சுமந்த
உம் உதிரத்தில் உதிந்தபுத்திர(ரி)ன்-நான்
இவ்வூலகத்தில் என்றும்
உத்தம(மியா)னாய் புகழ்பரப்பி
வாழ்ந்திடுவேன்....

பெண்மணிக்காக..

 கருவறையில் ஆரம்பித்த
அவள் பயணம்
காற்றின் வேகத்தினையும்
விஞ்சியே செல்கின்றது - இந்த
விஞ்ஞான உலகத்திலே

புதிய பொழுதோடு
மலர்ந்திட்ட மங்கையர்கள்
புரிகின்ற செயல்கள் பல
புரியாத புதிராகவே தொடர்கின்றன

அன்பின் ஆழத்தை அளவிடவோ
அளவு கருவியில்லை
பொறுமையின் முடிவுனை
சொல்ல எல்லையில்லை
முடிவிலியாகவே தொடர்கிறது
அவள் பயணம்

அடுக்களையில் கை வண்ணம்
அறிவினிலே அவள் திறன்
அலுவலகத்தில் சொல் திடத்தோடு
சேர்கின்றது செயல் திறனும்

பட்டங்கள் பல எடுத்தே
சட்டங்கள் தனை கொண்டு
பொண்னை பொருள் கொண்டு
சாடிடும் சமூகத்தை
வாதித்து வென்று தினம்
சாதிக்கின்றாள் இன்று

தவறேதும் செய்யாமல்
கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட
பெண்ணினம் புது இறகு முளைந்து
கண்டங்கள் பல தாண்டி
கிரகங்கள் வரை சென்றும்
சிரமமே அறியாமல்
தனி வரலாறு படைத்தே
தன் பயணத்தை தொடர்கிறார்..


உன் மனசு போல....



நான் சந்திக்கும் ஒவ்வொரு 
கடினமான கணபொழுதுகளையும்
எவ்வாறு சமாளிப்பேன்
உன் துணையின்றி...

தடுமாறும் தருணங்களில்
தலை தடவி
ஆறுதல் தரும்
தாயாய் இருந்த நீ
தவிக்க விட்டு செல்வதன்
காரணம் தான் புரியாமல்
புலம்புகின்றேன் பித்தனாய்

உணர்வினை பகிர்ந்து - உண்மை
அன்பினை பொழிந்த - நீ
உதறிட்ட பின்பும் - என்
உடலின் ஓர் அணுவும்
உன் நினைவின்றி அசையாதாம்

என் உடலாயிது - அதில்
உயிர் தான் இருக்கிறதா
உணரக் கூட முடியவில்லை 
ஏனெனில்!
உயிரை ஒப்படைந்து விட்டதால்
எப்பவோ உன்னிடத்தில்..

மரணத்தின் போதும் கூட
உன் மடியே தஞ்சமேன
என் மனதை
மாற்றிட தான்
மார்க்கம் உண்டோ
மாறிப் போன
உன் மனசு போல...

யார் தருவார்?

பெற்றவள் இங்கு
நீண்ட தூரம் சென்றதனால்
நித்தமும் நடங்குதிங்கே
முடிவற்ற பாச போராட்டம்

நிலையற்ற இவ் உலகில்
நிம்மதியின்றி துடிக்கின்றேன்-உண்மை
அன்பு என்ற ஒன்றுக்காய்...!

உறவுகள் என்னை சுற்றி
உறவு கொண்டாடினாலும்
அன்பு என்னும் போலி வேலி போட்டு
வேசம் தனை பாசமாய் காட்டுதிங்கே..

என் சொந்த வாழ்க்கையில்
சேர்ந்திட்ட சோகமிதை
சொந்த பந்தம் சூழ்ந்திருந்து
சீர் செய்யத் தான் முடிந்திடுமா?

பணம் பொருள் பார்த்தாச்சு
சொத்து சுகம் சேர்ந்தாச்சு
இத்தனையும் இருந்தென்ன
உற்றதுணை தானிருந்து-என்
உள்ளத்து உணர்வுகளை
உளமாறபரி மாறும்
உண்மை அன்பை யார் தருவார்?
****************************************************************************

நங்கை உன் கையிலே..!

 பெண் குலத்தின் தலைவியே
பொறுமையின் இலக்கணமே
அன்ன நடை பயிலும் மாதே
அன்பின் பிறப்பிடமே
அழகின் இருப்பிடம் நீ

தனி வழியாம் உன் வழியாம்
கயல் மீனோ உன் கண்ணில்
கொவ்வை பழம் என்றோ
புன்னகை உதட்டிற்காய்
புல்லினம் கூடினவே

கன்னத்தில் குழி அழகு
கரும் கூந்தல் அதில் அழகு
முத்தான மூக்குத்தி
உன் மூக்கிற்கே தனியழகு

முழுமதி போல் முகம் இருக்க - அதில்
மூன்றாம் பிறை வடிவில்
நீள் புருவம்

புனிதம் உள்ள குணவதியே
பூவுலகின் நாயகியே
கண்ணகி நீ வாழனும்
கணவனுக்கு பெருமைகளை சேர்க்கனும்

மாமியார் போற்றனும்
மற்றவர் வாழ்த்தனும்
இல்லறம் சிறக்கவே - நாட்டில்
நல்லறம் பெருகனும்

நாளைய சந்ததி
நன்நிலை பெற்றே
நலமுடன் வாழ்வது
நங்கை உன் கையிலே

நெஞ்சம் பொறுக்குதில்லை.!

நிலைமாறும் உலகில்
விலை போகும் மாதர்
நிலைதனை நினைக்க
நெஞ்சம் பொறுக்குதில்லை

பூத்துக் குலுக்கி
புதுமணம் வீசிற்ற
பூவைதனை பிடுங்கி
புழுதியினில் போட்டதினால் - வாசம்
புழுதிக்கே சொந்தமாயிற்ற
நிலையிதுவோ

வறுமையின் கொடுமையிலே
வயிற்று பசி போக்க
வசதி படைத்தோரிடம்
வயிற்றை நிரப்பிட்ட
நிலையிதுவோ

கோடி பொருளுக்காய்
நாடியே வந்தவன்
கூடியே வாழ்ந்திற்று
கூட்டிக் கொடுத்திட்ட
நிலையிதுவா..

பருவ வயதினிலே
பால் நிலை உணர்விலே
பாதை மாறி போனதினால் - இன்று
பரிதவிக்கும் நிலையிதுவோ..

குறி பார்த்தே பெண்ணை
பொறி வைத்து பிடித்து
பொதியாக்கி - கூறு
விலை கோரியதினால்
உருவான நிலையிதுவா

அற்ப சொத்துக்காய்
ஆயுளை சொர்க்கமாக்கி
நித்தம் நித்தம்
செத்து செத்து பிழைக்கும்
சோகமதை சொல்ல முடியாது
சுவர்களுக்கிடையிலே
சுகத்தை கொடுத்து
சூனியமானது அவர்
தம் வாழ்வு...

மூன்று இதயங்கள்..!

 வஞ்சி அவள் நெஞ்சமதில்
கஞ்சதனமெதுமின்றி
பஞ்சமில்லா அன்பினிலே
விஞ்சியிருந்த அவன் - மண
மஞ்சமதில் மங்கைதனை
மாற்றன் மனையாளாக
மண வாழ்து தூவுகின்றான்
மனதில் வஞ்சமின்றி
விதி வரைந்த பாதையில்
சந்திந்த விழிகள் இரண்டு - இன்று
சதியின் வலையில் வீழ்ந்ததனால்
விடும் கண்ணீரை யார் அறிவார்..,!

முகத்தை அலங்கரித்து
முழு மதிபோல் இருந்த அவள் - அவர்கள்
முடிவை நிராகரிக்க தெரியாமல்
முணுக்கும் இதயமதை
மண்டபத்தின் மூலையிலே
அமர்ந்திருக்கும் அவன் தவிர
அருகில் இருப்பார் கூட
அறிய முடியில்லை..!

சனக் கூட்டம் மத்தியிலே
சந்தோஷ ஊஞ்சலிலே
சாதித்த பெருமையிலே - இவன் கூட
சங்கமித்த இதயங்களின்
சங்கடத்தை அறிந்து விட
சந்தர்ப்பம் ஏதுவுமில்லை..!

விழி வழியே வந்த காதல்
பாதி வழியினிலே போகுமென்றோ
பாசம் தந்து கொல்லுமென்றோ
பழகும் போது புரிந்ததில்லை
மண்டபமே மகிழ்ச்சியிலே
மந்திரங்கள் ஒலிக்கையிலே
மணமகனின் அருகினிலே
மங்கை இவள் தவிப்பதனை
மாற்றிட தான் மார்க்கம் உண்டோ...!

உடலால் வடிவமைக்கப்பட்ட அழகிய வடிவங்கள்.

கன்னி இவள் சாபம்..!

 வண்ண வண்ண புள்ளி வைத்து
வரைந்து சென்ற
வாழ்கை கோலமதை...!
எண்ணாமலே அவன் விட்ட
வார்த்தை என்னும் அம்பு - அவள்
கன்னத்தில் மட்டுமல்ல
இதயத்திலும் உதிரத்தை
ஊற்றெடுக்க வைக்கிறது...!

கருப்பொருளே இல்லாமல்
காரணங்கள் பல கூறி
கதை பேசி மகிழ்ந்ததெல்லாம்...!
கணப்பொழுதில் மறந்திடென
மண முடிக்க  சென்ற
மங்கை தனை பார்த்து
மனம் இறுகி பேசுகிறான்...!

அயலும் உறவும் இணைத்ததினால்
அறிந்தவர் புரிந்தவர் கூடி
பேசி முடிந்திட்ட (சம்) பந்தம் இது...!
சொற்பத்திலே சொந்தமின்றி
போகுமென்று சேர்ந்து வாழ
வந்தவள் மட்டுமல்ல
சொந்தங்களும் எண்ணவில்லை...!

எண்ணங்களெல்லாம்
ஏக்கங்களாயிற்று - அவனுடனான
எதிர்கால கனவு
ஏமாற்றமாயிற்று..
நம்பிக்கையிங்கு நாதியற்று கிடங்கிறது...!

பிரியா நட்பு...!

 சின்ன சின்ன கதை பேசி
சிரித்து மகிழ்வதற்காய்
சென்ற பல பொழுதுகளில்
சேர்ந்திருந்தோம் நாம்...!

சொந்தபந்தம் எதுவுமின்றி
சொந்த கதை பல பேசி
நித்தம் நித்தம் நீண்ட தூரம்
நினைவுகள் பல பகிர்ந்தோம்...!

நோய்வுற்ற நேரத்திலே
நேரம் காலம் பார்க்காது
நேர்த்தியுடன் என்னருகே
நீ இருந்தாய் ஆறுதலாய்...!

உன் சுமைகள் உட் புதைந்தே
என் பாரம் தோள் தாங்கி
ஏற்றம் காண்பதற்காய்
என்னுடனே உழைக்கின்றாய்...!

சோதனைகள் சூழ்ந்து வர
வேதனையால் வேலியிட்டாய்
விளைபயிராம் நட்பிதனை
பாதகமேது இன்றி
பாதுகாப்பதற்காய்...!

பாசமென்னும் பாத்திரத்தில்
வேசமென்னும் உடையணிந்து,
வெறுப்புடனே கதை பேசி
வெட்டி செல்ல நினைத்தாலும்
ஒட்டியே போகிறது
ஓரிடத்தில் உன் பேச்சு...!

உலகங்கள் பல தாண்டி,
உருவங்கள் தடுமாறி,
உறவேதும் இல்லாது,
உள்ளத்து உணர்வாய்,
இணைந்திட்ட எம் நட்பு.
உயிர் பிரியும் வரை பிரியாது..!
****************************************************************
காதல் ஜோடி.!
இரு உள்ளம் தனித்திருந்து காதல் மொழிபேசி
இளமை சில்மிசங்களை தமதாக்கி
இன்பதுன்பம் பகிர்ந்து கொஞ்சிப்பேசி 
இனிய சுதந்திர பறவைகளாய்
இசையாடிடும் ஜோடியே காதல்ஜோடி....!
*****************************
காதல் பரிமாற்றம்.!
தனிமையின் தவிர்பை தவித்து
தம்முள்ளங்களை பரிமாறி..
புன்னைகையும் பூரிப்பமாய்.
புதுவுலகில் பயணிக்க  இரு இதயம்
மலருடன்  மனதையும்  மகிழ்வுடன்
ஒரு இதயமாக்கி காதலை பரிமாறுகின்றன.!
*****************************
  இரு உள்ளங்கள்
அன்பிற்கு அடிபணிந்து  ஆசைகளை வெளிப்படுத்தி
 இன்பங்களை இசைமீட்டி  காதல் உரசலில்
ஊஞ்சலாடுது இரு இதயம் .....!
கட்டி அணைத்திடும் கண்ணாளன் கைகளுக்குள்
குட்டிக்குழந்தையாய் அவன் கையில் அவளின்று...!
*****************************
ஓரு தலைக்காதல்.! 
பக்கத்தில் இருக்கையிலே 
பாசமான அவன் பேச்சு.!
பரிவான அவன் பார்வை .!
என்னை தொட்டு செல்லும் 
அவன் சுவாசக்காற்று.!
வளர்த்தேன் என்னுள் காதலை.!
காலத்தின் கோலத்தால் 
உருவமற்ற என் காதல் 
உணர்வற்று உறங்கியது என்னுள் 
ஒரு தலைக்காதலாய்.!
என் காதல் உண்மை காதல் -  அதலால்
 என்னை சுற்றி காதல் நினைவுகள்
பட்டாம்பூச்சியாய்  என்றென்றம்
என்னுள் வாழ்ந்திடும்.!
 *****************************
காத்திருக்கும் காதல்
காத்திருந்து  காலங்கள் ஓடுதன்பே...!
உன் வருகைக்காய்- என்
பூவிழிகள் தேடுதன்பே...!
உன்னுடனே நான் நடந்த தேசமெல்லாம்
தனிமையிலே நான் நடந்து
தவிப்பினை குறைத்திடுவேன்.!
பிரிவுகளால் தவித்திடினும்
பிரியா நம் காதலுடன் 
காத்திருக்கேன் உனக்காக....!
*****************************
பள்ளி பருவ காதல்
 ஊருகள் பல தாண்டி
உரிய புள்ளி பெற்றதினால்
உயர்தரம் படிக்க வந்தவர்கள்
உணர்வுகள் பல பகிர்ந்தே
உறவு கொண்டாடி மகிழ்கையிலே
உள்ளங்கள் இரண்டெங்கே
உரிமையை தமதாக்கி
புது பந்தத்தில் தமது
பயணத்தை தொடர்கின்றது.

பயணிக்கும் பாதையில்
பள்ள-மேடு பல இருப்பதினால்
பள்ளி படிப்புடனே
பக்குவத்தையும் சேர்ந்தே
துல்லியமாகவே
தூரத்தை இலக்கு வைத்தே
துணித்தே தொடர்தமையால்
தூசாய் போயிற்று துன்பமெல்லாம்..

தேவைகளை தேர்ந்தெடுத்து
தேர்வுகளில் கால் பதிந்து
புரிந்துணர்வை புறத்தே கொண்டு
புறப்பட முன் சிந்தித்து
சிந்தனையை திறனாக்கி
தினமும் வளர்ந்தமையால்
வையத்தில் வழமுடனே
வாழ்கின்றனர் என்றென்றும்..!
*****************************

திசைமாறும் உலகில்.!

தனிமையில் பேசிட 
தயக்கமாய் அழைத்தவளை
தன்னிலை மறந்து ரசித்தவனாய்..!
மகிழ்விலே நனைந்தவனாய் 
மலருடன் வந்தானே
மலர்விழியாழைக்கான...!

அழைத்ததன் நோக்கம்
அவனாறியாமால் ஆகாயமே
அவனுள் அடங்கியதாய் மகிழ்வில்
அசைபோட்டான் கற்பனைகளில்..!

மலருடன் மனதையும் தன்னுள் மறைத்து
மலர்விழி பேச்சுக்காய் மௌனமாய் நோக்கிட
மனதோடு போராடும் அவள் முகம் கண்டு
மகிழ்வினை இழந்தான் மனதுள் இருள்சூழ.!

அவள் முகம் வாடினால் அறிவான் அவள் வலி
அசைவிலே புரிந்திடும் அவள் மொழி
அணைந்திட தோன்றிடும் அவன் கரம்
அனைத்தையும் செய்திட அவன் தேடல்
அவனுக்கு உரிமை உறவாய் அவளாக வேண்டும்...!

அவன் ஏக்கமாய்  நோக்க அவள் பார்வை திசைமாற
அசைபோட்டான இருஉள்ளம் தனிதனியே..!
அதிகம் பேச பாஷையின்றி அழைத்தன் காரணத்தை
அவன்முகாம் பாராமலே செப்பிட்டாள்.!

மனதோடு போராடி  மரணித்த மனதுடன்  போகின்றேன் 
மரணவலியிலும் உன்னை மறவாவலி பெரிதடா
மண்னோடு  மரணிக்க எண்ணியும் மறுக்கின்ற என் மனசாட்சி
என்னோடு போரடி உன்னைவிட்டு செல்லுதடா-என்று 
சொல்லியழ வந்தவளை மனசாட்சி தடுத்திட
தன் கல்யாண பத்திரிகையினை காட்டிச்சென்றாள்..!

தனித்தனியே இரு உள்ளம் தனிமைக்காதலாய்
ஒருவரையொருவாரறியாமல் 
ஒத்தைவழி செல்கின்றனர் ஒருதலைகாதலுடன்
அவனறியான் அவள் காதல் அவளறியாள் அவன்காதல்
யாருமறியார் இவர்கள் காதல்
விதியறிந்த இறைவன் தெரிந்தும் தெரியாமல் இவர்கள் காதல்..!

மலருடன் மனதையும் மறைத்தவனாய்
மனதோடு தோற்று மகிழ்வின்றி அவனின்று.
மணவாழ்வில் மகிழ்விருந்து 
மகிழ்வை ஏற்க மறுத்தவளாய் அவளின்று.!

அன்று.! இன்று!

பகுதி-01
                            ஜெனனி குடும்பத்தில் முத்த பொண்ணு 2 தம்பி 1 தங்கை. பெற்றோர் சொல்லே வேதவாக்காய் ஏற்று நடப்பவள். படிப்பே உலகமென இருந்தாள். கிராமத்தில் பள்ளியில் படித்து  சிறந்த பெறுபேறுகள் பெற்றாள்.  மேற்படிப்பிற்காக நகரம் செல்லவேண்டும். மேற்படிப்பை தொடர முடியுமா என அவள் மனதுள் கேள்விகள் பல குடும்ப வறுமையே அதற்கு காரணம். தந்தை மகளின் படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டினார். அவளின் மேற்படிப்பிற்காக தந்தை தன் கெளரவத்தை தள்ளி வைத்து உடன் பிறப்பிகளிடம் உதவிகேட்டார்  அவர்கள் மறுத்தனர். தந்தை மனம் சோரவில்லை தொடர்ந்து தனது நண்பன் ஒருவனிடம் உதவி கேட்டார் கிடைத்ததும் குடும்பமே சந்தோஷத்தில்.   

                                                                        இருப்பினும் பணத்தைவிட பெரும் பிரச்சனையாக அவள் நகரத்தில் தங்குமிடப் பிரச்சனை நகரத்தில் உறவுகள் யாருமில்லை. பல்கலைகழக விடுதியில் தங்க முடிவுசெய்து மேற்படிப்பை தொடங்க ஆரம்பித்தாள்....

                                           ஜெனனி நகரத்து பல்கலை கழகம் நோக்கி தனது பயணத்தை   ஆரம்பித்தாள்.  முதலாவது  நாள் பல்கலைகழகம் போனால் அங்கு புதிய முகங்களை காண மனதில் ஒருவித பதட்டம் தோன்றியது. இருப்பினும்  சுதாரித்தவளாய்  பல்கலைகழக  வாயில்  நோக்கி  விறு விறுவென நடக்க ஆரம்பித்தாள். அப்போ "ஏய் பெண்ணே..." என ஒர் அழைப்பு கேட்டு திரும்பினால்  3 ம் வருட மாணவர்களான திலக்கும் அவன் நண்பர்களும். பின் அவளை பகிடிவதை செய்ய ஆரம்பித்தனர்.   

     "ஏய் உனது பெயரென்ன?"  என திலக் அதட்டிக்கேட்டான்.
  தனது பெயரை தடுதடுத்த நாவினால் கூறினாள். அவளிடம் மேலும் பலவற்றை அதட்டி அதட்டி கேட்டுகொண்டிருந்தான் திலக் அவன் நண்பர்கள் கைகொட்டி சிரித்துக்கொண்டிருந்தனர். அவனின்  அசிங்கமான கேள்விகளுக்கு பதில் கூறமுடியாமல் அழ ஆரம்பித்தாள். அப்போதும் விடவில்லை 2  மணித்தியாலங்கள் அவளை வெயில் நிற்கும்படி கூறி திலக்கும் நண்பர்களும் மரத்தடியில் அமர்ந்து  புதிதாக வருபவர்களை அழைத்து பகிடிவதை செய்தவண்ணம் இருந்தனர்.  

                                                          1 மணித்தியாலம்  அவள் வெயிலில் நின்றும் அவர்கள் மனம் இளகவில்லை மீண்டும் அவள் அருகில் வந்து திலக் வெறித்து அவள் கண்களை பார்த்தான். அவள் நிலத்தை நோக்கி தன் பார்வைய செலுத்தி அழுதாள்.  அப்போது திலக் கிளாஸ் நண்பன் சந்தோஷ் அங்கு வந்தான். திலக் ஜெனனியை " சந்தோஷ்க்கு உன்னை அறிமுகம் செய்... " என அதட்டினான். அவள் அவனுக்கு தன் விபரத்தை கூறினாள்.  "ஓ நீ கிராமத்து பொண்ணா...?"  என கேட்டு சிறிதாய் சிரித்தான். பின் 10 நிமிடங்களின் பின் நீ வகுப்புக்கு போகலாம் என சந்தோஷ் கூறி அவளை அனுப்பினான். மனதினுள் சந்தோஷ்க்கு நன்றி கூறி நகர்ந்தாள். திலக் கோபத்துடன் சந்தோஷை பார்த்துவிட்டு வகுப்பறை நோக்கி நடந்தான்.

                                                                           வகுப்புக்குள் நுழைந்து தன் இருக்கையில் புத்தக பொதியை  வைத்து விட்டு முகம் கழுவி வந்தமர்ந்தாள். ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். ஜெனனியும் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். " ஹாய்...." கூறியபடி அவள் அருகில் சாரு வந்து  அமர்ந்து கொண்டாள். இருவரும் நட்புடன் அறிமுகப் படுத்திக்கொண்டனர்.  இடைவேளை நேரமும் சாரு ஜெனனியுடன் இணைந்து சாப்பிட்டாள். ஒரு நாளில் இருவரும் நண்பிகளானார்கள் இருப்பினும் ஜெனனி மனதில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது காரணம் சாரு நகரத்தில் பிறந்த வளர்ந்தவள் நாகரீகமாய் ஆடை அணிந்து அழகாக காணப்பட்டாள்.  இவளோ தாவணி போட்ட கிராமத்துப்பெண். சாரு நட்பு  ஒத்துவருமா? என  தன்னுள் கேள்வி கேட்டவண்ணம் இருந்தாள். 

                                                        ஏதுவாயினும் தற்பொழுது சாரு மூலம்  தனக்கு ஒரு ஆறுதல் கிடைத்ததாக எண்ணி  பெருமூச்சு விட்டாள். வகுப்பு முடிந்து அனைவரும் புறப்பட்டனர். சாருவை எற்றிப்போக சாரு அண்ணன் காரில் வந்து நின்றான் "  பாய்...." கூறி சாரு விடைபெற்றாள். 

                                                                                      சாரு விடைபெற்று சென்றதும் மனதில் ஒருவித படபடப்பு தோன்றிட வேகமாக பல்கலைக்கழக விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தாள் சிறிது தூரம் சென்றவள். தன் பின்னால் யாரே வருவது போன்று தோன்றிட திரும்பியவள் திடுக்கிட்டாள் திலக்கும்  அவன் நண்பர்களும்  அவளை பின்தொடர்ந்து வருவதை கண்டு... கண்டும் காணாதவளாய் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அவர்களே  அவள் கிராமத்தை பற்றி கிண்டல் பண்ணிய வண்ணம் தொடர்ந்தனர். அவளை அவர்கள் பின் தொடர்ந்ததற்கான காரணம் அவளின் இருப்பிடம் தெரிந்து கொள்ளவதற்காக என்பது ஜெனனிக்கு புரியவில்லை. விடுதியை சென்றடைந்ததும் திரும்பி பாரர்த்தாள் திலக் விடுதி வாசலில் நின்றுகொண்டிருந்தான்.  ஏன் என காரணம் புரியாமல் மனதில் வினாக்கள் தொடுக்க ஆரம்பித்தாள்...

                                     முதல் நாளே திலக்கின் நடவடிக்கை ஜெனனி மனதில் பயம் ஆட்கொள்ள  ஆரம்பித்தது.  முதல் தடவையாக  குடும்பத்தினரை விட்டு வெகு தூரம் வந்து தனிமையில் இருப்பது   தனக்கு வரப்போகும் பிரச்சனைகளை யும் சவால்களையும் எண்ணி அவள் மனம் கலங்கியது. தனிமையில் அழுதாள் மனம் ஏதிலும் நாட்டம் கொள்ளாமையால் தூங்க ஆரம்பித்தாள். 

                                   அவள் இருக்கும் விடுதியில் ஒரு அறையில் 2 பேர் சேர்ந்து இருக்கலாம்.  இரண்டாவது நாள்  அவள் அறைக்கு புதியளாய் வானதி இணைந்தாள். பின் இருவரும் ஒன்றாக பல்கலைக்கழகம் செல்ல ஆரம்பித்தனர். அப்போதும் திலக் தொல்லை குறையவில்லை. 1 மாதங்களாக பகிடிவதை என்று சாட்டு கூறி ஜெனனியை தனிமையில் கூட்டிச்சென்று. பாசமாக கதைக்க ஆரம்பித்தான் பாசமாக கதைத்தாலும் தான் பாசமாக கதைத்ததாக யாருக்கும் கூறவேண்டாமென மெருட்டவும் அவன் மறப்பதில்லை. இருப்பினும் ஜெனனி முதல் வருட மாணவி என்பதால் பயம் மட்டுமே தனித்து நின்றது அவள் மனதில். 
     
                                                     பல்கலைகழகத்தில் பகிடிவதை காலம் முடிந்தது. சாரு வானதி இருவரின் நட்பும் இவளின் மனதில் தைரியத்தை கொண்டுவந்தது.  நாட்களும் உருண்டோடின. நகரவாழ்க்கைக்கு ஏற்றார்போல் தன்னையும் தன் மனதையும் மாற்றியமைத்தாள். சந்தோஷ் ஜெனனியை எதிரெதிரே காணும் போது மட்டும் நலம் விசாரித்து செல்வான். ஒரு நாள்           "  ' ஜெனனி...... "  என அழைத்த சந்தோஷை நோக்கினாள். அவளை நலம் விசாரித்த மறுகணமே அவன் அவளிடம்    தனிமையில்  திலக்குடன் கதைப்பதை குறையுங்கள்...."    கூறினான் அவள் காரணம் கேட்பதற்குள்   அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான் சந்தோஷ்.

(தொடரும்.....)
" அறிந்தும் அறிமாமலும்
புரிந்தும் புரியாமலும்
மனிதர்கள் வாழ்வு நகர்கின்றது... !
ஒவ்வொருவர் வாழ்க்கையும்
புரிதலின்றி புதிராயானது இன்று....!"

என் தளம் வருகை தரும் உறவுகளுக்கு:- முதல் முதலில் ஒரு தொடர்கதை ஏழுதுகின்றேன் தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துக்களை கூறிச்செல்லுங்கள். உங்கள் கருத்துக்களே என்னை  ஊக்கம் செய்யும்  ஆசானாய் இன்று...

அன்று .! இன்று.!

அன்று .!
கண்ணாடி யன்னலூடே 
பார்வையினை சிதறவிட்டு
முன்னாடி நடந்தவற்றை
தன்  நாடியில் கைவைத்து
தன் தலையெழுத்தை எண்ணி
தனித்திருந்து யோசித்தாள்.!
இன்று.!
முன்னாடியெல்லாம் யன்னலுனூடே
அவள்  கண் நாடி நிற்பது 
தன்னவன்   வருகையினை..
இந்நாளில் அவள் கண்கள் நாடி நிற்பது
கண்ணாளன் வருவானா? இல்லையேல்
காத்திருப்பு தொடருமா?
மனப்பாரம் கூடியே 
மனச்சோர்வில் அவள்.!
அன்று .!
கடற்கரை மணலிலே
இரு கைகோர்த்து நடந்து.!
இம்சைகள் பல புரிந்து
இரு இதயம் பேசிடும் எதிர்கால 
வாழ்வை எண்ணி..
இன்று.!
இருவர் கைகோர்த்து 
இசைந்து நடந்த கடற்கரையில்
இன்னிசையாய் கடற்காற்று 
கீதமாய் அவன் நினைவு
கீறுகின்றது அவள் மனதை...!
அன்று .!
அவளுடன் அவன் இருக்கையில் 
அன்பெனும் மழையிலே
நித்தம் நனைந்தாள் மகிழ்விலே.!
இன்று.!
 தென்றல் வருடையில்
உள்ளத்து நினைவுகளில்
தென்னவன் வருடலாய்
சிலிர்த்திடும் அவளுள்ளம்...!
 அன்று .!
 இரவினிலே தனிமை தேடி
தொலைபேசி வழி அவனை தேடி
செவிவழி அவன் குரல்கேட்டு
செவ்விதழில் புன்னகையும்
சேர்ந்திருக்கும் என்நாளும்.!
 இன்று.!
கட்டுமரமாய் கவலைகள் சுமந்து
பகலெனும் நதிகடந்து
இரவெனும் கரைசேர்ந்து
தனித்திருந்து அழுதிடுவாள்...
யாரறிவார் அவள் துன்பம்.!

அன்றய நினைவுகளை மீட்டிய படி அவள் தன் வேலைகளை செய்து முடித்தாள்.
                     ஜெனனி குடும்பத்தில் முத்த பொண்ணு 2 தம்பி 1 தங்கை. பெற்றோர் சொல்லே வேதவாக்காய் ஏற்று நடப்பவள். படிப்பே உலகமென இருந்தாள். கிராமத்தில் பள்ளியில் படித்து  சிறந்த பெறுபேறுகள் பெற்றாள்.  மேற்படிப்பிற்காக நகரம் செல்லவேண்டும். மேற்படிப்பை தொடர முடியுமா என அவள் மனதுள் கேள்விகள் பல குடும்ப வறுமையே அதற்கு காரணம். தந்தை மகளின் படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டினார். அவளின் மேற்படிப்பிற்காக தந்தை தன் கெளரவத்தை தள்ளி வைத்து உடன் பிறப்பிகளிடம் உதவிகேட்டார்  அவர்கள் மறுத்தனர். தந்தை மனம் சோரவில்லை தொடர்ந்து தனது நண்பன் ஒருவனிடம் உதவி கேட்டார் கிடைத்ததும் குடும்பமே சந்தோஷத்தில்.  
                                                                                இருப்பினும் பணத்தைவிட பெரும் பிரச்சனையாக அவள் நகரத்தில் தங்குமிடப் பிரச்சனை நகரத்தில் உறவுகள் யாருமில்லை. பல்கலைகழக விடுதியில் தங்க முடிவுசெய்து மேற்படிப்பை தொடங்க ஆரம்பித்தாள்....

(தொடரும்......)

வாழ்வில் உதயம் தந்தவளே....

 உயிரானவளே அறியாயோ என்
இதயம் பாடும்  முகாரி ராகத்தை......

உறவுகள் பல இருந்தும்
சொந்தம்கொண்டாட...
சொத்து சுகம் இருந்தும்
சோகம் தீர்ந்து
இன்பம் அளிக்கும்
உன்னத உறவாய்
உயிர் தோழியாய் இருந்த அவள்....

என் உணர்வுக்கு உயிர் கொடுத்து
உரிமைக்கு குரல் கொடுத்து
ஊக்கத்திற்கு உரம் கொடுத்து
உயர்வுக்கு வழி சமைத்த
உன் உணர்வலைகள் ஒவ்வொன்றும்
என் உதிரத்தில் கலந்து -அவள்
என் உள்ளத்தில் அமர்ந்திட்ட
உண்மை நிலைதனை
உடனே உரைத்த விட்டால்
நிலைமை என்னாகுமோ?

என் வாழ்வில்
உதயம் தந்தவளே
உள்ளமது உதிர்ந்திடுமா? அல்ல
இதயம் தந்து என்னுடன்
இணைந்து வாழ்வாளா?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நம் காதல் கதை...

 சொல்லிடவா நீ எனை
சேர்ந்த நம் காதல் கதைதனை...

கல்லூரி காலமதில்
கடைசி மணி அடித்ததுமே
கடைத்தெரு வாயில் நின்று-என்வீட்டு
கடைசித்தெரு வரை
காவலுக்கு வந்து செல்வார்

இடைவழியில் இளைஞர்யாரும்
இம்சை எதும் செய்து விட்டால்
இன்னொரு நாள் காத்திருந்து
இருட்டடி கொடுத்திடுவார்

சந்தர்ப்பம் பார்த்தே
சமூகப் பணி இணைந்து
இன் முகத்துடனே
இனிதே பணி செய்தமையால்-அனைவர்
இதயத்திலும் இடம் பிடித்து விட்டார்

உறவினர் கூடவே
உயிர் தோழிகளும் மட்டுமல்ல
உடன் பிறப்புகளும் இணைந்தே
பெருமிதத்துடனே பெற்றோரும்
காட்டிவிட்டார் நம் காதலுக்கு
பச்சைக்கொடி.....


குருதி தோய்ந்த எம் இனம்

 பார்க்க முடியவில்லை
பாவம் இந்த பாரினிலே - எம்
தமிழினம் படும்பாட்டை
தம்மினம் தரணியிலே
தலைநிமிர்ந்து வாழ்வதற்காய்
தினம் தினம் எத்தனை உயிர்கள் - அங்கே
தம்முயிர் நீர்த்தனர்
அவர் தம் உயிர் தியாகத்தோடு
உறங்கி போயினவா?
தமிழினத்தின் உணர்வுகளும் உரிமைகளும்.

சொல்ல வார்த்தையில்லை
சொந்த நாட்டையே சொர்க்கபூமியாக
செழிக்க வைக்க முயன்ற - எம்
இனம் முண்டங்களாகவும்
முட்கம்பிகளுக்கிடையிலும்
முகவரிகளை இழந்தும்
மூச்சு விடகூட திக்குமுக்காடும்
சோக கதை இதனை...

அபிவிருத்தி என்ற பெயரில்
இன விருத்தி கூட அங்கே
இலவசமாக நடக்கின்றது
பாதுகாப்பு என்ற பேரில்
படையெடுத்து வந்தவர்கள்
பதுங்கியிருந்தே - எம்
உறவுகளின் உயிரை அங்கே
பலியெடுக்கும் பரிதாமம் என்ன?

பணத்திற்கு ஆசைகொண்டு
பகல் கனவை நிஐமாய் கொண்டு
பஞ்சமற்ற வாழ்க்கை இதுவென்று - எம்
பண்பாட்டை மாற்றும் கூட்டம்
படர்ந்து பெருகுதிங்கே..

கல்தோன்ற காலத்தில்
முன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட
மூத்த குடி இன்று
மூர்ச்சையற்று முடிங்கி போகுது
எம் இனத்தின் நிலை கண்டு...


உறவுகள்.....

வாழ்க்கையின் பயணத்தில்
தடம் பதிந்து நடக்கையிலே
உதயமாகின்றன
ஓராயிரம் உறவுகள்.....!
தன் உதிரத்தை உணவாக்கி!
தன் தசைகளை சுவராக்கி!
உயிருக்குள்ளே உயிர் கொடுத்து
ஈரைந்து மாதங்கள் - இன்னல்கள்
பல தாண்டி - பிள்ளைக்கு
உலகத்தை காட்டும் - உன்னத
முதல் உறவாக அம்மா...
தன் வியர்வையை உழைப்பாக்கி
அன்பென்னும் உணர்வை ஊட்டி
அறிவெனும் ஆலயம் அமைந்து
மாற்றம் என்னும் சொல்லை
மாற்றி அமைக்கும்
மாசற்ற உறவாக அப்பா.....!
பிஞ்சு வயதில்
கெஞ்சல் மொழிகள் பேசி
கொஞ்சி விளையாடிட
சண்டைகள் பல பிடித்து
சமாதானம் பல பேசி
அன்பென்னும் சொல்லுக்கு
அட்சய பாத்திரமாக - என்றும்
உடன் பிறந்திட்ட உறவு....
கல்லூரி காலத்தில்
கள்ளமற்று கதை பேசி
துன்பத்தில் துணை  நின்று
இன்பத்தில் பங்கு கொண்டு
இணையற்ற உறவாக
நம்பிக்கை நட்சத்திரமாக
நட்புபெனும் உறவு.....
வாழ்க்கையின் தத்துவத்தை
ஆழமாக படித்து - பல
முகம்களை தினம் சந்திந்து - அதில்
காதல் என்னும் துணை கொண்டு
இரு முகங்கள் இணைந்ததினால்
கணவன் மனைவி உறவு.....
காதலும் காமமும்
இணைந்ததினால்
வாழ்க்கையின் சக்கரத்தில்
மீண்டும் பூமியில் பிறக்கும்
குழந்தை எனும் உறவு.....


காத்திருப்பு....

கற்பனைக் கனவிலே 
காகிதம் வரைகின்றாள்!
 வெட்கம் தடுத்திட  
தலைகுனிந்து சிரித்து
தரனியை நோக்குகின்றாள்...
பிரிந்திட்ட அவனுக்கு பிற 
தொடர்பு ஏதுமின்றி
காகிதங்கள் வரைந்திடும் - இவள்
அவனின் பதில் கண்டு
இன்பத்தில் துளிர்த்திடுவாள்...

காகிதத்தில் பிறந்திட்ட
இவள் காதல்
ஆலமரமாய் வளர்ந்திட
ஆணிவேராய் அவன் துணை
ஆசை நிறைந்த கற்பனைகளுடன்
காத்திருக்றாள்  - அவன்
 வருகைக்காக..

நம் நட்பு....

 நாலு பேர் மத்தியிலே
நலம் கேட்கும் சேதியிலே
நம்மவருக்கு இடையிலேயே
நடக்குது நல் உரையாடல்...

நாட்கள் பல கடக்கையிலே
நற் கருத்துக்கள் பயின்றமையால்
நம்பிக்கையின் அத்திவாரத்திலே - நல்
நட்பு உருவாகுதிங்கே...
நட்பு என்னும் அத்திவாரம்
நாலுமாடி ஆகுகையில்
நாசுக்காய் கதை பேசும்
நம் சமூகம் மத்தியிலே
நாளடைவில் பல கேள்வி
நாளுக்கு நாள் எழுகிறது.
நாம் என்ன செய்ய?

நாட்டில் நடக்குது - பல
நாசகாரியங்கள் - இது
நம்மவர் தவறுமல்ல
நட்பின் பிழையுமில்லை
நாளைய தலைமுறை
நல்வழி நடத்திட
நம் முன்னோர் நகர்த்திடும்
நல்லிசை வீனையின் நரம்பிது - அதை
நல்லிசை சேர்ந்து
நாளும் மீட்டி
நம்பிக்கை ஊட்டி - நம்
நட்பினை வளர்ப்போம்...
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

காதலினால்...

 வருடம் ஒன்று கடந்து
வயது ஒன்று கூடியதால் - நானும்
பருவ வயததைடந்து
பார்ப்பதெல்லாம் ரசிக்கின்றேன்...

பாவையவள் பின் செல்ல
பார்க்கும் கண்களெல்லாம்
பரிகசித்ததினால் என்னை
பருவ வயதினிலே
பலரும் செய்யும் தவறிதென
புரிந்து கொண்டு - நானும்
புறப்பட்டேன் உழைப்பதற்கு....

பகல் இரவு பாராமல்
பிறர் பெருமை பேசாமல்
பொறுமையுடன் உழைத்தமையால்
பெருமையுடன் வளர்கின்றேன்
பறந்து போன சொந்தமெல்லாம்
பந்தம் சொல்லி வந்ததிங்கு - ஆனால்
உற்ற துணை தான் இருந்து
உறுதி மொழி பல தந்து
ஊர் வாயை மூடுதற்காய் - என்
உணர்வுகளுக்கு உரமூட்டி
உடலுக்கு உயிர் கொடுத்து
உலகத்திலோர் உத்தமனாய்
உயர்ந்திட காரணமாய் இருந்த - என்னவளை
உரிமையுடன் அழைக்கின்றேன் - என்
உள்ளத்தில் உள்ள இடம்
உனக்கே உரியதென்று...


என் உணர்வுகளை....

 சுவாசம் தந்து
இதயம் பறித்து சென்ற
இனியவனே!
அறியாயோ ஒரு சேதி
உன் நினைவுகள்
என்னும் ஆகுதிக்குள்
வீழ்த்து துடிக்கும்
தருணங்களில்
என் கண்ணீரின்
ஆழம் அறிந்த
என் "பேனா"
என் உணர்வுகளை
தன் உதிரமாக்கி
கவிதை என்னும்
காவியம் படைக்கின்றது ...

பாசத் தவிப்பு...

 ஐயிரண்டு திங்களாய் - உன்
அகத்தினிலே  தாங்கி
அகிலம் காண வழி சமைத்த 
அன்னையே......
அன்பு காட்டி
அரவணைக்கும் வேளையிலே - தனை
தனியாய் விட்டதினால்
தினம் அழைக்கின்றான் உன்னையே....

ஆறுதல் பல கூறி
அர்த்தங்கள் பல சொல்லி
ஆயிரம் உறவுகள்
அரவணைக்க - அவன்
அருகில் இருந்தாலும்
அந்தனைக்கும் மத்தியிலே
தினம் அழைக்கின்றான் உன்னையே...

பாலோடு பகிர்ந்தது - நீ
பாசத்தை மட்டுமல்ல - நற்
பண்புகளை (யும்) ஊட்டியதால் - அவன்
பாரினிலே பெற்ற புகழ் அத்தனையும் - உன்
பாதம் சேர்ப்பதற்காய்
தினம் அழைக்கின்றான் உன்னையே...

பால பருவத்திலே
பாதி வழியினிலே
பரி தவிக்க விட்டு - நீ
பரலோகம் சென்று
பல வருடம் ஆனாலும் - தான்
பயணிக்கும் வழிகளிலே
பக்க துணை நீயிருப்பாய் என நம்பி
பாசத்துடனே தினம் அழைக்கின்றான் உன்னை.....

 

கன்னியிவள் வாழ்வில்...

 கன்னியவள் வாழ்க்கையிலே
கானல் நீராய் போனதுவோ
கற்பனைகள் பல கொண்டு
கட்டிச் சென்ற காதல் கோட்டை.
பள்ளி பருவமது துள்ளியே
சென்றுவிடும் என்பதினால்
தள்ளியே வைத்திருந்தால்
தன் காதல் சிந்தனையை.

கல்லூரி காலமதில்
காளையர்கள் கற்கும் வித்தைகளில்
காதலும் ஒன்று என்றதினால் - அது
கற்பதற்கு மட்டுமா? அல்ல
கடந்து செல்ல உதுவுமா?
கலகத்திலே அதை
கடந்தே வந்துவிட்டாள்
கடந்துவந்த பாதைகளில்
கண்ட பல காட்சிகளில்
நின்று அவள் ரசித்ததினால் - தன்
நிகழ்கால வாழ்வினிலே
நிபதந்தைகள் பல கொண்ட
நிச்சயத்தினை தான் எடுத்தால்
கை நிறைய பணம் வேண்டாம்
கள்ளத்தனம் வேண்டாம்
சிந்தனையைச் செயலாக்கி
செலவுகளை சிறிதாக்கி
தன்னிலை தான் அறிந்து
தர்மவழி செல்பவனே
தன் வாழ்க்கைத் துணைவன் என
அவள் தரணியெல்லாம் தேடுகின்றாள்

வெள்ளத்தில் தத்தளித்து
வள்ளத்தில் வந்த இவள்
உள்ள தாகத்திற்காய்
பள்ளத்தில் தேடுகின்றாள்
தெள்ளத் தெளித்த தண்ணீர்
ஆனால் அங்கே
தேங்கியே நின்றின்றது
தப்புத் தண்ணீர் 


நண்பனின் வாழ்த்து மடல்....

 எனது நண்பன் கம்ஷன் மலர்கொத்துடன் ( ஆரம்பத்தில் பிளாக் பற்றி தெரியபடுத்தியவர்) கவிதையிலே வாழ்த்தி மடலும் அனுப்பியிருந்தார் அவரின் வாழ்த்து கவியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்...
கவிக்குயிலே - நீ
கணனி உலகில் கால் பதித்து
காலம் ஒன்று ஆனாதுவா?
கள்ளமில்லா உள்ளத்தோடு
கலையுலகில் களமிறக்கி
கன கச்சிதமாய் கருத்துக்களை
கவிதையிலே கணை தொடுத்து
குறி பார்த்து விட்டதினால்
குவளையத்தில் உள்ளவர்கள் - மன
குமுறுல்கள் குவிந்தனவே
உள்ளத்து உணர்வினையும்
உலக நடப்பினையும்
உண்மை நிலை மாறாது
உன் கருத்தில் கவி வடித்து
உலகறிய செய்திடும்
உன் கலை உணர்வினை
காலத்தின் வேகத்திற்கும்
காலநிலை மாற்றத்திற்கும்
கயவர்களின் தூற்றத்திற்கும்
கட்டுண்று நின்றிடாத - காலை
கதிரவன் வரவு போல
காலாதி காலமெல்லாம்
கவி உலகில் - உன் கவி வாழ
கடவுள் துணை வேண்டி
ஹம்சனும் வாழ்த்துகிறேன். 

வாழ்த்தி மடல் அனுப்பிய நண்பன்  ஹம்சனுக்கு நன்றிகள்.
#############################################################################

இணையத்தில் நான்.

இன்று எனது வலைதளம்  வருகை தரும் அனைவரையும் பூங்கொத்து கொடுத்து வருக வருக என வரவேற்கின்றேன்( ஓர் ஆண்டு பூர்த்திக்காக)

2009 இல் இலங்கையில் வசித்து வரும் காலப்பகுதியில்  எனக்கு பிளாக் என்றால் என்னவென்று தெரியாது. என் நண்பன் பிளாக் பற்றி கூறினான். எனக்கும் ஆரம்பிக்கனும் என்ற ஆர்வம் இருந்தாலும் சொந்தமாக கணினி இல்லாமையால் யோசித்தேன். இருப்பினும் எப்படி என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் 2009 வைகாசி தகவல் தொலில்நுட்ப செய்திகள்  வலயத்தை தொடங்கினேன் (பிளாக் பற்றி படிப்பதற்காக ஆரம்பித்த தளம்) 2009 இல் 2 பதிவுகள் மட்டுமே பதிவிட்டேன் அது சோகக்கதையுங்க...

பின்பு கணினி கற்றுக்கொண்டிருந்தேன். அக்காலகட்டத்தில் என் கணவர்  எனக்கு தெரியாமல் என் நண்பன் மூலம் 2010 .01.01 புதுவருட பரிசாக  புதிய Laptop என் வீட்டுக்கு அனுப்பி இருந்தார். சந்தோசத்துக்கு எல்லையே இல்லை. சொந்தக் கணினி கையில் கிடைத்ததும் என் ஆர்வத்தை கூட்டியது படிப்பதற்காக ஆரம்பித்த தளத்தில் பதிவிட தொடங்கியதுடன் 08.01.2010 றோஜாக்கள் தளத்தையும் ஆரம்பித்தேன்.  ஆரம்பித்து இன்றுடன் 1 வருட பூர்த்தி.

ஆரம்பித்த காலத்தில் படித்ததில் பிடித்த கவிதைகளை பதிவிட்டு வந்தேன். பின் 2010.05 இல் விசா கிடைத்ததும் கனடா வந்து சேர்ந்தேன். கனடா வந்த பின் தான் எனது சொந்த முயற்சியில் கவிதை எழுத ஆரம்பித்தேன்  தொடர்கின்றேன்.

கவிதை எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து நண்பர்களாகிய உங்கள் வருகையும் பின்னூட்டங்களுமே என்னை மென்மேலும் எழுத தூண்டின.  என் தளம் வருகை தந்து என்னை ஊக்குவித்த சகோதர சகோதரிகள்  அனைவருக்கும் எனது நன்றிகள் நன்றிகள் நன்றிகள்...  மற்றும் இன்ட்லியல் வோர்ட் போட்டு என்னை பிரபல்ய படுத்திய சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள்.

எனது தள ஓருவருட பூர்த்தியன்று என் சார்பில் 2010 BEST BLOGS Award கொடுத்து சிறப்பிக்கின்றேன். 



நட்பு....

 சுற்றுகின்ற பூமியிலே
சுற்றத்தார் சூழ இருந்தும்
சொந்தங்கள் பலவிருந்தும்
சோகம் சொல்லி சுகம் அறிய
உயிர் அழைக்கிறதே
உற்ற துணை ஒன்றை
அதன் பெயர் தான் நட்பா?

பக்கத்து வீட்டாருடன்
பலகாரம் பரிமாரி
பல காலம் பழகியதால்
உருவானது தான் நட்பா?

பள்ளி பருவமதில்
படிப்பதற்கு மட்டுமன்றி
பல கள்ளத்தனம் செய்ய
பாங்காளி என்ற பெயரில்
பக்கபலமாய் இருப்பதுதான் நட்பா?

பல்கலை புகுந்தவுடன்
பகிடிவதை என்ற பெயரில்
பகட்டாய் பல கதைபேசி
பல முகங்கள் இங்கே
இணைவதுதான் நட்பா?

காலம்மாறி போகையிலும்
பஸ் பயணத்தின் போதிலும்
பகல் திருவிழாவிலும்
பக்கத்தில் இருந்தனால்
ஆனாதுதான் நட்பா?

கடிதத்தில் ஆரம்பித்து
கைபேசியில் கலந்து பேசி
கணனியிலே கண் பார்த்து
கண்டம் விட்டு கண்டம் தாண்டி
கதை பேசி மகிழ்ந்ததனால்
மலர்ந்ததுதான் நட்பா?

காரணங்கள் பல கூறி
கலந்த பல உள்ளங்கள்
நட்பு என்னும் காவியத்தில்
இணையுது இங்கே - அதற்கு
வரையறை இல்லாது
வகுக்குதுவே இலக்கணங்கள்
சாதி மதம் பார்க்காமல்
சந்தர்ப்பம் பார்க்காமல்
தேவையென்று அறிந்ததுமே
தேடியே வந்துதவி
துன்பம் ஒன்று வருகையிலே
தோழோடு தோள் கொடுத்து
உறுதியுடன் இறுதிவரை போராடி
உறுதிமொழி பல கொடுத்து
உற்ற துணை தான் இருந்து - இவ்
உலகம் உள்ள வரை
உண்மை நட்பு
உயிர் வாழ்ந்திடுமே..


பெத்தவங்களுக்காக....

 உச்சரித்தேன் முதல் முதலில்
ஓர் வார்த்தை - தன்
உதிரத்தில் என்
உருவத்தை உருவடித்து
கருவமைத்து இவ்வுலகம்
காண வழி சமைத்த
என் கண் கண்ட தெய்வத்தை
அம்மா என்று - தாம்
உள்ளம் மலர - இவ்
உலகினிலேயே உதித்த இவள்
வையத்திலே வளமுடனே
வாழ்வாங்கு வாழ்திடவே
வாழ்க்கை என்னும்
பயணத்தின் படிகளிலே
படிக் கற்கள் பல தாண்டி
சிகரத்தை அடைந்திடவே - தன்
சிந்தனையை செயலாக்கி
உதிரதத்தை உரமாக்கி
ஊட்டிற்றார் தந்தையுமே - தம்
பெற்ற பிள்ளை
பாரினிலே பரந்து
புகழ் பரப்புவதற்கு
பசி உறக்கம் பாராது
பகல் இரவாய் உழைத்திட்டார் - இவர் (கள்)
பட்ட துன்பம் அத்தனைக்கும்
பாலம் அமைத்து - இவள்
பரந்து புகழ் பரப்பிடுவாள்
பாரினிலே...

புதுவருட வாழ்த்துக்கள்

 அதிசயங்கள் பல நிகழ்த்தி
சாதனை பல புரிந்து
சோதனைகள் வேதனைகளை
ஏற்படுத்தி இனிதே
விடைபெறும் 2010 ஆண்டே
இன்முகத்துடன்
வாழ்த்துச் சொல்லி
வழியனுப்பி வைக்கின்றோம்....
  புத்தொளி பரவி நிற்க
புது வசந்தம் வீசி வர
இன்னல்கள் பறந்தோட
இன்பத் தென்றல் எமை வருட
வல்லமைகள் கரம் சேர்ந்த
வாழ்வெங்கும் மகிச்சி பொங்க
வருக வருக புத்தாண்டே....
 பிறக்கும் புத்தாண்டு  புனிதமாய் 
புதுமை புரட்சியோடு 
உங்கள் வாழ்கையில்
வசந்த காற்று வீசி வளமாக வாழ
இறைவனை வேண்டி.....
பிறக்கும் இப்புத்தாண்டில்
வளங்கள் பல பெற்று வாழ
உளமார வாழ்த்துகின்றேன்
என் இணைய நண்பர்களே.....

உங்கள் தோழி பிரஷா

வாழ்க்கையின் விலை...

 திருமணம் என்பது
இருமனங்கள் இணையும்
பந்தம் என்றார்கள் - இல்லை
அதில் உண்மை...
இஸ்டப்பட்ட இதயங்களை
இணைய விடாது தடுப்பது
கண்களில் கலந்து
கருத்தெருமித்து
காதலால் சேர்ந்தவர்களை
பொன் பொருள் வேண்டி
பேராசை கொண்டு
விலை மதிப்பிட்டு
சந்தையில் விந்திடும்
சங்கடம் இது........... 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

எனதாகி...

அவர்கள் எல்லோரும்
உன்னை
வலுக்கட்டாயமாக
காதலிடம் சரணடையச்
சொன்னார்கள்
நீ என்னிடம்
சரணடைந்த சேதி
தெரியாமல்.....

ஆழிப்பேரலையே..

 ஆழிப்பேரலையாய்
ஆவேசமாய் நீ வந்து...
ஆயிரம் ஆயிரம் உயிர்களை
ஆவேசமாய் அள்ளி சென்றாய்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஓடினும்
ஆறிடுமா எமக்கு நீ தந்த காயம்....

இயற்கையின் விந்தையும் பெரிது
இயற்கையின் சீற்றமும் பெரிதென
இயற்கையாய் புரியவைத்துச் சென்ற
இம்சை அரசனே ஆழிப்பேரலையே....

உறங்கிய உறவுகளை உறக்கத்தில் அள்ளிசென்றாய்
உறங்காத உறவுகளை உறங்காமல் அள்ளிச்சென்றாய்
உன் பசி தீர்த்திட ஏன் உயிர்கள் மேல் ஆசை கொண்டாய்?
பல்லாயிரம் உயிர்களும் உனக்கென்ன பாவம் செய்தனர்?
பரிதாபம் காட்டாமல் பவ்வியமாய் இழுத்துச்சென்றாய்...

ஒவ்வொரு ஆண்டிலும் ஓர் நாள் உன் நாளாய்
ஓசையுடன் வந்து தடம் பதித்து நீ சென்றாய்..
அந்நாள் கறுப்பு நாள் எம்வாழ்வில்
உன்வருகையால்
கணவனை இழந்து விதவையாய் எத்தனை பெண்கள்
மனைவியை இழந்து தனிமையில் எத்தனை ஆண்கள்
பெற்றோரை இழந்து தனிமையில் தவித்திடும் குழந்தைகள்
பிள்ளைகளை  இழந்த சோர்ந்திட்ட பெற்றோர்கள்...
இழப்புக்கள் ஏராளம் கூறிட
வார்த்தைகளில்லை.....
ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்கு...
அஞ்சலி செலுத்திடுவோம்...

முத்தம்

 கனவில் நீ
ஈரப்படுத்திச் சென்ற
என் உதடுகளில்
உன் அன்பு முத்தங்கள்
இன்னும் காயவில்லை

உன்னோடு
நான் கடந்துவந்த
பாதைகளைத் திரும்பிப்
பார்க்கிறேன்

சில சந்தர்ப்பங்களில்
வலித்தாலும்
நீ அவ்வப்போது
தந்த சின்னச் சின்ன
சில்மிஷங்கள்
இன்னும் இதமாக
என்னை உயிர்பிக்கின்றது

அன்புக்குரியவளே
இத்தனையும் தந்த
உன்னால் என்னை விட்டு
எப்படி பிரிந்து செல்ல
முடிந்தது...

என்னுள் காதல்............

 ஆசைகள் என்னை தீண்டியதில்லை
எதிர்பார்ப்புகளை விரும்பியதில்லை
கனவுகளில் விழுந்ததில்லை
தனிமையில் சிரித்ததில்லை
பெண்னே உன்னை காணும் வரையில்....

குளிரும் உன் பார்வையில் - என்
வாழ்வின் அர்த்தம் உன்னில் கண்டேன்
என் உயிரின் காதலே
மெல்லியதான உன் புன்னகையும்..
இனிவான உன் வார்த்தைகளும்
கனிவான உன் காதலும்
பெண்மைக்கு அர்த்தங்கள் கூறும்
அத்தனையும் உன்னிடத்தில்...
அசந்துதான் போனேன்
உன் முதல் தரிசனத்தில்....

இதயத்தின் துடிப்புகள் அதிகரிக்கின்றன
என் தேவதை உனக்காக...
ஆசைகளும் அதிகரிக்கின
எதிர்பார்புகளும் நீள்கின்றன
வஞ்சி உன் கரம் பிடித்து
வாழ்க்கை என்னும் பந்தத்தில் இணைய...


உன் சந்தேகத்தால்

 உன் சந்தேகத்தால்
உடைந்து என் மனம்
உருகுகிறது என் உள்ளம்
ஊமையாய் என் உதடுகள்
உயிரின்றி என் உடல்
ஊசலாடுது தனிமையில்..

நம்பிக்கையாய் இருந்தும்
நம்பிக்கை இழந்தவளாய்..
நாடி நரம்புகள் சோர்கின்றன-இனி
நான் இருந்தென்ன பயன்
இறக்கின்றேன் உனக்காக...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

உன் காதலினால்......

 அன்பே
உன் உணர்வுகளில்
புரிந்து கொள்ள முடியாத காதலை
உன் கவிதைகள்
என்னை ஸ்பரிக்கையில்
புதிதாய் பிறக்கின்றேன் இன்று
என்னில் இனம் புரியாத இன்பம்
ஒட்டிக் கொண்டதாக உணர்கின்றேன்
புதிதாய் ஒன்றை சுமப்பது போல
இதயம் பட படக்க
இரத்த நாளாங்கள் துடி துடிக்க
என் பிறப்பிற்கான அர்த்ததை
இன்று உணர்கின்றேன்
உன் காதலினால்......

தனிமையில் நான்..


 
உன்னருகில் இருக்கையில்-உன்னை
புரிந்திடா என் உள்ளம்
உன் வார்த்தை வரிகள் கண்டு
சிலிர்க்கிறது உள்மனம்-ஆனால்
உணர்வுகளை பரிமாற முடியா
பாவியாய் நான் இங்கு
தனிமையல் தவிப்பது
உறவுகளுக்கு புரியவில்லை....
உனக்கும் தெரியவில்லை....

உன் காதல் ஊரவர்க்கு தெரிந்திட்டால்
உன் அப்பா கெளரவம்
உன் அண்ணா எதிர்காலம்
உன் தங்கை கல்யாணம் என்றெல்லாம்
ஏசிடும் என் அன்னை- என்
உணர்வை புரிந்திட மறுக்கிறாள்

தனிமையில் நீ அங்கு நானிங்கு
தவிப்புக்கள் ஏராளம் 
மனப்போராட்டங்கள் பல்லாயிரம்
மனதோடு மனம் போடும் போராட்டம்
மங்கையாய் பிறந்திட்டால் இதுதான் தீர்வா?
கண்பார்த்து  உன் மடிசாய்த்து
கண்ணீருடன் என் வேதனைகள்
கூறிட ஆசையடா-ஆனால்
கவி வரிகளில் கூறுகிறேன்
கவனமாய் பார்த்திடு கண்ணீர் சிந்தாமல்

ஆதங்கத்தில் என் மனம் இங்கு
ஏதும் தெரியாம உன்மனம் அங்கு
பகிர்ந்துள்ளேன் உன்னிடம்
பதிலை தந்திடு........

மதி கெட்ட பேதை உனக்கு...


 
 என் சுவாசமாய் நீ என்னுள்
உன் பெயர் சொல்லியே
துடிக்கிறது என் இதயம்
புரியவில்லையா பேதையே உனக்கு?
என் விழிகளை பார் அதில்
சுடராய் தெரிவது உன்முகம்
என் உதடுகள் உதிர்க்கும்
வார்த்தைகள் யாவும் உன் பெயரையே..
பாலைவனமான என் வாழ்க்கை
உன் பார்வை பட்டதில்
பூங்காவனமாய் பூத்துக் குலுங்குகின்ற
புரியவில்லையா உனக்கு?
உறங்கினாலும் உறங்கிடாத
உன் நினைவலைகள்
நித்தம் சித்திரைவதைகள் தருகின்றன
தெரியவில்லையா உனக்கு?
உன்னைக் காணும் பொழுதில்யெல்லாம்
ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றனவே
காணவில்லையா நீ?
இந்தனை அதிசயங்களை ஏற்படுத்திய உன்னால்
என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி? 

(இதற்கான பதில் கவிதை அடுத்த பதிவில்)

உன் நினைவுகள்

தேய்பிறையாய்  என் காதல்-ஆனால்
வளர்பிறையாய் உன் நினைவுகள்
என்னுள்  நித்தமும்
வளர்கின்றன....
 

உன் மேல் கொண்ட காதலால்....

 உன்னை நேசித்த பின்
உலகம் அறிந்தேன்..
உண்மை அன்பை புரிந்தேன்
உறவுகளின் போலித்திரைகள் தெரிந்தேன்
உன்னுடன் நடக்கையில்
உணர்வுகள் புரிந்தேன்
உன்னுடன் கதைக்கையில்-மனதில்
உண்டாகும் அமைதியைய் உணர்ந்தேன்

உன் மேல் நான்கொண்ட காதலால்
வாழ்க்கையின் அர்த்தங்கள் பல தெரிந்தேன்
ஆனால்
உன்னை மட்டும் என்னால் 
புரிந்து கொள்ள முடியவில்லை.....
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

துரோகி உனக்காக....

 என் உள்ளமறிந்த நீயே
என்னை விட்டு பிரிந்தாய்
என்னை பிரிந்த உன்னை மட்டும்
என்னால் மறக்கத்தான் முடியவில்லை.. 
உன் நினைவுகள் 
என்னுள் மந்திரமானதால்
துரோகம் நீ செய்தும்
துடிக்கிறது என் இதயம்
துரோகி உனக்காக....

வாழ்வும் இல்லை சாவும் இல்லை...

 சோதனைகள் மட்டுமே சூழலாய்-இதனால்
வேதனைகள் மட்டுமே சுவாசமாய்..
அணைத்திட அன்னை இல்லை...
ஆறுதல் கூற தந்தை இல்லை
கை கொடுக்க சகோதரம் இல்லை
தனிமையில் வேதனைகள்.....

ஆறுதல் சொல்ல ஓர் உயிராய்
அவள் மட்டும் மிஞ்சிட அவளுக்காய்
உயிர்வாழ எண்ணிய என்முன்னே
அவளுடலும் சாய்ந்தது மண் மீது...
போரினால் அனைத்தும் இழந்து
அனாதையாய் நானின்று.....


விழியிலே என் விழியிலே...



 இதய ரணங்களை
ஆற்றுப்படுத்தும்
ஒரு வார்த்தைக்காக
தவமிருக்கும் போதெல்லாம்
வரமாய் வருகின்றன சாபங்கள்....

நீயிட்ட முத்தங்கள்...

  நீண்ட இரவினிலே
நீயிட்ட முத்தங்கள்
நீள்கின்றன நினைவுகளில்
அன்றய இரவு என் சந்தோச இரவு
அன்பான உன் அழைப்பு
அழகான உன் அணைப்பு
அழுத்தமான உன் முத்தம்
அனைத்தையும் மறந்தவளாய்
உன் தோளிலில் குழந்தையாய்...
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

பாவையிவள்...

 பாத்தேன் உன்னை
பார்வையால் கவர்ந்தாய்
பாசம் எனும் வனத்தினிலே
பாலைவன என் வாழ்வில்
சோலைவனமக்கிடுவாய்
சோதைனைகள் தீர்த்திடுவாய்
என்றெல்லாம் வாக்கு தந்தாய்
வஞ்சகர் வார்த்தையிலே
வலுவிழந்த உன் காதல்


காரணத்தை கூறாமல்
பரிதவிக்க விட்டுவிட்டு
பழிவேறு கூறிச்சென்றாய்
பாவம் என்ன செய்தேன்
புரியல என் வாழ்விலே...

காதல் வலியுடன் இவள்..

 கண்ணை கட்டி
கடலில் விட்டால்-உண்மை
காதல் செத்திடுமா?
வெள்ளை உடை உடுத்திட்டாள்
விதைவை என்று ஆகிடுமா?

 மனதில் வாழும் மணாளனுடன்
மங்களமாய் வாழ நினைத்த இவளை
போலி சம்பிரதாயம்
பொட்டகம் கட்டி ஒதுக்கியது
அவளை மட்டுமல்ல
அவள் உணர்வுகளையும்..

ஆருயிரே...!

 இரவின் மடியில்
மதி உன் நினைவில்
வானம் நோக்கி
உன் வருகைக்காக
காத்திருக்கையில்
நிலவென ஒளி வீசி
நட்சத்திரங்களாய் பிரகாசித்து
முகிலினில் துயில் கொள்ள
விளைகின்றாய் ஆருயிரே...!

ஓர் பெண்ணின் கதை....

 அலைகள் தொடும் கரையினிலே
கரை தொடும் அலையினை ரசித்தபடி
கற்பனை அலைகளை  மனமெனும்
கரையினில் மோத விட்டு
காத்திருந்தாள் அவனுக்காய்...


ஒருதலைக்காதலாய்
வளர்த்திட்ட அவள் முடிவை
அவனிடம் சொல்லிட
அழைத்திட்டாள் அவனை
அழைப்பை ஏற்ற அவனுக்காய்
காத்திருந்தாள் கடற்கரையினிலே.......


எதிர்கால வாழக்கையினை
ஏணிபோல் ஏற்றிட இவன் வேண்டும்
என்றெண்ணியவளாய் திரும்பினாள்
எதிரினிலே அவன் நின்றான்.....


அவனை பார்த்தவுடன்
அவசரமாய் எழுந்து நின்றாள்
ஆவலுடன் அவன் நலம் அறிந்து
அமரும்படி அழைத்திட்டாள்......


இடைவெளியுடன் இருவரும்
இரு கல்லில் அமர்ந்திட - அவன்
இரு கண்கள் இயற்கையின் விந்தையை ரசித்திட
இவள் பார்வை அவனை  நோக்கி ஏக்கத்துடன்....


 
  
ஆறு வருடங்களாக -அவன்
ஆருயிர் நண்பனாய் அவள் வாழ்வில்
அவள் உள்ளம் அறிந்தவனாய்....
காலங்கள் ஓடுகையில்....


சுற்றத்தார் பார்வை தப்பாகிட
சுற்றுகிறாள் அவனுடன்  என்றிட
சூறாவளியாய் அவள் மனம்
சுதாரிப்பின்றி  தனிமையில்.....


பிறர்  சொல் கேட்டு
பிறந்திட்ட உடன் பிறப்புக்கள்
பிணைந்திட்ட சந்தேகத்தில்
சொந்தங்கள் நடுவினிலே
பரிதவித்தாள் தனிமையிலே....


உடன் பிறந்த உறவுகளே
உஷ்ணமாய் நோக்குகையில்
உறவுகள் அன்பை விட - நட்பாய்
உள்ளம் அறிந்த அவனை
உடையவன் ஆக்கிட எண்ணினாள்...


தனது விருப்பத்தை
தனிமையில் அவனிடம்
சொல்லிட எண்ணியவள்
அழைத்தால் தொலைபேசியில்
அனுமதியை பெற்றவுடன்
அவளிடத்தில் உற்சாகம்.


அனைத்தும் அறிந்தவன் போல்
அவன் பார்வை அவளை நோக்கிட
அழைத்ததன் காரணத்தை
அன்பாக வினவினான்..


மோதிய கற்பனைகளை
மொத்தமும் மறந்தவளாய்
உதடுகள் தடுதடுக்க
கண்களில் ஆறுபோல்
கண்ணீர் ஊற்றெடுக்க...
நடந்தவைகளையும்
 நடக்க வேண்டியவகளையும்
நாவு தடுதடுக்க  கூறிமுடித்தாள்...


சில நொடிகள் மெளனமாய்
சிந்தனையில் மூழ்கியவன்....
மெளனம் கலைந்தவனாய்
தலை நிமிர்ந்து அவளை நோக்க
அவள் பார்வை  முடிவை வினவ
தன்னம்பிக்கை ஊட்டியவனாய்
தன் முடிவை செப்பினான்.....


தூற்றுவார் தூற்றட்டும்
தூறலில் முளைத்த செடியாய் -எம்
வாழ்வை  தொடருவோம்
தீர்க்கமாய் தன் முடிவை
செப்பினான் அவளிடத்தில்....


  வீண்பழி கூறியோர் வியந்திட
வாழ்ந்திடுவோம் எனும் அவன்
வார்த்தை அவள் மனதில் நம்பிக்கை
வார்த்திட  பெருமூச்சை விட்டபடி
அவன் தோளில் அவள் சாய்ந்தாள்.....

நட்பு...

நினைக்கும் பொழுதிகளில்
கண்முன் தோன்றி
தவிக்கும் பொழுதுகளில்
தலை தடவி
ஆறுதல் சொல்லி
பாசம் என்னும்
செடியை வளர்த்து
சொந்தம் என்னும்
உறவை கொடுத்து
இன்பம் என்னும்
உணர்வை கொடுத்து
உயிரிலும் மேலான
நட்பைக் கொடுத்து
நட்சத்திரமாக
பிரகாசிக்கும் தோழியே
நீ வேண்டும் என்
வாழ்வின் எல்லை வரை...
ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ

எல்லாம் கனவாக போச்சு.......

 அன்றொரு நாள்
பூத்துக் குலுக்கும்
பூங்காவனத்தில்
நான் மட்டும் தனிமையில்
என் நினைவலைகளை
அவிழ்ந்து விட்டு
பெரு மூச்சோடு நான்...

எங்கும் நிசப்தம்
திடீரென...
யாரோ என்னை
அழைப்பது போல
நினைவுகளுக்கு ஓய்வு கொடுத்து
கூப்பிட்ட ஓசையை நோக்கி
பார்வைச் செலுத்தினேன்
என் கண் முன்
ஒரு அழகான தேவதை
ஒரு கணம் சொக்கி தான் போனேன்
எனக்கு இப்படி ஒரு அதிஷ்டமா...

மொட்டொன்று அவிழ்ந்து
இதழ் விரிப்பது போல
கட்டழகி உதட்டில்
புன்னகைகளை சிந்துகின்றாள்
என் பெயர் சொல்லி அழைத்து
உறைந்து போய் இருந்த என்னை
தான் அருகில் இருப்பதை
தெரியப்படுத்துகின்றாள்.

ஏதோ நானும் சுதாகரித்துக் கொண்டு
என் வினாவை தொடக்கும் முன்- அவளோ
தூறலின் பின் பெய்யும்
பெரும் மழையென
தன் மனதில் உள்ளவைகளை
கொட்டித் தீர்க்கின்றாள்.


'அவள் இதழோர புன்னகை
குறு குறு பார்வை
படபடக்கும் உன் இதயம்
இவற்றுக்கு முன்னால்
பறந்து தான் போகின்றேன்
பட்டாம் பூச்சியென"
என் கற்பனைகள்...

அவளும் காதலலை சொல்ல
நானும் அதனை ஆமோதிக்க
பரவசமாக நகர்கின்றது நாளிகைகள்
நேரங்களும் தேய்கின்றது
நெருக்கமோ அதிகரிக்கின்றது.
அவளோ நாணத்தில்
நானோ மயக்கத்தில்
சொர்க்கத்தை பிரசவிக்கும்
தருணத்தில்..
யாரோ என்னை 
தட்டுவதுபோல் உணர்வு
திடுக்கிட்டு விழிக்கின்றேன்
எல்லாம் கனவாக போச்சு..

உன்னைக் காதலிப்பதால்....

 இரவின் மடியில் நிலவின் ஒளியில்
நிழலாய் விழுந்த மலரே...
உன் கவிதை மொழியில்
கவலை மறந்து இனிது
துயிலும் குயில் நானே...
பசிக்கும் வயிறும் உன் சிரிப்பைக்
கேட்டால் உணவை வெறுக்கும் தானே...
குருடர் கூட ஒளியைப் பெறுவார்
உன் விழியின் அருகில் நின்றாலே...
ஊமை கூட வாயைத் திறப்பான்
உன்இனிய பெயரைக் தான் சொல்ல..
உன்னை படைத்த பிரமன் கூட
ஒடி வருவான் உன் பின்னாலே...
இத்தனை வர்ணிப்பும் உனக்கு
கிடைத்திருப்பது என்னாலே...
அத்தனைக்கும் ஓர் காரணம்
நான் உன்னைக் காதலிப்பதனால் தானே........


மானசீக காதல்....

 உன்னை மறக்கத்தான் நினைக்கிறேன்
ஆனால் மறக்கமுடிவில்லை...
உன்னை வெறுக்கத்தான்
கோவமாய் நடிக்கிறேன் 
வெறுக்க முடியவில்லை....
உன் பேச்சு வன்மையால்
என்னைக் கவர்ந்தாய்...
உன் ஆசை வார்த்தையில்
என்னைக் கொன்றாய்....
நீ என்னை வர்ணிக்கும் போது - நாணம்
என்னைக் கட்டிப் போடுகின்றது....
என் பார்வையில் நீ தோன்றுகிறாய்
என் சுவாத்தில் நீ கலக்கிறாய்
என் எண்ணங்கள் உன் நினைவால்
தடம் புரள்கின்றது....
நீ என்னைக் காதலிக்கிறாய் என்று
என்னால் உணர முடிகிறது..
நினைப்பது சுலபம் மறப்பது கடினம்
என்று எனக்கும் புரிகின்றது...
நினைப்பது நடக்காது என்று தெரிந்தும்
நாம் காதலிப்பது எப்படி?
எம் காதல் கரையினைத் தாண்டும் முன்
அதற்கு ஒரு அணையப் போடுவோம்..
உன்னையும் உன் காதலையும்
என்றும் இரகசியமாகக் காதலிக்கிறேன்
என்றும் என் நினைவில் நீ வாழ்வாய்...

என் அன்னை

சுமையாக வந்த என்னை
சுகமாக ஏற்ற தாயே
உன்னை உருக்கி என்னை
வடித்த சிற்பி நீயே
உன் பசியை மறந்து
என் பசியை போக்கியவளே
நாம் அம்மா என்று அழைக்கையில்
அடிவயிறு குளிர்ந்தவளே
முதல் அடி  எடுத்து வைக்கையில்
என்னை ஆயிரம் முத்தமிட்டு
அரங்கேற்றம் செய்தவளே
உனக்கு அபிஷேகம் செய்தாலும்
என் அன்னை உனக்கு
நான் செய்யும் நன்றி
போதாதம்மா.....
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

உறவின் வலிமை

 இன்று நானாக நானில்லையே
ஓயாத உன் நினைவலைகள்
என் இதயத்தில் போதுகின்றன.
கவலைகள் ஆட்கொள்ளும்
தருணங்களில் கவிதைகள்
பிறக்கின்றன என்னுள்
அந்த கவிதையிலும்
நீயே வாழ்வதால்
முடிவின்றி தொடர்கின்றது
உணர்வுக்கும் அன்புக்குமான
போராட்டம்..
நீர்க்குமிழ் போல் நிலையில்லாத
இந்த வாழ்க்கையில்
எனக்கும் உனக்கும்
ஏன் இந்த பாச பிணைப்பு...
நீயும் நிம்மதியில்லை
நானும் நிம்மதியில்லை
ஏன் இந்த
பாச போராட்டம் நமக்குள்
விடையில்லா இவ் உறவுக்கு
முற்றுப் புள்ளி வைக்க
முயற்சிக்கின்றேன்
முடியவில்லை என்னால்....

கனவு காதல்....

பிரிவதில்லை காதல் என்றாய்
பின்னர் பிரிவை மட்டும்
ஏன் எனக்கு
வலியாய் தந்தாய்?
நிஐங்கள் அழிவதில்லை என்றாய்
என் நிஐ அன்பை
இன்னும் ஏன்
உணர மறுக்கிறாய்?
கனவுகள்
நிஐமாவதில்லை தான்..
ஆனால்
நிஐங்களைவிட
கனவுகளையே நான்
அதிகம் விரும்புகிறேன்
ஏன் தெரியுமா?
கனவில் தான்
நீ என்னோடு
நீண்ட தூரம் பயணிக்கிறாய்
என்பதால்!

எல்லாம் நீயாய்!

 மறந்துவிட நினைக்கின்றேன்
என் நினைவெல்லாம் நீயாய்..
வெறுத்துவிட நினைக்கிறேன்
என் விருப்பமெல்லாம் நீயாய்...
விலகிவிட நினைக்கிறேன்
என் நிழலெல்லாம் நீயாய்!
ஆனால்
முடியவில்லை என்னால்.

பிரிவின் தருணம்.....

 காதல் என்னும் இன்பத்தினை
உணர வைத்த ஓர் இதயம்
ஏனோ தெரியவி்ல்லை
துடிக்க மறுக்கின்றது
எனக்கும் சேர்ந்து....

காய்ந்த காயப்பட்ட
என் இதயத்தை விட்டு
பறந்து செல்ல
நினைத்து விட்டாய் நீ
பரவாயில்லை
பறந்து செல் கிளியே...

பாலாறும் தேனாறும்
பாய்ந்தோடும் நதிகளின்
அருகில்,
பூக்களால் நிறைந்த வழியும்
நந்தவன சோலையில்,
பசுமையான இதயத்தில்
நிரந்தரமாக அமர்ந்து கொள்
உன் இனிமையான வாழ்வுக்காக.....

காதல் என்னும் ரணத்தினால்
செல்லரித்துப் போன
இதயமாயிற்றே.
எஞ்சியிருக்கும் நாட்களை
உன் நினைவுகளின் ஸ்பரிசங்களோடு
காலத்தை கடத்தி விடுவேன்..

காயப்பட்ட என் இதயத்தில்
காதல் என்னும் போர்வையில்
ஓய்வு கொண்ட பட்சியே,
புது புது அர்த்தங்களை
என்னில் உணர வைத்த
உன் உறவினை,
உயிர் மூச்சு உள்ளவரை
மறக்க மாட்டேன்...

தூக்கமின்றி தவிக்கிறாள்....

உன் நினைவுகளால் 
பிணையப்பட்டு 
இவள் இன்று
தூக்கமின்றி தவிக்கிறாள்.

தூக்கமின்றி தவிக்கும்-உன்
தூயவளுக்கு உன் பதில்
தூது அனுப்பிடு கனவிலாவது....

 உன் நினைவு மெத்தையில்
உல்லாசமாய் தூங்கட்டும் 
VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV

தூதாக கவிதைகள்

கவிதைகள் வாடுகின்றன
உன்னை காண ஏங்குகின்றன.
பல கவிதைகள் எழுதுகின்றன
பயந்தால் மடிகின்றன.
தொலைத்து விடாதே
எனது கவிதைகளை
தொலைந்தால் தொலைப்பது
கவிதையல்ல...
என் உணர்வின் ஆதாரங்கள்
ஏதோ புரியவில்லை
வெகுவிரைவில்
உன்னை சேர்ந்து விடலாமென
நினைக்கின்றன கவிதைகள்.

உன் பிரிவால்..

 என் நெஞ்சே நீ எங்கே
உன்னைக் காணாமல்
என் இதயம் அழுகிறது.
கண்கள் கண்ணீரை தினம்
இங்கு வடிக்கிறது.
வீசி வரும் காற்றை பிடித்து - உன்
முகவரி கேட்டேன் கிடைக்வில்லை
வெண்ணிலவை அருகில் அழைத்து
உன் முகம் தேடினேன் தெரியவில்லை
உன் குரலென்று நான் ஓடி வந்தேன்
அது குயிலென்று தெரிந்தும் வாடி நின்றேன்
அன்பே என் அமுதே நீ எங்கே
கண்னே என் நெஞ்சே நான் இங்கே
நிஐம் உன் நினைவால் நிழலாகின்றது
நிழல் உன் நினைவால் நிஐமாகிறது
பாவையே என் போதையே
ஏன் நீ என்னை விட்டுப் பிரிந்தாய்
அதனால் நான் இன்று கல்லறையில்....

சாபம் பெற்ற மங்கை

இனிய நம் காதல் நினைவுகளை
இசையாக மீட்டுகின்றேன்
இனியவன் செவிகளுக்கு
இனியவளின் தூதாக....

 தண்ணீரில் மீனைப்போல் நானிங்கே
கண்ணீரில் நீந்திடும் பெண்ணானேன்..
கண்ணாளன் நீயின்றி நானிங்கே
முள்ளில்பட்ட சேலையானேன்.

வலிகளுடன் வாழ்ந்திடும்  
வரம்  வேண்டி வந்தேனோ???
வஞ்சி என் வாழ்வின்று 
வஞ்சகர் கையினிலே
வந்து என்னை மீட்டு செல்
வலிகள் நிறைந்த கனவுகளுடன்
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக....

ஆழமான நட்பு ....

 பகலினை விழுங்கி
இரவினை பிரசவிக்கும்
இயற்கையின்
விந்தையான நேரத்தில்
சில்லென்று வீசும் காற்று
கரையினை தொட்டு
ஆர்ப்பரிக்கும்
அலைகளின் ஓசை
புதர்களின் மறைவில்
காதலர்களின்
முத்தத்தின் சத்தம்
அங்காங்கே காதல் ஜோடிகள்
இருவர் மட்டும் வெட்டவெளியில்..
அவன் பக்கத்தில் அவள் 
கண்ணீரை அருவியாக கொட்டுகிறாள்
சமுகம் அவர்களை ஏளனம் செய்தது
கள்ள காதல் என்று..
யாருக்கு புரியும் - அவள்
கண்ணீரின் வெளிப்பாடு
ஆழமான நட்பு என்று...

வசியகாரா....

 ஏன் என் கண்னில் பட்டாய்..
ஏன் நெஞ்சில் புகுந்தாய்...
ஏன் காதல் மொழி பேசினாய்....
கலங்குதடா என் நெஞ்சம்
கானல் நீராகும்
என் காதலை எண்ணி....

தனிமையாய் இருந்திருந்தால்
தவிப்புகள் குறைந்திருக்கும்...
உனக்கும் சேர்ந்து
என் இதயம் துடிப்பதால்
கனக்கிறது என் மனம்.

நிமிடங்கள் யுகங்களாக மாற
சுட்டெரிக்கும் உன் நினைவுகள்
இடிகளாக இதயத்தை தாக்க
முயற்சிக்கின்றேன் நானும்
முடியவில்லை மீள..

வந்துவிடு வந்துவிடு
வசந்தங்களாகட்டும்
என் வாழ்வு
உன் வருகையினால்.....
FFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFF

போர்க்களமாய் என் வாழ்வு........

 எண்ணிட முடியா  சோதனைகள்
ஏக்கம் நிறைந்த  வேதனைகள்....
ஏன் பிறந்தேன்
ஏன் வளர்ந்தேன்  இம் மண்ணில்...

அன்புக்கு ஏங்கினேன்.....
அறிவை தேடினேன்....
அணைத்திடும் உறவுகளை தேடினேன்
அனைத்தும் அன்னியமாய் இன்று
அங்கலாய்க்கிறது என் மனம்...

பட்டினியால் பல காலம்-மரத்தடியில்
படுத்துறக்கம் சில காலம்..
பயமே வாழ்வாக 
பார்த்திருந்தேன் வானமதை...

 போர்க்களமாய்  என் வாழ்வு
போராட்டத்தால் சீர்குலைந்து-இன்று
போராடுகிறேன் மறுவாழ்வுக்காய்
போரட்டமே வாழ்வாகி  போனதிங்கு...

உறவிருந்தும் உதவியின்றி
ஊமையாய் நானிங்கு...
உயிருடன் ஊசலாடுகிறேன்
உயிரற்ற ஜடமாக.....

இன்று

உயிரே நீ என்றாள்
உண்மையா என கேட்க
நீ இன்றி நான் இல்லை
யார் என்னை தடுத்தாலும்
என் இதயம் நீயே என்றாள்
ஆனால் இன்று
அவளோ மணவறையில்
நானோ கல்லறையில்......

கனவுகள்

"உன்னோடு ...
வாழ வேண்டும் என்ற
எண்ணத்தில் ..
நான் உனக்காக
கட்டிய கனவுகள் பல
இன்று அவை
மண்ணோடு மண்ணாக ...
எனை பார்த்து சிரிக்கின்றன..
சிரிப்பது
என் கனவுகள் மட்டுமல்ல
சில உறவுகளும் தான்.."

மானுடா!

 வேதங்கள் நான்கு...
பூதங்கள் ஐந்து....
நாதங்கள் ஏழு....
மாதங்கள் பன்னிரண்டு...

இத்தனையும் இருந்தாலும்
பித்தனாம் மனிதனிடம்
எத்தனையோ பேதங்கள்....
எத்தனையோ பாவங்கள்....
அத்தனையும் மானுடத்தை
ஆட்டி வைக்கும் சாபங்கள்....

நண்பர்களே வாருங்கள்...
நேசக் கரம் தாருங்கள்...
நட்பென்னும் ஒளி வீசி
இருள் துடைப்போம் வாருங்கள்...

முதல் பார்வை

முதல் தரிசனத்திலே
என் விழிகளுக்குள்
புகுந்து கொண்டவள் நீ..
உன் கண்களின்
ஏக்கப் பார்வையும்,
மெல்லிய புன்னகையும்
எனக்கு மட்டும்....
என் மனதில் பதிந்த
உன் நினைவுகள்
மறையாது என்றென்றும்!