ஞாயிறு, 11 டிசம்பர், 2011

அவர்களிடம் நமக்கு எதுக்கு வம்பு


அவர்களிடம் நமக்கு எதுக்கு வம்பு







இரண்டு குடி காரர்கள் நடு ரோட்டில் நின்று கொண்டு
பயங்கர சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.



எதற்கு.........


மேலே வானத்தில் ஒருப்பது சூரியனா ? சந்திரனா?
என்று கடும் வாக்கு வாதம்.


ஒருத்தன் சொல்கிறான் மேலே இருப்பது சூரியன் என்று!


மற்றவன் சொல்கிறான் மேலே இருப்பது சந்திரன் என்று


இதனால் இரண்டு பேருக்கும் கடும் வாக்கு வாதம்


அப்பொழுது அந்த வழியாக ஒருவர் வருகிறார் ,அதனைப்
பார்த்த ஒருவரும் சரி அவரிடமே நியாயம் கேட்போம்
என்று அவரை அருகில் அழைத்தார்கள்


அவரும் என்னவென்று கேட்க ..............


நீங்களே சொல்லுங்கள் மேலே இருப்பது சூரியனா?
அல்லது சந்திரனா ? என்று கேட்க


அவரும் மனதுக்குள் (அடப்பாவி பட்டப்பகலில் 
மேலே இருப்பது நிலாவா இல்லை சூரியனா என்று
கேட்கிறாங்களே ,அவர்களிடம் எதற்கு வம்பு என
நினைத்து . அவர்களிடம்


எனக்கு எப்பிடிங்க தெரியும் ,நான் வெளியூருங்க என்று
சொல்லி எஸ்கேப் ஆகிட்டார்.


இது எப்பிடி இருக்கு ?!!!!




எப்பவோ படித்தது ,மனதுக்கு பிடித்தது............






போகத்தின் அடையாளமாக - பெண்ணைப்
புல்லர்கள் பார்க்கின்ற தேனோ ?


போகின்ற வருகின்ற மங்கையர் செவிகூசப்
புலம்புதல் ஆண்மையென்பாரோ ?


இதைப் பொருமையாய்ப் பார்ப்பதே ஊரோ


தாய் தந்தை வாய்க்கு பயந்து -கொண்ட 
தாரத்தை விடுபவன் பேடி !


தாரத்தின் சொல் கேட்டு 
ஈன்றோரைக் கைவிட்டு 


தர்மம் அழிப்பவன் பாவி !- இந்த 
தடுமாற்றம் அற்றவன் ஞானி.








நன்றி

சிரித்து வாழ வேண்டும்


சிரித்து வாழ வேண்டும்





கேரட் சாப்பிட்டா கண் நல்லா தெரியும்னு டாக்டர் சொல்லியிருக்காரு
அதனால் தான் இப்ப நான் கேரட் சாப்பிடுகிறேன்


நீங்க சாப்பிடுறது கேரட் இல்லை , முள்ளங்கி


ஆப்ரேசன் பண்ணினா பிழைக்க முடியுமா டாக்டர் ?

நான் பிழைக்கிறதே அப்ரேசன் பண்ணித்தானே !




வயித்து வலி தாங்க முடியல டாக்டர் , தற்கொலை பண்ணிக்
கொள்ளலாம்னு கூடத் தோணுது டாக்டர்

அதான் ஆப்ரேசனுக்கு தேதி குறிச்சாச்சே , அதுக்குள்ள 
ஏன் அவசரப்படுறீங்க


நேத்து ஏன் டாக்டர் நீங்க ஹாஸ்பிட்டலுக்கு வரலே?

ஜுரம் , அதான் வரலே !

எனக்கும் தான் ஜுரம் , நான் வரலியா ?


நீங்க எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கனும்

எங்க வீட்ல நாலு டம்ளர் தானே இருக்கு டாக்டர்



என்னது ஆப்ரேசனுக்கு முன்னாடி பேசண்ட் நெத்தியில் 
கத்தியால கோடு கிழிக்கிறாரே டாக்டர்

அது பிள்ளையார் சுழி


டாக்டர் என் இரண்டு கண்ணும் உறுத்துது

எப்போ இருந்து

பக்கத்து வீட்டுக்காரி புதுசா வைர நெக்லஸ் வாங்கினதிலிருந்து





டாக்டர் வாய் நாறுது

எப்போ இருந்து

நீங்க பேச ஆரம்பிச்சதிலிருந்து



என்னோட ரிப்போர்ட்டை நர்ஸ் ஏன் நக்கிப் பார்க்கிறாங்க ?

சுகர் இருக்கான்னு செக் பண்றாங்க





உங்களுக்கு எப்போதிலிருந்து  நடுக்கம் இருக்கு ?

கல்யாணத் தேதி ஞாபகமில்லை டாக்டர்



அந்த டாக்டர் படிப்படியா தான் மருந்து கொடுப்பார்

அப்பிடியா!

ஆமாம் , தூக்கம் வரவில்லைன்னு அவர்கிட்டே போனா , மொதல்ல
கொட்டாவி வர்றதுக்கு தான் மருந்து கொடுப்பார்



டாக்டர் நீங்க ஒரு காரியம் பண்ணனும்

ஆப்ரேசன் மட்டும் தான் நான் பண்ணுவேன் , காரியம் எல்லாம் 
நீங்க ஐயரை வச்சுத்தான் பண்ணிக்கனும்

தோணுகிறது

யோசித்துப்பார்க்கையில்
அது உண்மை என்று தான்
தோணுகிறது.

எப்போதும் வேண்டும் என்று கூறும் ஒன்று
எப்போதும் வேண்டாம் என்று கூறும் ஒன்று
பரவாயில்லை,
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறும் ஒன்று

ஆக மூன்று மனதுகள்
சரிதானே ?
ஆம் சரிதான்
என்று கூறியது
நான்காவது மனது.





திண்ணை'யில் வெளியான கவிதை





  
சிலந்தி வலையில்
சிதறித்தெளித்த
மழைத்துளி
சிறைப்பட்டுக்கிடந்த
சிலந்தியின் கால்களையும்
நனைத்திருந்தது ஈரம்.



குடித்துவிட்டுக்கீழே வைத்த
உள்ளிருப்பவை வெளித்தெரியும்
கண்ணாடிக்குவளையில்
அடியிலிருந்து மேலே
வந்த மீதமுள்ள நீர்
சிறு பாசிமணிகள் போல்
அதன் சுவரில்
ஒட்டிக்கொண்டிருந்தது
கண்ணாடிக்குள்ளும் ஈரம்.



அடித்துப்பெய்த
மழையின் சாரல்கள்
என் ஜன்னல் கம்பிகளிலும்
தொக்கி நின்று
கொண்டிருக்கின்றன.
இரும்புக்கம்பிகளிலும் ஈரம்.