திங்கள், 12 டிசம்பர், 2011

எப்போதும் என்ன நினைப்பு? ஆணுக்கு செக்ஸ் ; பெண்ணுக்கு உணவே பிரதானம்


எப்போதும் என்ன நினைப்பு? ஆணுக்கு செக்ஸ் ; பெண்ணுக்கு உணவே பிரதானம்

 

உணவுக்கே முக்கியத்துவத்துவம் தருவதாக தெரிவிக்கிறது அந்த ஆய்வு முடிவு. அதேசமயம் ஆண்கள் அடிக்கடி செக்ஸ் பற்றிய நினைப்பிலேயே ஆழ்ந்திருப்பதாகவும் அந்த ஆய்வு முடிவு குறிப்பிட்டுள்ளது.

ஒகியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவ இயல் பேராசிரியர் மேற்கொண்ட ஆய்வு முடிவில், ஆண்களுக்கு ஏழு செகண்டுக்கு ஒருமுறை செக்ஸ் பற்றிய நினைப்பு ஏற்படுவதாகவும் ஒரு வாரத்திற்கு 8 ஆயிரம் முறை செக்ஸ் பற்றி சிந்திப்பதாகவும் கண்டறிந்துள்ளார்.

ஆண்களுக்கு ஆசை அதிகம்

163 பெண்கள் மற்றும் 120 ஆண்களிடம் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முறையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களிடம், அத்தியாவசியமான உணவு, தூக்கம், செக்ஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது நாளொன்றுக்கு சராசரியாக 19 முறை செக்ஸ் பற்றி நினைப்பதாக ஆண்கள் தெரிவித்தனர். ஒருசில ஆண்கள் நாளொன்றுக்கு 388 முறை செக்ஸ் பற்றி நினைப்பதாகவும், அதைப்பற்றி பேசுவதாகவும் தெரிவித்துள்ளனர். உண்ணும் உணவு பற்றி 18 முறையும், உறங்குவது பற்றி 11 முறையும் சிந்தனை எழுவதாக தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு உணவு பிரதானம்

இளம் பெண்கள் நாளொன்றுக்கு 15 முறை உணவு குறித்து சிந்திப்பதாகவும், செக்ஸ் பற்றி 10 முறை சிந்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஒரு சில பெண்கள் மட்டுமே நாளொன்றுக்கு 140 முறை செக்ஸ் பற்றி சிந்திப்பதாகவும், அதைப்பற்றி பேசுவதாகவும் தெரிவித்துள்ளனர். பசியின் போது உணவைப் பற்றியும், சோர்வின் போது உறக்கத்தைப் பற்றி சிந்திக்கும் இளைஞர்கள் செக்ஸ் பற்றி அநேக நேரங்களில் சிந்திப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவு ஆங்கில மருத்துவ இதழ் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

according:

வா போவோம்


வா போவோம்
வழி நெடுகப் பேசிக்கொண்டே...

நீ பிறக்க-
நீண்ட
நெடுநாள் காத்திருந்தோம்,
நீயோ..
காத்திருப்புகளுக்கான
மொத்த அர்த்தம்,

மொத்தக் கனவுகளின்
ஒற்றைப் பலன்!

யாமும் ஏனையோரும்
நின்னைப் பார்த்திருக்க-
நீயோ...
உன்றன் முதல் விழிப்பில்- உன்
அன்னை பார்த்தாய்-பின்
என்னைப் பார்த்தாய்
புன்னகையோடு உறங்கிப்போனாய்.

பிஞ்சுப் பாதங்கள்
நெஞ்சு உதைக்க
ரெட்டை ஸ்டெத்தெஸ்கோப்
தொட்ட கனத்தில்...
சீரானது என்
சுவாசம்!

ஒற்றை நிழலோடு
ஊரில்
உலா வந்த எனக்கு...
குட்டி நிஜமாய்
நீ
கூட வந்தாய்!

கக்கத்திலும் காலரிலும்
கைப்பட்டியிலும்
அத்தர் மணக்க...
என் -
இடக் கை விரல் பிடித்து
நீயும்
வலக் கை தாங்கி
உன் தாத்தாவும் என -
பெருநாள் தொழுகைக்கு
பள்ளி சென்ற பொழுது
நினைவிருக்கா உனக்கு...?

நீ
கார் பொம்மை கேட்டாய்-
நானுனக்கு
கார்களின் காட்சியகம்
வைத்துத் தந்தேன்.
நீயோ...
ஒரே நாளில்
உடைத்துப் போட்டு
பணிமனை யாக்கினாய்!

நீ எழுதிய
முதல் எழுத்து
வெளவாலாய்த் தொங்கினாலும்-
அது என்
ஆத்ம உயிர்ப்பின் உயில்!

நீ உண்ட மிச்சம்
எனக்கெனவும்...
உன் உறக்கத்தின் நடுவே
என் ஓய்வு எனவும்...
உன்
மனம் மகிழ்விப்பதுவே
என் கொள்கை யெனவும்...
நீ
வளர்கிறாய் மகனே!

வளர்ந்தொருநாள்
வாலிபம் வந்து
இளைஞனாவாய்...

இளமை...
இனிய பருவத்தின்
இயற்கையான முறுக்கும்
இயல்பான எழிலும் என
இன்புற்றுத் திரிவாய்...

இருப்பதெல்லாம்
இஷ்டப் படுவாய்
இல்லாததற்கும்
இச்சை கொள்வாய்...

இஸ்லாத்தின்
இனிய வழியில்
இல்லத்தரசி பெறுவாய்...

இல்லாதோருக்கு ஈவாய்
இன்னல் எனில் உதவுவாய்
இங்கொன்றும் அங்கொன்றுமென
இருண்டவெளியும் கடப்பாய்...

இத்துணைச் சிறப்போடும்
இன்னபிற எழிலோடும் நீ
இருக்கும்
இந்நிலையில்...

முதுமை எய்தி...
முழங்கால் வலியோ
மூட்டு வலியோ
மூச்சிறைப்போ
மூத்திர அடைப்போவென
முடியாமல் போய்...

முதுகில் கூனுமாய்
முகம் சுருங்கி-
முன்னுச்சி முதல்
முடி முழுதும்
முல்லையென வெளுத்தும்-

மூலமோ
முடக்கு வாதமோ தாக்கி...
முற்றத்திலோ
மூலையிலோ நான்
முடங்கிப்போனால்...

முச்சந்தியில் விடாமல்
மூன்று வேளையல்ல
முடிந்தால்
முழுப் பசிக்குமாக
மூன்று கவளம் உணவு போதும்
முடிவாக -கண்
மூடி -மண்
மூடும்வரை தரவேண்டும் என் மகனே!


- சபீர்

மனித உரிமைகளும் எருமைகளும்



மனித உரிமைகளும் எருமைகளும்


பறவைகளுக்கும் சரணாலயங்கள் உண்டு
மிருகங்களை அழிவிலிருந்து காப்பதுண்டு
தன்னினச் சேர்க்கையாளர்க்கும் உரிமையுண்டு
தமிழினத்தை அழிப்பவரைத் தண்டிப்பதில்லை

மனித உரிமைகள் தினமாம் இன்று
அறிக்கைகளும் விடுகிறார்கள்
உரைகளும் ஆற்றுகிறார்கள்
உதவாக்கரை நாடுகள் கூட்டம்

குழந்தைகளைக் கொதிதாரில் போட்டதும்
குமரிகளை மார்பறுத்துக் கொன்றதும்
குருக்களை உயிரோடு கொழுத்தியதும்
மனித உரிமைச் சாசனங்கள் முப்பதில்
எதில் அடங்கும் பன்னாட்டுச் சமூகமெனும்
பன்னாடைக் கூட்டங்களே.

பாராளமன்றின் முன் அறப் போர் புரிந்த
தமிழ்த் தலைவர்களை காடையரை ஏவி
அடித்து உதைத்து அரை நிர்வாணமாக்கிய
அரச பயங்கர வாதக் கோர தாண்டவம்

மனித உரிமைச் சாசனங்கள் முப்பதில்
எதில் அடங்கும் பன்னாட்டுச் சமூகமெனும்
பன்னாடைக் கூட்டங்களே.



அமைதிப் படை என்று சொல்லி வந்த
கொலைவெறிக் கும்பல் ஒன்று
ஏழாயிரம் அப்பாவிகளைக் கொன்று
மூவாயிரம் பெண்களைக் கெடுத்தது

மனித உரிமைச் சாசனங்கள் முப்பதில்
எதில் அடங்கும் பன்னாட்டுச் சமூகமெனும்
பன்னாடைக் கூட்டங்களே.

பாதுகாப்பு வலயம் என்று சொல்லி
உணவு மறுத்து நீர்மறுத்து
நோய் தீர்க்கும் மருந்து மறுத்து
சிற்றிடத்தில் திரட்டியெடுத்து
கொத்தணிக் குண்டுகளை வீசி
இலட்சம் பேரைக் கொன்று குவித்தது

மனித உரிமைச் சாசனங்கள் முப்பதில்
எதில் அடங்கும் பன்னாட்டுச் சமூகமெனும்
பன்னாடைக் கூட்டங்களே.



மனித உரிமையெனக் கூவுவதெல்லாம்
உமக்கு ஒத்து வராத கடாஃபி போன்ற
ஆட்சியாளர்களை விரட்டவும்
தேவைப்படின் கொல்லவுமே



பலகொலைகள் செய்த இலங்கையைப் பாராட்டிய
ஐநா மனித உரிமைக்கழகம மன்றில்
உரிமைகளை வென்றெடுக்கவும் வேண்டுமோ
ஈன்றெடுக்க வேண்டும் எம் உரிமையை நாமே

Friday, 9 December 2011


என் உயிருக்கு உன் புன்னகை வேண்டும்

நினைவில் நிலையாய் நிறைந்தாள்
உதட்டில் பெயரால் இனித்தாள்
வானுக்கு நிலவு வேண்டும்
பயிருக்கு நீர் வேண்டும்
என் உயிருக்கு உன் புன்னகை வேண்டும்

என் கண்களை உற்றுப் பார்
உன் விம்பம் தெரியும்
என் உடலைத் தொட்டுப் பார்
உன்னை நீ உணர்வாய்
என் இதயத் துடிப்பைக் கேட்டுப்பார்
உன் பெயரை அது சொல்லும்


வன் நிறைய நட்சத்திரங்களுண்டு
விடி வெள்ளி போல் வருமா
உலகெல்லாம் பெண்கள் உண்டு
உன் போல் வருமா

இரு விழிகளை
ஒரு முறை பார்தது
இருபத்தி நான்கு
மணி நேரம்
நினைவில் நிறைந்தது

Thursday, 8 December 2011


நினைத்தால் கண்கள் பனிக்கும்

கருவில் என்னைச் சுமந்து
கன துயரங்கள் பொறுத்து
என்னைப் பாலூட்டிச்
தாலாட்டி சீராட்டி

அன்பு பாராட்டி
வளர்த்தாள் என் அன்னை
அவள் பெயர் எனக்குப் பிடிக்கும்
அவளுக்கென  இதயம் துடிக்கும்


அன்புமலர் என்றொரு
முன்பள்ளி ஆசிரியை
மென் மொழி பேசி
கருணைப் பார்வை வீசி
அறிவூட்டிய தேவதை
அவர் பெயர் இன்றும்
நெஞ்சில் இனிக்கும் -
நினைத்தால்
கண்கள் பனிக்கும்


தாயக விடுதலைப்  போரில்
நாயகத்து அமைதிப்படையை
எதிர்த்தாள் போரில் குதித்தாள்

நிகரில்லாமல் இப்பாரில்
மாலதி என்றொருபோராளி
கோப்பாயில் வீரச்சாவடைந்தாள்
முதல் தமிழ்ப் பெண் தியாகி
அவள் பெயரை மனம் மதிக்கும்
என்றும் எண்ணித் துதிக்கும்

அன்பிற்க்கே ஒரு திரு உருவாய்
சேவையின் எண்ணக் கருவாய்
எழைகளுக்கு கரம் கொடுத்தாள்
உலக அன்னை தெரெஸா
அவள் பெயர் என்றும் நிலைக்கும்
எழைகள் நெஞ்சில் இனிக்கும்

Friday, 2 December 2011


காதலின்றி எதுவும் இல்லை

களத்தில் போராளிகளிடையும் காதல்
முகாம்களில் ஏதிலிகளிடையும் காதல்
புலத்தில் பெயர்ந்தவர்களிடையும் காதல்
ஆர்ப்பாட்டப் பேரணியிலும் காதல்
ஜெனிவா நோக்கிச் செல்கையிலும் காதல்
புறநானூற்றிலும் காதல் அகநானுற்றிலும் காதல்

காதலே இலக்கியம் காதலே இலட்சியம்
அன்றும் காதல் இன்றும் காதல்
எங்கும் காதல் எதிலும் காதல்
காதலின்றி எதுவும் இல்லை

உருமாற்றத்தால் ஒரு கருவாய்
கருவறையில் ஒரு சிசுவாய்
என்னை ஈன்ற போதில்
அன்னை கொண்டாள் காதல்

தத்தி நடை பயில
கத்தி மொழி பேச
பெற்றோருடன் காதல்
உற்றோருடனும் காதல்

துள்ளித் திரிந்தோடி
பள்ளிக் கூடம் நாடி
நண்பர்கள் மீது காதல்
பல உணர்வுகளுடன் மோதல்

அரும்பும் மீசைப் பருவம்
கரும்பு போல் ஒரு உருவம்
ஓரவிழிப்பார்வை உசுப்பேற்றும்
இதயத்தை  ரணகளமாக்கும்
அவள் நினைவுகள் எப்போதும்
ரவுண்டு கட்டி என்னைத் தாக்கும்

தெருவிலும் தொடரும்
ஆலயத்திலும் வழிபடும்
மெழுகு திரியொளியில்
மெருகூட்டும்
நடனத்தில் இணைந்து
உடல்கள் உரசும்
தினசரி மூன்று வேளை
சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும்
பார்க்க வேண்டும் போல்இருக்கும்



டுவிட்டரிலும் தொடரும்
sms பல பறக்கும்
முகவேட்டில் அரட்டை அடிக்கும்
உடலெங்கும் ஏதோ போல் இருக்கும்
உணவையும் வாய் மறுக்கும்
நினைவிலும் காதல் கனவிலும் காதல்
எங்கும் காதல் எதிலும் காதல்
இதமான ஒரு வேதனை
அனுபவித்தவனுக்கே இது புரியும்

Thursday, 1 December 2011


நேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்


நேட்டோப் படைகள் அவள் விழிதேடி வரும்
Weapons of mass destruction என்று
அமெரிக்க ஆளில்லாவிமானங்கள் அவள் விழி தேடி வரும்...
பலர் நெஞ்சங்களில் பயங்கரவாதம் செய்வதால்
ஐநா பாது காப்புச் சபையும் தீர்மானம் போடும்
இளைஞர்கள் சிந்தனைகளில் சர்வாதிகாரம் புரிவதால்
பன்னாட்டு மன்னிப்புச் சபையும் அறிக்கை விடும்
பல பாவிகளைச் சித்திரவதை செய்வதால்.


உன் விழியடி பேரிடியடி
என் இதயத்தில் சுழியோடி
என் வழியடி தடுமாறுதடி
என் நெஞ்சில் கழியாடி
இரவே பெரும் பழியடி
 
ஓரப் பார்வையால் என்னை ஒளிப்பதிவு செய்வதால்
குறுந்தகவல்கள் பல எனக்கு அனுப்புவதால்
காமச் செயலிகள் பல நிறைந்ததால்
கன்னியவள் விழியும்  ஐஃபோன் போலே

Wednesday, 30 November 2011


நாயானது கொடிய மனைவியிலும் மேலானது

 சூரியக் காதலன்
மேகக் காதலியை
மெல்ல நோக்க

மேலாடையாம்  முகில்
மெல்ல விலக
மேகத்தாள் தேகம் பார்த்து 

மோகத்தால் ஒரு
மின்னலாய் கண் சிமிட்ட
நாணத்தால் வானவில்லாய்
முகம் சிவக்க
பொங்கிய காமத்தால்
கட்டியணைக்க
கட்டில் ஒலியாய்
இடி முழக்கம்
வியவைத்  துளிகளாய்
மழைத் துளிகள்



திட்டும் போது திருப்பி திட்டாமையினால்
கடைத் தெருவில் பணம் காலி செய்யாமையினால்
தேவையான நேரத்தில் பிகு பண்ணாமையினால்
நாயானது கொடிய மனைவியிலும் மேலானது

Sunday, 27 November 2011


கல்லறைக் காதலியே கண்வளராய்

கண்வளராய் கண்வளராய்
 கல்லறைக் காதலியே
கண்வளராய் கண்வளராய்
கண்ணில் நிறைந்தவளே
மண்ணிற்காக வாழ்ந்தவளே
மண்ணில் மறைந்தவளே
கண்வளராய் கண்வளராய்
என் கல்லறைக் காதலியே


இரட்டைப் பின்னல் காதலியே
கண்வளராய் கண்வளராய்
மண் மீட்க மாதரசியே
கண்வளராய் கண்வளராய்

கழுத்தில் நஞ்சு நீ சுமந்தாய்
தமிழ் மானம் காக்க
கருத்தில் நஞ்சு சுமந்து
புலத்தைப் பிரிக்கின்றனர் கயவர்
கண்வளராய் கண்வளராய்
என் கல்லறைக் காதலியே
கண்வளராய் கண்வளராய்

காதல் பரிசு என்ன வேண்டும் என்றேன்
ருவீஷர் என நீ சொன்னாய்
புருவம் அழகு படுத்த அல்ல அது
சக போராளி உடலில் குண்டுகள்
பிரித்தெடுக்க முட்கள் அகற்றிட
கண்வளராய் கண்வளராய்
என் கல்லறைக் காதலியே
கண்வளராய் கண்வளராய்

போகும்  இடம் 

எதுவென்று புரியவில்லை
போக வேண்டிய இடமும்  

எதுவென்று புரியவில்லை
மீண்டெழுந்து வந்து 

எம் இழிநிலை பாராமல்
கண்வளராய் கண்வளராய்
என் கல்லறைக் காதலிய
கண்வளராய் கண்வளராய்

Friday, 25 November 2011


Facebook குறள்கள் / மாவீரர் வாரக் கவிதை


வேலை மெனக்கெட்டு முகவேட்டிலிருப்பதெல்லாம்
ஒரு அட்டு ஃபிகரோடாவது chat அடிக்கும் பொருட்டு.

ஃபிகரொன்று ஆன்லைனில் இருக்கையில்
ஒரு pokeஆவது பண்ணாதிருப்பது நன்றன்று

வரும் பதிவுற்கெல்லாம் like போட்டுக்
comment அடிப்பான் நண்பருள் ஏறு

அட்டு ஃபிகர்  டக்கர் ஃபிகர் பேதம் பாடாமல்
add பண்ணுவான் நண்பருள் தலை


 மாவீரர் வாரக் கவிதை

மண்ணுக்கென  மண்ணில் பிறந்து
மண் மிட்கப் போ
ராடி மண்ணுக்கு உயிர் கொடுத்து
மண்ணோடு  புதைந்த தேசப் புதல்வர்களே
உங்கள் தியாகத்தை மண்ணாக்குகிறொம்
எமக்குள் முட்டி மோதி பிளவுபட்டு


கொடுங்கோலர் ஆட்சி
அவர் மறைவுடன் முடியும்
எம்முள்ளே எம்மோடு எம்மாக
எம்மை அழிப்போர் துரோகம்
என்று முடியும் என எமக்குச்
சொல்லுங்கள் தேசப்புதல்வர்களே



நமக்கென ஒரு நாடு
தமிழீழம்  அதன் பெயர்
தாயகம் தேசியம் தன்னாட்சி
எனத் தோள் தட்டி நின்றோம் - இன்று
நாயகம் சிங்களமயம் இராணுவ ஆட்சி
என்றானது எம் தமிழ் ஈழம்

விடுதலைப் போரால்
வில்லங்கப் பட்டோம்
எனக் கூறி  புலம் பெயர்ந்தோம்
பலம் பெற்றோம் பலதும்  பெற்றோம்
மாவீரர் நாளிற்கு முட்டி மோதுகிறோம்
தமிழினத்தை ஈனப் படுத்துகிறோம்
தமிழ் ஈழத்தை ஈன்றெடுப்போமா?

Wednesday, 23 November 2011


எந்த மாவீரர் தினத்திற்குப் போவது?

2008இன் பிற்பகுதியிலும்  2009இன் முற்பகுதியிலும் இந்திய உளவுத் துறை வன்னியில் தமிழர்களின் ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்று அறியப் பல வழிகளில் முயன்றது. நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் ஊடாகவும் இதற்கான முயற்ச்சிகள் மேற் கொள்ளப் பட்டதாகவும் சில தகவல்கள் கூறின.

மாவீரர் தினம் தேசியப் போராட்டத்தின் உந்து சக்தியும் அளவு கோலுமாகும்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் புலம் பெயர் நடுகளில் தமிழ்த் தேசியவாதம் மங்கிவிடும் என்று கணக்குப் போட்டிருந்தனர் இந்திய-இலங்கை இன அழிப்புவாதிகள். தமிழ்த் தேசியவாதத்திற்கு உள்ள ஆதரவிற்கான உந்து சக்தியாக மட்டுமல்ல தமிழ்த் தேசியத்திற்கான ஆதரவிற்கான அளவு கோலாகவும் திகழ்வது மாவீரர் தினம். 2009இலும் 2010இலும் உலகெங்கும் நடந்த மாவீரர் தினங்கள் முந்தைய மாவீரர் தினங்களிலும் பார்க்க உணர்ச்சி பூர்வமானதாகவே இருந்தன.

மாவீரர் தினத்திற்குச் செல்லும் ஆட்களின் தொகயைக் குறைப்பதே எதிரியின் திட்டம்.
மாவீரர் தினத்திற்குச் செல்லும் ஆட்களின் தொகையைக் குறைப்பதற்கு இந்திய-இலங்கை இன அழிப்புவாதிகள் போட்ட திட்டம் மாவீரர் தினத்தை ஒழுங்கு செய்பவர்களைப் பிளவு படுத்துவதே. பிளவு படுத்தியது என்று சொல்வதிலும் பார்க்க புதிதாக ஒரு குழுவை இந்திய-இலங்கை இன அழிப்புவாதிகள் உருவாக்கியுள்ளனர்.  பிளவு படுத்துவதில் அவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர். இந்திய-இலங்கை இன அழிப்புவாதிகளுக்கு தமிழர்களைப் பிளவு படுத்துவதில் சிறந்த முன் அனுபவம் உண்டு. மாவீரர் தினம் இரு வேறுபட்ட குழுக்களால் இப்போது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில்  உள்ள சாத்தியப்பாடுகள்: 1. இரு குழுக்களும் உண்மையான தேசியப் பற்றாளர்கள்; 2. இரு குழுக்களுமே துரோகிகள்; 3/4. இரண்டில் ஒன்று தேசியப்பற்றாளர்களைக் கொண்டது மற்றது துரோகிகளைக் கொண்டது. இதில் நல்ல செய்தி இரு குழுக்களுமே மாவீரர் தினத்தை ஒழுங்கு செய்கின்றன. ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் சில ஊடகங்களில் வைக்கப் படும் ஒரு பிரச்சாரம் பெரும் அச்சத்தைத் தருகிறது:
  • மாவீரர் தினத்தை இரு குழுக்களும் ஒன்றாக ஒற்றுமையாக ஒரு இடத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிடில் தமிழர்கள் மாவீரர் தினத்தைப் புறக்கணித்து வீடுகளில் இருந்து மாவீரர்களுக்கு அகவணக்கம் செய்ய வேண்டும்.
இந்தப் பிரச்சாரம் வெற்றி பெற்றால் தமிழின எதிரிகளுக்குத்தான் வெற்றி. இந்தப் பிரச்சாரம் இந்திய-இலங்கை இன அழிப்புவாதிகளின் கைக்கூலிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பிரச்சாரத்தைப் புறந்தள்ளி எங்காவது ஒரு மாவீரர் தினம் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்திற்கு சென்று உங்கள் அகவணக்கத்தைச் செலுத்துங்கள்


மாவீரர் கவிதை
அடக்கு முறைகள் வித்தாக
முளைத்தது விடுதலைப் போர்
அட்டூழியங்கள் உரமாக
வளர்ந்தது   விடுதலைப் போர்

மக்கள் விழித்தெழ
பரந்தது
விடுதலைப் போர்
இளைஞர்கள் கொதித்தெழ
வீறு கொண்டது
விடுதலைப் போர்

பாரதம் பாதகம் செய்ய
பலமிழந்தது
விடுதலைப் போர்
துரோகிகள் பலர் கூட
துயர் கண்டது
விடுதலைப் போர்

பன்னாட்டு சமூகம் எனும்
பன்னாடைக் கூட்டம்
பாடை கட்ட வந்தது
பின்னடைவுற்றது
விடுதலைப் போர்

கார்த்திகைப் பூக்கள்
மலர்ந்தன உதிர்ந்தன
வித்துக்கள் பலப் பல
மீண்டும் முளையாகும்
கார்த்திகைத் தீபங்கள்
என்றும் ஒளிரும்

Saturday, 19 November 2011


மாவீரர்களே இன்று உம் தியாகத்தையே சிதைக்கின்றோம்

நீரின்றி சோறின்றி 
நித்திரையின்றி நிம்மதியின்றி
மண் மீட்புக்கு உயிர் கொடுத்த
தியாகச் செம்மல்களேஉம்மைப் புதைக்கவில்லை
மீண்டும் வர விதைத்தோம்
என்று கதைத்தோம் கண்ணீர் விட்டோம்
இன்று உம் நினைவை உதைக்கின்றோம்
உங்கள் ஆன்மாக்களையும் வதைக்கின்றொம்

 எதிரி உம் சின்னங்களைத்தான் சிதைத்தான்.
இன்று உம் தியாகத்தையே சிதைக்கின்றோம்


தண்ணீர் விட்டு வளர்க்காமல்
கண்ணீர் விட்டு தம் நாட்டுச்
சுதந்திரம் பெற்றவர்க்கு
உயிர் நீர் விட்ட
உம் தியாகம் புரியவில்லை

கையாட்கள் மூலம்
கைவரிசை காட்டுகின்றனர்
புலத்திலும் ஒரு முள்ளி வாய்க்காலுக்கு.

ஒன்று படுத்த எதுவும் செய்யாமல்
இன்று ஒன்றாகச் செய்யுங்கள்
ஓரிடத்தில் நன்றாகச் செய்யுங்கள்
என்று சொல்கிறோம் நாம் இங்கு
உங்கள் காதும் புளித்திருக்கும்

Friday, 18 November 2011


ஹைக்கூ: கட்டில் முழக்கம் ஒலிக்கிறது

விரைந்து சென்றது காற்று
வேகத் தடை
போட்டது இயற்கை
தென்றல்

காதலின் ஆரம்பித்தது
கடைக்கண்ணால் அவள் பார்வை
தென்றல்

களைத்து விடு சென்றேன்
அரிதாய்க் கிடைத்தது இன்சொற்கள்
தென்றல்

கதிரவனின் கோபம்
காற்றின் கருணை மனு
தென்றல்


கட்டில் முழக்கம் ஒலிக்கிறது
முத்தத்தோடு அணைப்பு
தென்றல்

பிள்ளைகள் வெய்யிலில்
இயற்கை அன்னையின் முத்தம்
தென்றல்

பிளவு பட்டது நம் இனம்
ஒன்று பட்டு வாழ்ந்தால்
தென்றல்

Wednesday, 16 November 2011


ஐம்பூதமானது உன் பிரிவு

கண்களில் நீர் முட்டியது
நெஞ்சில் தீ மூட்டியது
உறவு மண்ணானது
இதயம் பெரு வெளியானது
நினைவு காற்றாகியது
ஐம்பூதமானது உன் பிரிவு

வாய்களில் வார்த்தையில்லை
கண்களில் ஒளியில்லை
காதில் உன் குரலில்லை
மூக்கில் உன் கூந்தல் மணமில்லை
உடலில் உன் உணர்வில்லை
தவிக்கின்றன ஐம்புலன்கள்
உன் பிரிவில்

Thursday, 10 November 2011


கவிதை: தமிழர்க்குப் புத்தி சொல்வாய் ரோஜாவே



 அழகு நிறைந்த உன் அகத்தினை யாரறிவார்?
மணம் தரும் உன் மனத்தினை யாரறிவார்?
வண்ணம் தரும் உன் வாட்டம் யாரறிவார்? - உன்
எண்ணம் நிறை துயரை யாராறிவார் ரோஜாவே

Wednesday, 9 November 2011


கவிதை: நீயோடிப் போகின்றாய் பூங்காற்றே


 ஓடும் நதியோடு உறவாடி
பாடும் குயிலோடு இசையாகி
ஆடும் கொடியோடு நடமாடி
யார் முகம் தேடி நீயோடிப்
போகின்றாய் பூங்காற்றே




Tuesday, 8 November 2011


கவிதை: நெஞ்சில் சிறகடிக்கும் ஆயிரம் பட்டாம் பூச்சிகள்


பேச்சொன்று கேட்டால்
மூச்சிங்கு நெருப்பெடுக்கும்
இசையோடு தேன்கலந்த
வார்த்தைகள் வதைத்தெடுக்கும்
அவள் உதடசைந்தால்
நெஞ்சில் படபடக்குது
ஆயிரம் பட்டாம் பூச்சிகள்



 மன்மதன் வீசுவது மலரம்பு
அவள் கண்கள் வீசுவது எறிகணைகள்

காப்பரணுமில்லை பதுங்கு குழியுமில்லை
கன்னியவள் கண்பட்டால்
நெஞ்சில் சுற்றுகின்றன
ஆயிரம் பட்டாம் பூச்சிகள்



இமை மடல் எழுதும்
பற்பல மடல்கள்
பார்க்கத்துடிக்கும் கண்கள்
தொடத்துடிக்கும் கைகள்
அவளை நினைத்தால்

நெஞ்சில் பறந்தோடும்
ஆயிரம் பட்டாம் பூச்சிகள்

அவள் பட்டுடலெங்கும்
என் விரல்கள் ஓடத்துடிக்கும்
நீள் மரதனோட்டம்
பக்கத்தில் அவள் வந்தால்

நெஞ்சில் சிறகடிக்கும்
ஆயிரம் பட்டாம் பூச்சிகள்