வியாழன், 8 டிசம்பர், 2011

உன் காதலால்...


உன் காதலால்...

 உள்ளங்கள் இரண்டிங்கு - தம்
உணர்வினை பகிர்ந்து
உண்மை அன்பினால்
உருவான கரு காதல்..

இதயங்கள் இட மாற
நினைவெல்லாம் நீயாக
என் சுவாசம் தொலைந்து
உனையே நேசிக்கிறேன்

என் கண்ணில் இருப்பது
கருவிழியா அல்ல நீயா
இதயம் துடிக்குதா அல்லது அங்கே
உன் பெயர் ஒலிக்குதா?

இதயத்தில் உதயமாகி
உதிரத்தில் ஊற்றெடுத்து
உடலெங்கும் பரந்தோடும்
உன் காதலால் - இவ்
உலகத்தில் வாழுது என் உயிர்.

நட்பு..



எண்ணங்கள் ஒன்றானதால்
எதிர்பார்ப்பு எதுமின்றி
உருவான துணை ஒன்று - என்
வாழ்வில் உற்ற துணையானது 
உயிர் நட்பாய்...

சுற்றி சுற்றி வட்டமிடும்
இவ் வாழ்வில்
கட்டங்கள் பல கடந்து
சட்டங்கள் பல தாண்டி
திட்டமிட நல் வாழ்வை
உடனிருந்து திடமாய் - என்றும்
உழைப்பது உண்மை நட்பு..

தனக்கென இல்லாது
நமக்கென அனைத்தையும்
பகிர்ந்திட்ட போதிலும்
பழியினை தான் ஏற்று
பாரினில் என் புகழ் வாழ
பக்குவாய் பக்கத்திலிருந்து
உழைக்குது நட்பு..

உறவேதும் இல்லாது
உணர்வால் உருவான உறவு இங்கே
உதிரத்தினை உழைப்பாக்கி - தன்
உயிரிலும் மேலான எனை தாங்கி
உண்மை நட்பின் உன்னததை
உலகுங்கு பறை சாற்றுகிறது இங்கே...

கண்ணீர்..




மனித மனங்களின்
தாரக மந்திரம்
கண்ணீர்..

கடல் என நீண்டு செல்லும்
நினைவலைகளில்
சிக்கித் தவிக்கும் உள்ளங்களின்
உண்மையான நட்பு
கண்ணீர்...

வலிகளை மறக்க செய்ய,
கடவுளின் அன்பு பரிசு,
கண்களை சுத்தப்படுத்தி
இதயங்களை இதமாக்கி
பாவங்களின் மன்னிப்பாய்
கண்ணீர்...

இரவின் மடியில்
தனிமையின் பிடியில்
படுக்கையறையில்
தலையணையுடன்
சண்டையிட்டு - இளம்
பெண்கள் பேசும்
மெளன பாஷை
கண்ணீர்..

பிறப்பிலும் கண்ணீர் 
மனித இறப்பிலும் கண்ணீர்
நட்பிலும் கண்ணீர்
காதலிலும் கண்ணீர்
வலியிலும் கண்ணீர்
சந்தோசத்திலும் கண்ணீர்
இழப்பிலும் கண்ணீர்
ஒன்றை பெறுவதிலும் கண்ணீர்
கண்ணீர்!!!
இன்றைய மனித வாழ்வில்
உயிர் காவியம்....




சிசு பேசுகின்றேன்....




தாயே!!!
சிசுவான என்னை
சிறை பிடிக்கின்றது
ஆயிரம் எண்ணங்கள்
எதிர்காலத்தை எண்ணி...

அன்னையே!
என்முகம் அறிந்திருக்க
உனக்கு வாய்ப்பில்லை
உன் ஒவ்வொரு அசைவிலும்
உன்னை வடிவமைகிறேன்.
உன் உணர்வுகளின் துடிப்பில்
உன்னை புரிகிறேன்
உன் மூச்சின் ஒலியின்
வெளியுலகின் நிலையை உணர்கிறேன்

சொர்க்கமான
உன் குட்டி வயிற்றில்
செழுமையாய் வாழுகிறேன்
உன் வாய் மூணு மூணுக்கும்
இசை கேட்டே
நிம்மதியாய் உறங்குகின்றேன்.
உன் கண்களில்
கண்ணீர் குளமாகும் போது
நானும் அழுகிறேன்.
உன்னில் சிரிப்பனை காண
எட்டி உதைகிறேன்
உன் முகம் மலர்கிறது
இவற்றை நானும் ரசிக்கின்றேன்
உன் அசைவுகளின் மூலம்..

இருந்தும்
நாளைய தினம்
நான் வெளி உலகம்
காண வேண்டிய நிர்ப்பந்தம்
ஆகையால்,
அச்சம் என்னை அரவணைக்கின்றது
நாளைய என்
எதிர்காலத்தை எண்ணி..



காதல் பட்சி..



பட்சியே!!!
உன்னை காணும் வரையில்
என்னை தீண்டியதில்லை
காதல்...

நீ ஜோடியாய்
ஒய்யாரமாய் மரத்தடியில் 
காதல் மொழி பேசுகையில்
கனக்கிறது என் மனம்
காதலை எண்ணி...

பட்சியே!!
உனக்களித்த சிறகுகளை
எனக்கும் அளித்திருந்தால்
பகமை இல்லாத
இடம் தேடி
பறந்தே போய் இருப்பேன்
காதல் கிளி அவளுடன்...

அன்பில் இணைந்து
பாசத்தில் பிணைந்து
கனவுகள் வளர்ந்து 
தினம் தினம்
எண்ணங்களை கவியாக்கி
காதல் ராகம் பாடுகிறேன்
அவள் நினைவால்...

பட்சியே! அறிவாயா?
காதலின் இனிமைக்குள்
ஒளித்திருக்கும்
ரணங்களின் கொடுமையை..

நித்தம் நித்தம்
பித்து பிடிக்க வைக்கும்
அவள் நினைவுகள்
செத்தும் பிழைக்கிறேன்
காதல் புரியும்
தர்ம கொலைகளில் இருந்து..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக