வியாழன், 8 டிசம்பர், 2011

அழுகையும்! சிரிப்பும்!

அழுகையும்! சிரிப்பும்!

அழு!
அழவேண்டிய நேரத்தில்
அழு!
அழாவிட்டால்
மன அழுத்தம் அதிகமாகும்.
அழு!

அழு!
வாய் விட்டு அழு!
அழுதால்
வலி விட்டு போகும்.
அழு!

அழு!
அழுதால்
தனியாக அழு!
இல்லையேல்
நடிப்பு என்பர்.
அழு!
தனியாக அழு!

சிரி!
சிந்தனையைக் கவரும் விதம்
சிரி!
சிரிக்காவிட்டால்
சிறக்காது உள்ளம்
சிரி!

சிரி!
சரியான நேரத்தில் சிரி!
சரியாக சிரி!
சிரி!

சிரி!
சிரித்தால்
கூடுமாம் ஆயுள்!
சிரி!

சிரி!
நகைத்தல்
நமக்கே உரியது!
சிரி!
நன்றாக சிரி!

சிரி!
கூட்டத்தோடு சிரி!
தனியாய் சிரிப்பின்
சொல்வர்
பைத்தியம் என்று!
சிரி!
கூட்டத்தோடு சிரி!

சிரி!
ஆணவத்தோடு அல்ல...
அவிழும் மொட்டாய்
அழகாக சிரி!
சிரி!
*************************************************************************

என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)

Post 
என் தாய்!


எந்தையிடம் தாவென்று
எனைக் கேட்டு பெற்றவள்;
யாரவள்?
என் தாய்!

என் தாயே!

கருவான நாள் முதலாய்
கவனித்தாய்;
எனை
கண்ணும் கருத்தாய்!

கருவிலே நான் வளர
உன்னுணவை எனக்கும்
தாமாகவே
பகிர்ந்தளித்தாய்!

ஈரைந்து திங்களாய்
இடுப்பு நோவுடன் எனை சுமந்து
மீளாத வலி தாங்கி
மீண்டு வந்து ஈன்றெடுத்தாய்!

கண் விழித்ததும் கண்டு
எனைக் கனிவுடனே கண்ணோக்கி
வாஞ்சையோடு
வாரியணைத்தாய்!

அனுதினமும் அன்போடு
எனை
உன் நெஞ்சணைத்து
அமுதளித்தாய்!

பஞ்சணையி லல்ல; உன்
நெஞ்சணையில் தூங்க வைத்தாய்!
உறவுகளை அறிவித்து எனக்கு
உலகையும் கற்பித்தாய்!

என் மழலை மொழி கேட்டு
உன் துன்பம் தொலைத்திருந்தாய்!
எழுந்து நான் நிற்கையிலே
என் மகனென்று மகிழ்ந்திருந்தாய்!

நோயோ எனை வருத்த
கண் விழித்து பசித்திருந்தாய்!
படைத்தவனை கடிந்து நீயும்
பத்திய உணவு புசித்திருந்தாய்!

என் பசியை நான் மறக்க
உன் பசியை நீ மறந்தாய்!
பாலகனாம் எனை நினைத்து
பகல் கனவு கண்டிருந்தாய்!

அதிகாலை துயிலெழுப்பி
அடுத்த நாளை அறிவித்தாய்!
சிறு வெற்றியை மிகப்பெரிதாய்
சிறப்பு செய்து நீ மகிழ்ந்தாய்!

வேலைக்கு எனை அனுப்ப
வேண்டாமென்று
நீ மறுத்தாய்.
நீ மறத்தாய்!

கை வளையல் தான் வைத்து
கல்லூரிக் கனுப்பி வைத்தாய்!
பொன்னகையை தான் மறந்து
புன்னகையை நீ அணிந்தாய்!

உன்
உதிரத்தை உயிராக்கி
எனக்கூட்டியதால்
உருக்குலைந்தாய்!

நீயோ கனிவின் ஊற்று.
உன் அன்பிற் குண்டோ மாற்று!
நீ பொறுமையின் பிறப்பிடம்.
சகிப்புத் தன்மையின் புகலிடம்!

உன் சேலைச் சோலை
காணக்கிடையா பூங்காவனம்.
சுமை தாங்கியாம் என் தாயே
நீ காணக் கிடைத்த என் தெய்வம்!

உன் உடல் காண் சுருக்கங்கள்
சுருக்கமல்ல தாயே!
நீ எனக்களித்த
ஆயுள் ரேகை!

என்ன தவம் செய்தேன்
என் தாயே!
என் தாயாய்
உனை அடைய!

இனியொரு சொர்க்கம்
தேவையில்லை;
உன் அருகாமை என்றும்
எனக்கிருக்கையிலே!

முழுமை பெற்று விட்டேன்
தாயே!
முழு மதியாய்
உன்னை பெற்றதால்!
***************************************************************************
நட்பு அழிவதில்லை

கல்லூரியாம்
பூங்கொடியில் காண்
நட்பாம் நன்மலரே...
நீ சிறப்பாய்!

நட்பை மலர் என்றிடின்
காலமதை வாட்டிடுமே...
ஆம்!
அவ்வாட்டமே பிரிவாம்!
அத்துடன் முடிவுற்றதா?
அம்மலரின் பயணம்!

தன் வாட்டமாம் இறுதியில்
பதிவாம் விதையினை,
நெஞ்சமாம் பூமித்தாயிடம்
விதைத்து சென்றிட,
நினைவாம் நீரை
நிறைவாய் அளித்திடின்,
விதையாம் பதிவுகள்
விருட்சமாய் உருவெடுத்திட,
என்று முடியும் இப்பயணம்...

என்றும் முடிவதில்லை!
நட்பு என்றும் அழிவதில்லை!!
இதை மாற்றிட எவருமில்லை!!!
***************************************************************
:: :: நாய்கள் ஜாக்கிரதை :: ::

இந்தியாவில்
24 சதவீதத்தவருக்கு வீடில்லை
20 சதவீதத்தவருக்கு
அடுத்தவேளை சோற்றின் மேல் நம்பிக்கை இல்லை.
சீனப் பெருஞ்சுவராய் நீண்டு கிழக்கும்..
'ரேசன்' வரிசையில்,
சில்லைறை கொடுத்து
சீக்கிரம் அரிசி வாங்குவார்கள்!!!
சில பெரிய மனிதர்கள்(எமன்கள்)!!!
எதற்கென்று நீங்கள் கேட்டிருக்கமாடீர்கள்???!!
கேட்டிருந்தால் தெரிந்திருக்கும்
அந்த அரிசி நாய்களுக்கென்று.!!

உங்களிடம் கூரையில்லை, கூளுமில்லையா??
குடிக்க நீர் கேட்டுப்பாருங்கள்.!
'ஐரீஸ் செட்லனுக்கு'- ஐஸ் வாட்டர்
கிடைக்கவில்லை என்று வருத்தத்தில் இருப்பார்கள்.
அல்லது
'அழ சேஷனுக்கு' - அழகு பட்டை
கிடைக்கவில்லை என அலைந்து கொண்டிருப்பார்கள்.
வர்க்க பேதான் வர்ண பேதம்- தன
வாழ்க்கையில் பார்த்ததில்லை என்பார்கள்.
வீட்டுக்குள் வேறொரு நாஎனின்
விட்டெறி கல்லை 'தெருநாய்' மீது...
அவர்கள் எரிந்தது கல்லென்றா நினைக்கிறீர்கள்???
உங்கள் நாய்களுக்கு
உணவு வேண்டாமென்று சொல்லவில்லை!!
உங்கள் உல்லாசத்தை அதற்கும்
கற்றுகொடுக்காதீர்கள் என்கிறேன்.
படுக்க இடமே இல்லை மனிதனுக்கு
படுக்கைஎதர்க்கு நாய்-க்கு
என்றபின் ஒருவன் சொன்னான்
"இடம்கொடுத்தால் மதம் பிடிக்கும் மனிதனை விட
உண்டி கொடுத்தால் உயிர்கொடுக்கும் நாயே மேல்".
************************************************

அருமையான கவிதை சூப்பர்...... ஜாலி rendeer
*******************************************************
நட்புடன்...

காதலின் சின்னம்
இதயம் என்றால்...?
நட்பின் சின்னம்
உயிர் ஆகும்!

காதல் கல்லறைக்குள்
வாழ்த்தால்
நட்பு கருவறைக்குள்
வாழும்!

காதலின் இலக்கணம்
காதலி என்றால்...?
நட்பின் இலக்கணம்
நண்பன் ஆகும்!

காதல் கண்ணீரை
சிந்த வைக்கும்
நட்பு கண்ணீரை
துடைக்க வைக்கும்!

காதல் ஆசைக்குள்
துடிக்கும்
நட்பு இதய ஓசைக்குள்
துடிக்கும்!

என்றும் நட்புடன்
நான்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக