வியாழன், 8 டிசம்பர், 2011

உன் பிரிவால்...


உன் பிரிவால்...



என் வாழ்வின் அர்த்தங்களை 
உணர வைக்க 
உதயமான உறவொன்று 
திசைமாறும் வேளை
தடுமாறுகின்றேன் 
தனிமை எனும் கொடுமையில்..

இதயங்களின் சங்கமிப்பில்
அன்பினை பரிமாற்றி
பாசத்தில் பிண்ணி பிணைந்து
வாழ்க்கை எனும் கடலில் - என்
கண்கள் வளர்ந்திட்ட 
கனவுகள் இங்கே
காணல் நீராய் போனதடி 

உயிரே நீ என
உணர்வோடு வாழும் எனை
விதியே நீ என
தெருவோரம் வீசியதில்
துடி துடிக்குது என் இதயம்.
உணர்வினை ஊமையாக்கி
உறவுகளுக்காய் சிரித்து - என்
உள்ளம் வடிக்கும் கண்ணீர்
உதிரத்தில் சங்கமிப்பதால்
தினம் தினம் 
மரணித்துக் கொண்டிருக்கிறேன்
உன் பிரிவால்...

தவிப்பு..


என்றும் இல்லாத நிசப்தம்
ஏனோ இன்று
என் வாழ்வில் நிரந்தரமாய் ஆனது

நான்கு சுவர்களுக்கு
நாட்களும் அதுவாய் கழிக்கின்றது..
பூத்துக் குலுங்கிய பூங்கா வனம்
இன்று புழுதி பல படிந்து
குருதியில் தோய்ந்த
போர் நிலமாய் என் வாழ்க்கை....

தனிமையாய் இருந்திருந்தால்
தவிப்புகள் குறைந்திருக்கும்
காதல் எனும் வடம் பிடித்து
காணாமல் போனவர்கள் பல பேர்
இதில் கடைசியில் நானும்
இணைந்து கொள்ளும் கொடுமை இதுவோ

ஆடிப் பாடி திரிந்த இடமெல்லாம
ஆள் அரவமற்று
அமைதியாய் இருப்பதாய் ஓர் பிரமை.
கை கோர்ந்து நடந்து திரிந்த
கடற்கரையோர கடலலைகள்
எள்ளி நகையாடுகின்தே
என் நிலை கண்டு...


நிலவினை ரசிக்கையில்
உயிரான அவன் நினைவுகள்
எரிமலையாகி என்னுள்
அணு அணுவாய் உயிர் பறிக்கும்
கொடுந் துயர் இதுவோ...

நீண்ட இரவினால்
நிம்மதியின்றி தவிக்கும்
தலையணையுடன்
சேரந்து என் மனசும்..

முத்தம்...



அந்தி சாயும் நேரம்
அன்று கடற்கரையோரத்தில்
கடலலை எமை நனைக்க
இயற்கையின் படைப்பில்
எம் கண்கள் வியக்க
அதை கண்டு நிலா
கண் சிமிட்ட
முகில்கள் தன் கண்னை மூட
சத்தமின்றி நீ
பதிந்த முத்தம்
காயவில்லை இன்னும்...

விவாகரத்து...



பேசி பேசி பார்த்தாச்சு
பேச்சும் முடியவில்லை
முடிவும் எட்டவில்லை
ஓர் முடிவினை நோக்கி
பல விதங்களில் பேச்சு
விடிய விடிய பேசினர்
விடித்த பிறகும் பேசினர்.

விரிசல்களும் அதிகரித்தன
விரக்தியுடன் வலி அதிகரிக்க
தொடர்ந்தனர் தம் பேச்சை
இருந்தும் முடிவு எட்டவில்லை
அன்பாக பேசினர்
அதிகாரமாக பேசினர்
எல்லை மீறியும் பேசி பார்த்தனர்
தீர்வு ஏதும் எட்டவில்லை
சந்தேகம் இங்கு
ஆட்சி செய்தமையால்,
புரிதல் இங்கு கேலி கூத்தானது
காதல் இங்கு கபடமானது
வாழ்க்கையே சூனியமானது.

இதற்கு பிறகும்
பேச்சு எதற்கு?
இரு மனங்களுடன் உறவாடி
தீர்க்கமான முடிவை எட்டினர்
கணவன் - மனைவி எனும்
உறவை விடுத்து
நண்பர்களாக வாழ என...

Saturday, September 10, 2011

Share

தாய்மை....


இதம் தரும் உணர்வுகளுடன்
அனுதினம் கலண்டர் கிழிக்கையில்
அச்செய்தி கிடைத்திடுமோ - என
ஏங்கத்துடன் இருந்த அவள்,

ஆண்டு பல கடந்தும் - அவள்
புரிந்திட்ட நன்மையின் விளைவால்
ஆண்டவனின் அருளால்
அவள்தன் தங்க வயிற்றில்
குட்டி நிலா துயில் கொள்ள
தனியான இடம் அமைத்து
பெண்மைக்கே பெருமை சேர்க்கும்
தாய்மை என்னும் உறவுக்குள்
நகர தொடங்கி விட்டாள்
இன்று முதல்...

வெறுமையாய் இருந்த அவள்
முழுமையாயாய் ஆனாதினால்
ஆனந்தத்தில் மூழ்கியே
சரணடைகின்றாள் தன்
கணவன் மடியில்....

பிரிவால் துவண்டு இருந்த
உறவினர் முகங்களிலே
ஆயிரம் மின்னல் அடித்திடும்
புன்னகையின் பிரதிபலிப்புக்கள்..

குட்டி நிலவின்
வரவை எண்ணி
கலண்டரின் அருகில்
காத்திருப்பது அவள் மட்டுமல்ல
அவளின் தாய்மையும் கூட...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக