வியாழன், 8 டிசம்பர், 2011

சில்மிஷம்.....


சில்மிஷம்.....



வெறுமை என்னை
ஆட்கொள்ளும் தருணங்களில்
துணைக்கழைக்கின்றேன்
உன் நினைவலைகளை
அது என்னை
சீண்டுவதும்
கெஞ்சுவதும்
கொஞ்சுவதும்
அடிமையாவதும்
உணர்வுகளை தூண்டுவதும் - என
தொடர்கின்றது சில்மிஷங்கள் - நீ
என் அருகில் 
இல்லாமல் போனாலும்கூட...

இன்றைய மனித வாழ்வு...

நிஐயங்கள் கூட
நிழலாகி போகின்றது
நிதர்சனங்கள் கூட
நிச்சயமற்று போனதால்
நிம்மதி இழந்து
நிலை குலைந்து
நிர்க்கதியற்று போனது
இன்றைய மனித வாழ்வு....

வாழ்க்கை சிறையில்...

 "அழகை விடுத்து
அறிவை நேசித்தேன்...."
"பணத்தை விடுத்து
பாசத்தை நேசித்தேன்..."
"ஆடம்பரத்தை விடுத்து
அடக்கத்தை நேசித்தேன்..."
"ஆணவத்தை விடுத்து
அன்பை நேசித்தேன்...."
இருந்தும் இன்று
வாழ்க்கை என்னும் சிறையில்...
தூக்குத் தண்டனை கைதியாக........

தாமரை போல்...

 சூரியன் உதயத்திற்கு
காத்திருக்கும்
தாமரை போல்...
உன் மார்பில் சாய்ந்து
ஆதங்கம் தீர்ந்திட
காத்திருக்கிறேன்
உன் நினைவுகளுடன்...!

சிறகினை தந்து பறிப்பது நியாயமா?

இவ் உலகில் என்னையறிந்து
அன்பெனும் சிறகினை தந்து
உறவெனும் உரிமை தந்து
உயரப்பறக்க வைத்தாய்
உல்லாசமாய் ரசித்து சிலிர்க்கையிலே
அன்பெனும் சிறகினை
அடிமையென ஆயுதங் கொண்டு
வெட்டியே சரிக்கின்றாய்
சிறகினை தந்து பறிப்பது நியாயமா?

குடும்பமாய் கூடு கட்டி
வாழ்ந்திட ஆசைகொண்டேன்

மரமான உன்னை தாக்கியது யாரோ-ஆனால்
கூட்டை தாக்கியது நியே...!
விதியா இல்லை சதியா தெரியவில்லை
கூடு இழந்து தவிக்கும் என் சிறகினை
மீ்ண்டும் மீண்டும் பறிக்கின்றாய்....!
பறக்க தான் நினைக்கின்றேன்
மரமாய் என்னை தாங்கும்
உன்னை விட்டு பறப்பதற்காய் அல்ல
உன் உணர்வுகளை மதிக்கும்
ஓர் பறவையாய்.....!

அன்பெனும் அமுதத்துடன்
செளிர்ப்பாய் இருந்த உன் உள்ளம்
அடிமையெனும் விசம் கலக்க பட்டு
பட்டமரமாய் உன் உள்ளம்...
விசத்தனை கக்கி  அன்பெனும் அமுதத்தை விழுங்கி
மீண்டும் செழித்து வளந்திடு
மீண்டும் உன்னில் கூடு கட்டி 

உறவாடிட உதவிடு
சிறகொடிந்த பறவையாய் காத்திருப்பேன்
உனக்காக அல்ல
நீ தரும் அன்பெனும்  சிறகுக்காய்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக