வியாழன், 8 டிசம்பர், 2011

பட்டணத்தில் பாதி -எழுதியவர் :கவிஞர் வாலி


கவிக்களஞ்சியம் பட்டணத்தில் பாதி -எழுதியவர் :கவிஞர் வாலி

Post by brightson on Wed Oct 12, 2011 10:00 am

பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான்
எடுத்தான்.... முடித்தான்.... ஹோய்...
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான்
அதில் எட்டடுக்கு மாடி வைத்து
கட்டிடத்தை கட்டி விட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தார்
மண்ணை கொட்டியவன் வேலி எடுத்தான்.... ஹோய்...
(உண்டாக்கி)
 

கவிக்களஞ்சியம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - உலகச் செம்மொழி தமிழ் - கலைஞர் கருணாநிதி

Post by brightson on Wed Oct 12, 2011 9:40 am
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - உலகச் செம்மொழி தமிழ் - கலைஞர் கருணாநிதி



பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம் -
உழைத்து வாழ்வோம்....

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவ
ே அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்..,(4)

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்...(2)

ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான தமிழ் மொழியாம்...(4)

கம்ப நாட்டாழ்வாரும்
கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர்-தரும்
புத்தாடை அனைத்துக்கும்
வித்தாக விளங்கும் மொழி

செம்மொழியான தமிழ் மொழியாம்...(3)

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி

ஓதி வளரும் உயிரான உலக மொழி...(2)
நம்மொழி நம் மொழி - அதுவே

செம்மொழியான தமிழ் மொழியாம்...
தமிழ் மொழி...தமிழ் மொழி...தமிழ் மொழியாம்..

செம்மொழியான தமிழ் மொழியாம்...(4)

தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்..(2)

வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே...(2)

- கலைஞர் கருணாநிதி

கவிக்களஞ்சியம் தமிழா தமிழா நாளை நம் நாளே - வைரமுத்து

Post by brightson on Wed Oct 12, 2011 9:38 am
தமிழா தமிழா நாளை நம் நாளே - வைரமுத்து

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது

- வைரமுத்து

கவிக்களஞ்சியம் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு ! - கவிப்பேரரசு வைரமுத்து

Post by brightson on Wed Oct 12, 2011 9:36 am
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு ! - கவிப்பேரரசு வைரமுத்து

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு , இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.
இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு.

பிறந்த பிள்ளை நடந்து பழக கையில் வேலை கொடுப்போம்.
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறி புதைப்போம்.

யுத்த சத்தம் கேட்டால் போதும் முத்தச்சத்தம் முடிப்போம்.
ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி வெற்றி தாமரை பறிப்போம்.

எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள் எங்கள் நிலத்தில் உரமாகும்.
எங்கள் பெண்ணை தொட்டவன் கைகள் எங்கள் அடுப்பில் விறகாகும்.

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு, இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.
இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு !!

- கவிப்பேரரசு வைரமுத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக