செவ்வாய், 13 டிசம்பர், 2011

மறவாதே...


மறவாதே.....
நெஞ்சத்தில் அறிவதை விதைக்கும்
அறியாமை இருளை அகற்றும்
ஆசானை என்றும் மறவாதே.
பொல்லாத பொறாமை தவிர்த்து
இன்னல் செய்தவரையும் உவக்கும்
நற்குணம் கொண்ட பெருந்தகையை
போற்றிட நீயும் மறவாதே.
உன் புகழ் பாரினில் பரிணமிக்க
ஏணியாய் இருந்துன்னை உயர்த்திட்ட
பெரியார் சேவையை மறவாதே
தன் சேயாய் உனை அரவணைத்த
தன்னலமற்ற ஆசானை
கண்ணியப் படுத்த மறவாதே
ஏட்டுக் கல்வி மட்டுமின்றி
உலகை அறிய பலவகையில்
உதவிகள் செய்த உத்தமரை
நினைத்திட நீயும் மறவாதே....
- பூங்காற்று
விடை சொல்
முதலில் பார்த்தது,
நீயா நானா?
கண்கள் கலந்தது
அன்றா? பின்பா?
இதயம் பேசியது
வார்த்தையிலா? மௌனத்திலா?
உதடுகள் உதறியது
மெய்யா? பொய்யா?
என்னை தொலைத்தது
காதலா? மோதலா?
கேள்விகள் வளர்ந்ததால், நான்
கவிஞனா? கிறுக்கானா?
விளக்கம் வேண்டி தவிக்கிறேன்....
பதில் சொல்ல வருவாயா? மாட்டாயா?....
விடை சொல்.....விதியே....என் சகியே....
- சங்கீதா செந்தில்
 
நீயில்லா நான்..
வார்த்தைகளே இன்றி
வாக்கியம் அமைத்தேன்...
வர்ணமே இல்லாமல்
வானவில் செய்தேன்.....
மேகமே இல்லாமல்
மழையினை அழைத்தேன்....
மென்மையே இல்லாமல்
தென்றலை பிடித்தேன்....
நீயே இல்லாமல் என்னை படைத்தேன்...
மறுநொடி மண்ணில் விழுந்தேன்...
மீண்டும் எழுந்தேன்...
உன்னை இணைத்தேன்...
பெண்ணாய் ஜொலித்தேன்.....
- சங்கீதா செந்தில்
 
 


3.666665
(3 votes)
Your rating: None






நம்மை ஆளாக்கியோர்களை மறக்க கூடாது என்பதை அழகா சொல்லியிருக்கீங்க
வாழ்த்துக்கள்
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
கலக்குறீங்க.... செம காதல் கவிதை வரிகள்!!!
அவனில்லாமல் என்னை உருவாக்கினால் நான் கூட அழகில்லை.......... ஆஹா.... அற்புதம்
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
அட்மின் அண்ணா எனது கவிதையை வெள்யிட்டமைக்காக நன்றிகள்.
////முதன் முதலில் கருத்து வெளியிட்ட ஆமினாவுக்கு நன்றிகள்.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
சங்கீதா அருமை....
சங்கீதா உங்க கவிதை எழிமையா சீக்கிறம் புரியும் படியா இருக்கு வாழ்த்துக்கள் அழிகிய கவிதை தந்தமைக்கு..........
அன்புடன்
லதா....
நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........
சங்கீதா உங்களுக்காய் ஒரு பதில் கவிதை சொல்லட்டுமா,
/ பைத்தியம் எனக்கென்று தெளிவாய்த் தெரிந்தது
வைத்தியம் நீயென்ற உண்மை புரிந்தது
வைத்தியர் யாரென்ற வினாதான் எழுந்தது?
////
அழகாயிருக்கு உங்க வரிகள் ,வாழ்த்துக்கள்
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
அன்பு பூங்காற்று,
ஆசிரியர் தினம் நெருங்கி வரும் நேரத்தில், உங்கள் கவிதை, அழகான சமர்ப்பணம் ஆக வந்திருக்கிறது, பாராட்டுக்கள்!
அன்பு சங்கீதா,
அன்பின் அழகை, அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள், பாராட்டுக்கள்!
அன்புடன்
சீதாலஷ்மி
அன்பு சீதாலக்‌ஷ்மி அம்மா உங்கள் அன்பு கலந்த கருத்த்க்கு நன்றிகள்.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
அருமையான கவிதை. கல்வி என்பது வியாபாரமாக மாறி கொண்டிருக்கும் சூழலில், இது போன்ற கவிதைகள் நிறைய வர வேண்டும். இதை மாணவர் மட்டுமின்றி ஆசிரியரும் படித்து ஆசிரிய பணியின் பெருமையை உணர வேண்டும்.
அன்புடன்,
ராம்...
நாகா ராம் காதல் கவிதைகளை மட்டும் ரசிக்கும் ரசிகர்கள் மத்தியில் உங்களைப் போன்றோரின் கருத்துக்கள் இன்னும் எழுதத் தூண்டுகிறது. நன்றி
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்,..
கவிதையை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி...
கவிதையை பாராட்டி எனக்கு உற்சாகம் அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.......
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
பூங்காற்று மேம்!விதை பெரிய விருட்சமாய் வளர்ந்தாலும் வேர்களை மறந்துவிடக்கூடாது..நீங்கள் வேர்களை மறக்காது உயரமாய் வளர்ந்து நிற்கும் ஓர் விருட்சம்!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
சங்கீதா மேம்!உங்களது கவிதைகள்"கொடி அசைந்ததும் காற்று வந்ததா?காற்று வந்ததும் கொடி அசைந்ததா"பாடலை நினைவு படுத்தியது...கேள்விகளால் ஒரு வேள்வி !சரிதானே?
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஷேக் அண்ணா உங்க கருத்துக்கு நன்றி ஆனாலும் அந்தப்புகழ்ச்சிக்கு நான் போதவில்லை,
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
பர்ஹானா கவிதை நல்லாருக்குப்பா படிக்க படிக்க அருவியா கொட்டுது [வார்த்தைகள்]
உங்க கவிதையே படுச்சுட்டு வந்த வார்த்தைகள்ப்பா...........வாழ்த்துக்கள்
உதவி செய்தால் உண்மையாக செய்
திருப்திஅடைவாய்
அன்புடன்
பல்கிஸ்
மிக்க மகிழ்ச்சி......உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி......
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக