மகிழ்வுடனும் ஆரவாரத்துடனும் அகிலன் அவர்களை அன்போடு வரவேற்கிறோம் வாருங்கள் நண்பரே
கலந்து மகிழுங்கள் என்றும்
,.*************************************************************************
எங்களோடு ஒட்டி உறவாடிய அன்பு உறவின் வலைப்பூவில் இருந்து
வந்துள்ளீர்கள் உங்கள் வரவும் நல்வரவாகட்டும்
என்றும் இணைந்து இருங்கள் எங்களுடன் உங்களின் இணைப்பில் மகிழ்ச்சி
***********************************************************************************

நண்பன் wrote:வாவ் அடை மழை அவர்களை அழைத்துச்சென்று அவர்களின்
காதலை வெளிப்படுத்துவதற்கு வழி அமைத்துக்கொடுத்தது சூப்பரான நேரம் ஒரு பாடலும்
இட்டுரிந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.
சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென ...
உயிரே · எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் ·
ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்
அப்றம்
சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென .....
எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் · ஒரு
மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்
இப்படி ஒரு சிலு சிலு பாடலும் இடம் பெற்றிருக்க வேண்டும் பொறுத்திருந்து பார்ப்போம் இவர்கள் காதல் எங்கு சென்று முடிகிறது இது வரை ரசிக்கும் ருசிக்கும் படியாக இருந்த ஒரு தலைக்காதல் இப்போது இருவருக்கும் தெரிய வந்துள்ளது தொடருங்கள் தல பார்க்கலாம் படிக்கலாம் ரசிக்கலாம் என்றும் நன்றியுடன்
நண்பன்.

*********************************************************************************
திட்டமிடும் மனதா
வட்டமிடும் கருவிழியா
பட்டென்று சொல்லோன்றால்
சுட்டுவிடும் இதழா
அருமையான நெடிய
கரு விழிகொண்டு
உருவத்தினை நெஞ்சினிலே
அருவமாய் சேர்க்க வைத்தவளே
மண்ணின் பெருமை
மஞ்சளின் பெருமை
பாருக்கே உணர்த்துபவளே
அட்மினுக்கா காதல்
கற்றுத் தந்தாய்.....
கற்றதினைக் கனிவோடு தான்
மட்டற்ற மகிழ்வுடனே
பெற்றதனை நன்றாய் தான்
கவியினை
காதலின் நினைவுகளை தொடர்கிறார்
கன்னி உனக்கும்
அட்மினுக்கும் வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்களின்
என்ன ஓட்டங்கள்!

வசந்த காலம்
அது என் இளமை காலம்
வசந்தங்கள் வீசிய பொற்காலம்
எனக்கென்று ஒரு பரிசாய்
இறைவன் கொடுத்த
அன்பு தேவதை அவள்
வானில் பூத்த
நட்சத்திரங்களாய
அவள் இதய வாசல் திறந்திட
புதிதாய் பிறந்த உணர்வு
ஏதோ....
பாலைவனத்தில்
ஒரு துளி தண்ணீர்
கிடைத்த இன்பம்....
கடிதங்கள் பல எழுதினோம்....
சுவாசங்களாய் வாழ்ந்தோம்....
கற்பனை உலகில் மிதந்த்ட
காதல் தோணியாய்
நானும் அவளும்
“என்னோடு அவள் வாழ்வு”
என் வாழ்வின் அர்த்தம்
சொல்லிய அவளோடு வாழ்த்திட
இன்றும்
கடிதங்கள் எழுதுகின்றேன்
அவளின் கல்லறைக்கு
கனவில் மட்டுமாவது
வந்து விடுவாளோ
என்று எண்ணியே..!..
அது என் இளமை காலம்
வசந்தங்கள் வீசிய பொற்காலம்
எனக்கென்று ஒரு பரிசாய்
இறைவன் கொடுத்த
அன்பு தேவதை அவள்
வானில் பூத்த
நட்சத்திரங்களாய
அவள் இதய வாசல் திறந்திட
புதிதாய் பிறந்த உணர்வு
ஏதோ....
பாலைவனத்தில்
ஒரு துளி தண்ணீர்
கிடைத்த இன்பம்....
கடிதங்கள் பல எழுதினோம்....
சுவாசங்களாய் வாழ்ந்தோம்....
கற்பனை உலகில் மிதந்த்ட
காதல் தோணியாய்
நானும் அவளும்
“என்னோடு அவள் வாழ்வு”
என் வாழ்வின் அர்த்தம்
சொல்லிய அவளோடு வாழ்த்திட
இன்றும்
கடிதங்கள் எழுதுகின்றேன்
அவளின் கல்லறைக்கு
கனவில் மட்டுமாவது
வந்து விடுவாளோ
என்று எண்ணியே..!..
*******************************************************************************
சிரிக்கும் சிரிப்பினில்
பரிகசிக்கும்
சிரிப்பா பரவசம்
கொள்ள வைக்கும்
உரிமையான சிரிப்பா!
அழுது கேட்கும் குழந்தையா
பழுது இல்லா நட்பா
விழுது இல்லா ஆலமரமா
உழுது பண்படுத்தும் விவசாயியா
அறிந்தவற்றை அறியாதவன்
தெரிந்தவற்றை பகிராதவன்
இருந்தென்ன லாபமென்று
கருத்தொன்றினை கண்டேன்
வரவேற்பு மடலொன்றினை
வரவேர்ப்பினில் கண்டு
உள்ளம் நெகிழ்ந்தது
உதட்டினில் முறுவல் பூத்தது
உணர்ந்த பின் மலர்ந்தது
சிரிப்பாய்....!சிரிப்பு !
********************************************************************************

மலர்ந்த பிஞ்சு ஒன்றினை
காண வரும்
அனைவரையும் முகமறின்தா
கொஞ்சும் மொழி அறிந்தா
மலரிதழினை விரித்து
பல்லில்லாத தனது
பொக்கை வாய்தனை
திறந்து மெல்லிய
புன்னகை காட்டுவதனை
காணும் உள்ளமும்
மலருமே அன்று மலர்ந்த
மலராய் .....
பாசமுள்ள மலராய்
மாறும் மனமுமே!
உறவென்று கூறி
அழைத்த இப் பிஞ்சினை
அழைக்கும் சேனை
உறவுகளுக்கு
பிஞ்சாய் மலர்கிறேன்
அகிலனான
நானுமே!
காண வரும்
அனைவரையும் முகமறின்தா
கொஞ்சும் மொழி அறிந்தா
மலரிதழினை விரித்து
பல்லில்லாத தனது
பொக்கை வாய்தனை
திறந்து மெல்லிய
புன்னகை காட்டுவதனை
காணும் உள்ளமும்
மலருமே அன்று மலர்ந்த
மலராய் .....
பாசமுள்ள மலராய்
மாறும் மனமுமே!
உறவென்று கூறி
அழைத்த இப் பிஞ்சினை
அழைக்கும் சேனை
உறவுகளுக்கு
பிஞ்சாய் மலர்கிறேன்
அகிலனான
நானுமே!
****************************************************************************
நாட்டு ஆப்பிள் எனும்
பேரிக்காய்
உரிமையோடு பேசவந்தேன்
இன்று உங்களோடு!
குறிப்பிட்ட பருவத்தில்
மட்டுமே காணும்
அனைவருமே எனை
காயென நினைத்திட்டால்
அது வீணே!
பழமென்று கடித்திட்டால்
அறுசுவையும் நீரும்
கலந்துங்களுக்குத் தருவேன்
நானுமே!
எனை தினமும் புசிப்போர்க்கு
சிறு நீரகத்தினிலே
கல்லடைப்பு ஏற்படாமலே
தடுத்திடுவேனே!
தாய்ப்பாலின்றி தவிக்கும்
குழந்தையின் கவலைப்
போக்கவும் நான் என்றும்
உதவுவேனே!
வயிற்ருப் போக்கினையும்
வாய்ப் புண்ணினையும்
வளரும் குழந்திகளுக்கும்
உதவுவேனே!
என்றும் புசியுங்கள்
நன்றாய் வாழுங்கள்
அன்பான என்கருத்தினை
கனிவோடு பகிருங்கள்!

என் விழியைத்துளைத்து
விரகத்தில் நுழைத்து
வீதியில் என்மடியில் உன் சில
நினைவுகளை மட்டுமே
விட்டுவிட்டு விரைந்தவனே
உனக்குத்தெரியுமா?
எங்கோ ஒரு நதியில்
சருகைப்போல் உதிர்ந்து
நதியின் ஓட்டத்தோடு
பயணிக்கும் உன்னை
சுமக்கும் அந்த நீர்மடியும்
என்னுடையது தான் என்பது
விரகத்தில் நுழைத்து
வீதியில் என்மடியில் உன் சில
நினைவுகளை மட்டுமே
விட்டுவிட்டு விரைந்தவனே
உனக்குத்தெரியுமா?
எங்கோ ஒரு நதியில்
சருகைப்போல் உதிர்ந்து
நதியின் ஓட்டத்தோடு
பயணிக்கும் உன்னை
சுமக்கும் அந்த நீர்மடியும்
என்னுடையது தான் என்பது
*****************************************************************************
மலர்கள் கொட்டப்பட்ட பாதையில்
நீ நடந்து கொண்டிருந்தால்
நீ சாதிக்க வேண்டியதை விட்டுவிட்டு
அங்கேயே அதிலையே தூங்கிவிடுவாய்
அதனால்தான் என்னவோ
இலட்சியவான்களுக்கென்றே
கறடு முறடான பாதை
நிச்சியிக்கப் பட்டிருக்கிறது
நீ அடையவிருக்கும் இலக்கு
சத்தியமாக வேண்டுமானால்
இன்னல்களையும் இடறல்களையும்
சந்திக்கதான் நேரிடும்
இன்னல்களும் இடறல்களும் உன்
இலட்சிய பயணத்துக்கு தடையாக
இடையுறாக அமைந்து விட்டாலும்
அப்போதும்
சாதிக்க வேண்டியதை
சாவை வென்றேனும்
சாதித்தேயாக வேண்டுமென்ற
சலிப்புத்தன்மையை தன்னகத்தே
கொண்டு நட நாளை
தாரகை தங்கங்களாக உன்
வாழ்வு பிரகாசமளிக்கும்
இன்னலுக்குப் பின் இனிமை
என்று ஆன பிற்பாடு
இழந்து வந்தவைகளை
மீண்டும் அனுபவிக்க உன்
மனம் ஏங்கித்தவிக்கலாகும்
அப்போது நீயாக உணர்வாய்
அமிர்தம் நஞ்சானதையிட்டு....

சில்லென்ற காற்று மெதுவாக
மேனியை தடவிச் செல்லும்போது
பனிமூட்டத்தினுல் இருந்து
என் தேவதையே என்னைத்
தொடுவதாய் உணர்கிறேன்
தொடாமல் முத்தங்களென்றும்
பார்க்காமலேயே பாசாங்குகளென்றும்
உன் நினைவுகளின் ஒரு பகுதியாய்
தொடராய் தொடர்ந்து செல்கிறது
உரசல்கள் இல்லாத உணர்வுகளும்
தீண்டல்கள் இல்லாத தித்திப்புகளும்
நீ விலகி இருக்கையிலையே
அவைகளை அனுபவிக்க முடிகிறது
உன்னுடைய நினைவுகள்
இருட்டிய என் போர்வைக்குள்
செந்தூர ஜோதியாய்
எரிந்து கொண்டிருக்கிறது
உறக்கத்தின் ஆரம்பத்திலையே
போர்வையாய் உன் நினைவுகளை
போர்த்திக்கொள்கிறேன் ஆனால்
விழிகளுக்குத் தடைகளாய் என்
கண்களுக்குள் நீ உறங்குகிறாய்
ஆனால் உன்னுடனான
ஊடல்களின் நினைவுகளில்
உணர்ச்சிகள் ஏனோ கிழர்ச்சியாகிறது
மேனியை தடவிச் செல்லும்போது
பனிமூட்டத்தினுல் இருந்து
என் தேவதையே என்னைத்
தொடுவதாய் உணர்கிறேன்
தொடாமல் முத்தங்களென்றும்
பார்க்காமலேயே பாசாங்குகளென்றும்
உன் நினைவுகளின் ஒரு பகுதியாய்
தொடராய் தொடர்ந்து செல்கிறது
உரசல்கள் இல்லாத உணர்வுகளும்
தீண்டல்கள் இல்லாத தித்திப்புகளும்
நீ விலகி இருக்கையிலையே
அவைகளை அனுபவிக்க முடிகிறது
உன்னுடைய நினைவுகள்
இருட்டிய என் போர்வைக்குள்
செந்தூர ஜோதியாய்
எரிந்து கொண்டிருக்கிறது
உறக்கத்தின் ஆரம்பத்திலையே
போர்வையாய் உன் நினைவுகளை
போர்த்திக்கொள்கிறேன் ஆனால்
விழிகளுக்குத் தடைகளாய் என்
கண்களுக்குள் நீ உறங்குகிறாய்
ஆனால் உன்னுடனான
ஊடல்களின் நினைவுகளில்
உணர்ச்சிகள் ஏனோ கிழர்ச்சியாகிறது
****************************************************************************
பாரெங்கும் பரவியுள்ள பைந்தமிழாள் உந்தனுக்கும்
ஈரைந்து மாதங்கள் எனைச்சுமந்த தாய்மைக்கும்
சீராட்டிச் சிற்றறிவைச் செப்பனிட்ட தந்தைக்கும்
நீராட்டிப் பாதமலர் நனைக்கின்றேன் நன்றியுடன்!
மங்கிடாத தமிழாலே மண்ணிசைத் திருவிழாவை
தங்கும்படி மனத்தினிலே தொகுத்துரைக்கு மெனையழைத்து
இங்கிருக்கும் கவிஞரோடு என்கவிதை வேண்டுமெனும்
அங்கிருந்து வந்தகவி கபிலனுக்கும் என்நன்றி
நன்றிமலர் துவியபின் என்தமிழின் வாசனையை
இன்றிந்த அரங்கினிலே நிறைத்திடவும் முயலுகின்றேன்
“என்”என்ற தலைப்பினிலே எனைப்பாட அழைத்தவுடன்
எண்ணத்தில் தோன்றியதோ என்தமிழர் தேகபலம்.
தொலைக்காட்சிப் பெட்டியிலும் தொலைபேசி அரட்டையிலும்
அலைகடலாய் கணினிவந்து ஆரவாரம் செய்வதிலும்
இலையென்று ஆனதுநம் கலைகளோடு விளையாட்டும்
குலைகிறது அதனாலே கேள்வியின்றி தேகபலம்! ……(1)
ஓப்பற்ற வீரராக உயர்தமிழர் வாழ்ந்ததாக
முப்பாட்டன் காலத்து வரலாறும் உரைக்கிறது
திறம்செறிந்த ஆண்போலே பெண்ணிருந்த தாலன்று
முறம்கொண்டு புலியடித்து விரட்டியதாய் கதையுண்டு …..(2)
இத்தனை பலம்கொண்ட எம்முன்னோர் வழிவந்தோர்
சொத்தையாகிப் போனதின்று ஏனென்று ஆராய்ந்தால்
மொத்தமாக விட்டுவிட்ட விளையாட்டும் கலைகளுமே
அத்தனைக்கும் காரணமாய் ஆனதுதான் வேதனையே! …..(3)
கால்கொலுசு சத்தமிட களங்கமற்ற சிரிப்புடனே
பால்மறந்த பிஞ்சுமுதல் பள்ளிசெல்லும் சிறுமிவரை
மறைந்தோடி யாடியதும் மணியூஞ்சல் ஆட்டியதும்
மறந்திடத்தான் இயலுமோ மற்றேதும் ஈடாமோ? …..(4)
இடைசெறுகிய தாவணியும் இரட்டைசடை பின்னலோடும்
இடைமெலிந்த நங்கையர்கள் தோட்டத்திலே ஒன்றுகூடி
கண்கட்டி ஆடியதும் கயிறுதாண்டி குதித்ததையும்
நொண்டியாடி நின்றதையும்; நினைக்கையிலே இனிக்கிறது! …..(5)
பந்தடித்து விளையாடிய பருவமங்கை போலன்றி
வம்புபேசும் நேரந்தனில் ஒன்றாகச் சேர்ந்திருந்து
வெற்றிலையை மென்றபடி உட்கார்ந்த இடத்தினிலே
ஒற்றுமையாய் மூத்தபெண்டிர் விளையாடினர் பல்லாங்குழி! …..(6)
சிறுவரெல்லாம் சேர்ந்துஇரு கூட்டமாகப் பிரிந்துநின்று
சிறுகுச்சியொன் றுபோடஅதைச் சடுதியிலே அடித்துவிட்டு
சிறுகுழியில் வீழாமல் வேகமாகத் தடுக்குமந்த
சிறப்பான புல்லியாட்டம் சிந்தைக்குள் சிலிர்க்கிறது! …..(7)
சின்னஞ்சிறு பாலகர்கள் வரிசையாக குனிந்திருக்க
தன்கையை ஊன்றிவைத்து மற்றவர்கள் தாண்டிவர
சின்னதான கால்படாது சிரத்தையோடு ஆடுமந்த
பொன்குதிரை தாண்டுமாட்டம் இன்றெங்கே இருக்கிறது? …..(8)
தொட்டுவிட முயலும்போது காலிழுத்து விட்டபின்பு
சுற்றிவளைத் தெல்லோரும் தூக்கியெடுத் தப்படியே
துள்ளுகின்ற எதிராளைத் தொடவிடாது கோட்டினையே
எள்ளிவிளை யாடுமந்த சடுகுடுவும் போனதெங்கே? …..(9)
மஞ்சளோடு கருமையை உடல்முழுதும் பூசிக்கொண்டு
அஞ்சியோடும் குழந்தைகளைச் சிலநேரம் அழவைக்கும்
நெஞ்சுவிம்மும் சீற்றத்தோடு ஆடும்புலி யாட்டமட்டும்
எஞ்சியள்ள திப்போதும் எங்கோசில இடந்தன்னில்! …..(10)
தமிழர்களின் கலைகளெல்லாம் தானமாகத் தந்துவிட்டு
இமியளவும் கவலையின்றி நாமிருக்கும் காரணத்தால்
களரியோடு கதகளியும் வர்மக்கலை நாட்டியமும்
மலையாளக் கலையாகி மர்மத்தோடு சிரிக்கிறது! …..(11)
இதுபோன்ற விளையாட்டு ஏராளம் இன்னுமுண்டு
இதையெல்லாம் விட்டுவிட்டு கணினியிலே கால்பந்தும்
முகநூலில் கட்டிடமும் கட்டிவிளை யாடுவதால்
தெருவெல்லாம் சிறுவரின்றி வெறிச்சோடி இருக்கிறது. …..(12)
வேறினத்தோர் கலைகள்மேல் வெறிகொண்டு ஏற்கின்றோம்
வேரூன்றிய நம்கலையை வெட்கமென விடுகின்றோம்
சீர்;ம்pக்க குலத்துதித்த சிந்துவெளிக் கலைகளெல்லாம்
சீர்குலைந்து போவதுதான் சிறிதேனும் நியாயமா? ….(13)
கோலெடுத்துச் சுழற்றுகின்ற சிலம்பாட்டம் சுருளியோடு
வாளெடுத்துச் சுழற்றுகின்ற வாள்வீச்சும் மறந்துவிட
பாறையினைத் தூக்கிதனது வீரத்தை நிலைநாட்டிய
தேரிழுத்த சீலர்குலம் சீக்காளி ஆனதின்று! …(14)
சுற்றிவந்து எத்தனைதான் நடைப்பயிற்சி செய்தாலும்
சற்றுமந்த சர்க்கரையும் குறையாமல் தவிக்கின்றான்
மற்றுமந்த எரிச்சலிலே குருதிகொஞ்சம் கொதித்தபின்தான்
பற்றுவந்து விடுகிறது கேழ்வரகு கம்புமீது!… (15)
விருதுக்கு மட்டுந்தான் விளையாட்டென் றாகிவிட
விரும்பியவர் மட்டும்சில விளையாட்டைப பயில்கின்றார்;
குறிப்பிட்ட விளையாட்டை மட்டுமவர் ஏற்றதால் - நான்
குறிப்பிட்ட ஆட்டமெல்லாம் நியாபகங்கள் ஆனது!
விரலசைவில் உலகம்தான் மறுக்கவில்லை ஏற்கின்றேன்
விரல்மட்டும் அசைந்துகொண்டு உடலில்பல மில்லையென்றால்
வெறுதாவாய்ப் போய்விடும்நம் விஞ்ஞானமும் வளர்ச்சியும்
வெறும்வார்த்தை யில்லையிது விளையாட்டை ஏற்றுவிடு…….(16)
விலையில்லாக் கலையாலே உரம்பாய்ச்சிய உடலாக
பலமிக்க சந்ததியைப் பாருக்கு நாம்கொடுப்போம்
அறிவோடு ஆற்றலும் அவனியிலே மிக்கவர்கள்
தரமானத மிழர்கள்தான் எனவியக்க வாழ்ந்திடுவோம்! (17)
அன்புடன்
யாதுமானவள் (லதாரணி )

**************************************************************************
இன்னும் பசுமைகள் நிறைந்தே உள்ளன
பெருநாட்களின் நினைவுகளில்,
அதிகாலை தொடங்கும் குளியலுடன்,
தொட்டுத்தொட்டே தேய்ந்த புத்தாடைகள் சரசரக்க
மருதாணிக் கைகளுடன் அம்மா தரும் பட்சணங்கள் பெருநாளை வாசமாக்கும்.
புதிய பத்து ரூபாய் நோட்டொன்று அப்பாவிடமிருந்து
அடுத்த கணம் முதல் உலகில் நாந்தான் பணக்காரன்.
ஊதல்கள் தேடி, துபாக்கிகள் தேடி கடைத்தெருக்களில் கால்கள் அலையும்
கூடவே பத்து ரூபாயின் பெருமை சொல்லி..
பகல் உணவு – மகிழ்வுடனும் வீட்டுச்சேவல் பிரிந்த சோகத்துடனும் முடிய
மாமா வீடு தேடி ஓடுவோம் – இன்னொரு பத்து
இறுதியில் அதுவும் சர்பத், சாக்லேட் என முடிந்து போக…
கைகள் வெறுமையாக மனசு வழியும் மகிழ்வோடு,
மறுநாள் பாடசாலை செல்வோம் பை நிறைய பெருநாள் கதைகளோடு..
பெருநாட்களின் நினைவுகளில்,
அதிகாலை தொடங்கும் குளியலுடன்,
தொட்டுத்தொட்டே தேய்ந்த புத்தாடைகள் சரசரக்க
மருதாணிக் கைகளுடன் அம்மா தரும் பட்சணங்கள் பெருநாளை வாசமாக்கும்.
புதிய பத்து ரூபாய் நோட்டொன்று அப்பாவிடமிருந்து
அடுத்த கணம் முதல் உலகில் நாந்தான் பணக்காரன்.
ஊதல்கள் தேடி, துபாக்கிகள் தேடி கடைத்தெருக்களில் கால்கள் அலையும்
கூடவே பத்து ரூபாயின் பெருமை சொல்லி..
பகல் உணவு – மகிழ்வுடனும் வீட்டுச்சேவல் பிரிந்த சோகத்துடனும் முடிய
மாமா வீடு தேடி ஓடுவோம் – இன்னொரு பத்து
இறுதியில் அதுவும் சர்பத், சாக்லேட் என முடிந்து போக…
கைகள் வெறுமையாக மனசு வழியும் மகிழ்வோடு,
மறுநாள் பாடசாலை செல்வோம் பை நிறைய பெருநாள் கதைகளோடு..
*******************************************************************************
ஓசோனை
ஓட்டையிட்டாலும்;
தவிர்க்கமுடியாச்
சாதனத்தில் ஒய்யாரமாய்;
முதன்மையில் நீயும்!
நாளில் கெட்டுப்போகும்
சாமன்களையெல்லாம்;
சாமான்யமாக
வாரத்திற்குக் கொண்டுச்சென்று;
என் வயிற்றில் அடிக்கிறாய்
ஆரோக்கியமின்மையால்!
மூச்சுத்திணற
பொருள் ஏற்றினாலும்;
குளு குளுவென நீ;
உனை அவசியத்திற்கு
வாங்கிய நானோ;
புவி வெப்பத்தால் சூடாகி!குளிர்சாதனப் பெட்டி
ஓட்டையிட்டாலும்;
தவிர்க்கமுடியாச்
சாதனத்தில் ஒய்யாரமாய்;
முதன்மையில் நீயும்!
நாளில் கெட்டுப்போகும்
சாமன்களையெல்லாம்;
சாமான்யமாக
வாரத்திற்குக் கொண்டுச்சென்று;
என் வயிற்றில் அடிக்கிறாய்
ஆரோக்கியமின்மையால்!
மூச்சுத்திணற
பொருள் ஏற்றினாலும்;
குளு குளுவென நீ;
உனை அவசியத்திற்கு
வாங்கிய நானோ;
புவி வெப்பத்தால் சூடாகி!குளிர்சாதனப் பெட்டி
********************************************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக