புதன், 14 டிசம்பர், 2011

பூக்களுக்கு அழகு குறிப்பு

பூக்களுக்கு அழகு குறிப்பு

தோட்டத்து பூக்களெல்லாம்
அழகு குறிப்பு கேட்கிறது..
உன்னிடம்.. 
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

மிளகாய் கவிதை

நீ குளித்த நீர் போவதால்தான்
உன் வீட்டு மிளகாய் செடியும்
இனிப்பாய் காய்க்கிறது..

இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

தித்திப்பு.

தித்திப்பிற்காய் எதற்கு இவ்வளவு சர்க்கரை?
பலகாரத்திற்கு உன் பெயர் வைத்தாலே போதுமே! 
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

வெட்கம்

நீ வெட்கம் தாளாமல்
முகம் பொத்திக்கொண்டதால்
வந்ததுதான் இந்த சந்திரகிரகணமோ?
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

கண்ணாடி.

தினமும் நீ முகம் பார்க்கும்போது
கண்ணாடி தன்னை அழகாக்கிகொள்கிறது..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

Tuesday, December 13, 2011

நியாயமா?

உன் கூந்தலில் மயங்கிக்கிடக்கும் சீப்பை
கூந்தலில் மாட்டிக்கொண்டதாய் திட்டுகிறாயே? 
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

என்னாச்சு?

என்னாகி போனதெனக்கு?
குழவி ரீங்காரம் பாடினால் கூட
உன் பெயராகவே கேட்கிறது.. 
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

வெட்கம்

ஏன் இப்படி வெட்கப்பட்டு சிவந்து கொள்கிறாய்?
எனக்கு சிவப்பு ரோஜா கூட கருப்பாய் தெரிகிறது. 
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

காதல்

உன் விரல் பிடித்து
நடக்க கற்றுக்கொண்டிருகிறது
காதல்..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

வண்ணம்

வண்ணம் போதவில்லையென்றால்
இந்த பூக்கள் எல்லாம்
இப்படியா உன் மீது உரசிக்கொள்வது..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

காதல்

எப்பொழுதும் அடம்பிடிக்கும் என்னை,
உன்னிடம் கெஞ்ச விட்டுவிட்டது காதல்..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

ஏன்?

எது வேண்டும் என்றாலும்
கேட்டு பெரும் நீ
மனசை மட்டும் ஏன்
பிடுங்கிச் சென்றாய்.
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

விழிகள்

கன்னாபின்னாவென்று
என் மனசை கடித்து வைக்கும்
உன் விழிகளிடம் சொல்லி வை..
இல்லையென்றால்
மீன் கொத்திகளிடம் அவற்றை
பிடித்துக்கொடுத்து விடுவேன்.. 
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக