முஸ்லிம் தீவிரவாதிகளும் -- காவி பயங்கர வாதிகளும்
நிழலும்
நிஜமும் - வெ. ஜீவகிரிதரன் கட்டுரை
ஹைதராபாத் நகரில் மீண்டும் தீவிரவாதிகள்
தாக்குதல் - லஷ்கர் அமைப்பின் கைவரிசை என போலீஸ் சந்தேகம் 15-5-2010 சனிக்கிழமை
ஹிந்து நாளிதழின் தலைப்பு செய்தி இது. நாட்டின் எந்த மூலையில் துப்பாக்கி
வெடித்தாலும், வெடிகுண்டுகள் வெடித்தாலும், படுகொலைகள் நடந்தாலும் உடனே ஏதேனும் ஒரு
முஸ்லிம் அமைப்பின் பெயர் உடனடியாக ஊடகங்களுக்கு வழங்கப்படும். அதன் தொடர்ச்சியாக
சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள்.
பல
ஆண்டு காலம் பிணை மறுக்கப்பட்டு விசாரணைக் கைதிகளாகவே அந்த இளைஞர்கள் சிறைகளில்
வாடுவார்கள். அவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாகி, சமுதாயத்தால் வெறுத்து
ஒதுக்கப்பட்டு, பழி பாவங்களைச் சுமந்து சீரழியும். ஐந்து வருடங்களோ, பத்து
வருடங்களோ வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு நாட்டில் உள்ள அனைத்து தடா, பொடா என்ற
பயங்கரவாத தடுப்பு சட்டங்களாலும் பதம் பார்க்கப்படும். ஊடகங்களும் தத்தம் ஊகங்களை
செய்திகளால் வெளியிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளும். இறுதியில் விசாரணை முடிந்து
தீர்ப்பு வரும் போதுதான் தெரியும் கைதான இளைஞர்கள் நிரபராதிகள் என்று!
விடுதலை செய்யப்பட்ட பாவப்பட்ட அந்த இளைஞர்கள்
தங்களின் இளமையை, குடும்பத்தை, வாழ்க்கையை இழந்த நிலையில் சிறையை விட்டு வெளிவரும்
போது, ஊடகங்களால் ஹஅறிவ+ட்டப் பட்ட இச் சமுதாயம் அவர்களை நிரபராதிகளாக ஏற்றுக்
கொள்வதில்லை. சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து, தப்பித்து வெளிவந்துள்ள பயங்கரவாதி
களாகவே பார்க்கிறது. நீதிமன்றங்களால் நிரபராதி கள் என அறிவிக்கப்பட்டாலும்
இச்சமுதாயம் அவர்களை புறக்கணித்து, தனிமைப்படுத்துவதன் மூலம் கழுவேற்றிக் கொன்று
விடுகிறது.
உலகை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதல் போல்
இந்திய நாட்டை உலுக்கியது 26-11 மும்பை தாக்குதல். இந்த தாக்குதலை நடத்தியதாக
கூறப்படும் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு, தாக்குதல் இலக்குகளை வரைபடங்களாக
தந்துதவி செய்ததாக பஹீம் அன்சாரி மற்றும் சலாவுத்தீன் அஹமது அகிய இருவரும் குற்றம்
சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கெதிராக எந்த வலுவான
சாட்சியமும் போலீஸ் தரப்பில் காட்ட இயலவில்லை. நீதிமன்றம் அந்த இருவரையும்
நிரபராதிகள் என விடுதலை செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை
கேள்விக்குரியதாக்கிய மிகக் கொடூரமான மும்பை தாக்குதல் வழக்கில் கூட பாரபட்சமற்ற
புலன் விசாரணை நடத்த போலீசால் இயலவில்லை. காரணம் ஏற்கனவே அவர்களின் மூளைக்குள்
திணித்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் வெறுப்புணர்வு
டெல்லி லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில்
கைதாகி 14 வருட காலம் சிறையில் வாடிய கஷ்மீரை சேர்ந்த சகோதரர்கள் நிரபராதிகள் என
நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது மும்பை வழக்கின் தீர்ப்பு சொல்லப்பட்ட
நான்காம் நாள் நடந்தது. கஷ்மீர் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தந்ததாக கைது
செய்யப்பட்டிருந்த மவுலானா குலாம் யஹியா என்பவர் 4 வருடங்கள் சிறையில் வாடிய
பின்னர் கடந்த சனவரி மாதம் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். டேராடூன் இந்திய ராணுவ
அகாதமியை தற்கொலைப் படை தாக்குதல் மூலம் தகர்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு
கைது செய்யப்பட்ட இப்திகார் முல்லிக் ஐந்து வருடங்கள் கழித்து கடந்த சனவரியில்தான்
விடுதலை செய்யப்பட்டார். இப்திகார் முல்லிக் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
டேராடூனிலே பயோடெக்னாலஜி படித்துக்கொண்டிருந்த மாணவன். லஷ்கர் தீவிரவாதி என
முத்திரை குத்தப்பட்டு 5 வருடங்கள் சிறையில் அடைக் கப்பட்டதால் படிப்பை இழந்து,
வாழ்க்கையை இழந்து, நிரபராதி என நீதிமன்றம் கூறினாலும், சமூகத்தால்
புறக்கணிக்கப்பட்டவராக இன்று சிறை மீண்டிருக்கிறார்.
2007-ம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் ஷெரீப் ஆகியவற்றில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களுக்கு முஸ்லிம்களே காரணம் என கூறப்பட்டது. ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்கு காரணம் எனக் கூறி கைது செய்யப்பட்ட 21முஸ்லிம் இளைஞர்கள் ஏறக்குறைய இரண்டு வருட சிறைவாசத்திற்கு பின்னர் நிரபராதிகன் எனக் கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2007-ம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் ஷெரீப் ஆகியவற்றில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களுக்கு முஸ்லிம்களே காரணம் என கூறப்பட்டது. ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்கு காரணம் எனக் கூறி கைது செய்யப்பட்ட 21முஸ்லிம் இளைஞர்கள் ஏறக்குறைய இரண்டு வருட சிறைவாசத்திற்கு பின்னர் நிரபராதிகன் எனக் கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு தாக்குதல்களையும் நடத்தியது காவி
பயங்கரவாதிகள்தான் என சி.பி.ஐ. தற்போது கூறுகிறது. ஆனால், இந்த தாக்குதல்கள் நடந்த
உடனேயே வங்காள தேசத்தைச் சேர்ந்த ஹஹியுஜி - என்ற அமைப்பு தாக்குதலை நடத்தியதாக கூறி
அஜ்மீரில் சில வங்கதேசத்தை சேர்ந்தவர் களை போலீஸ் கைது செய்தது. மராட்டிய,
ஜார்க்கண்ட் மாநிலங்களிலிருந்து சில மவுலானாக்களையும் போலீஸ் கைது செய்தது. ஆனால்,
அவர்கள் அனைவருமே தற்போது நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2006
மலேகான் குண்டுவெடிப்பு 2007 ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் தாக்குதல் அஜ்மீர்
குண்டுவெடிப்பு இவை அனைத்திலுமே தாக்குதல் நடந்த உடனேயே சில முஸ்லிம் பயங்கரவாத
அமைப்புகளின் பெயர்கள் போலீசாரால் சொல்லப்பட்டது. முஸ்லிம் இளைஞர்கள் சுற்றி
வளைக்கப்பட்டு கை செய்யப்பட்டனர். அனைத்து ஊடகங்களும் இஸ்லாமிய தீவிரவாதம் ,ஜிகாத்
,புனிதப்போர்,இந்திய முஸ்லிம்களின் நாட்டுப்பற்று ஆகியவை குறித்து பட்டிமன்றங்களை
நடத்தின.
முஸ்லிம்களின்
வணக்கத் தலங்களை முஸ்லிம்களே தாக்க முடியுமா என்ற சந்தேகங்களை போக்கும் வகையில்
வஹாபி, சூஃபி இடையிலான முரண்பாடுகளை முன்னிறுத்தினர். ஹைதராபாத் இந்தியாவிலிருந்து
விடுவிக்கப்பட்டு நிஜாமுதீன் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென்பது
முஸ்லிம்களின் நோக்கம் என பரப்புரை செய்யப்பட்டது. ஆனால், இன்று இத் தாக்கு தல்களை
முன்னின்று நடத்தியது காவி பயங்கர வாதிகளே என கண்டறியப்பட்டுள்ளது. 2006- ஏப்ரல்
மாதம் நடந்த நான்டெட் குண்டு வெடிப்பு ஆர்.எஸ்.எஸ். ஊழியர் ஒருவரின் வீட்டுக்குள்
நடந்தது. புலன் விசாரணையில் அது பஜ்ரங்தள் தொடர்பானவர்கள் நடத்தியது என தெரிய
வந்தது. அவர்கள்தான் பர்பானி, ஜல்னா மற்றும் ப+ர்ணா பள்ளிவாசல்களின் வெளியே நடந்த
வெடிகுண்டு தாக்குதல்களுக்கும் காரணமானவர்கள் என கண்டறியப்பட்டது. தென்காசியிலும்,
கான்பரிலும் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு உள்ளதை நாமே
அறியும். ஹஅபினவ் பாரத் என்ற ஹகாவி பயங்கர வாத அமைப்பு நடத்திய செயல்களை பயங்கரவாத
தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் மறைந்த ஹேமந்த் கர்கரே அம்பலப்படுத்தியுள்ளார்.
சனாதன சனஸ்தா என்ற காவி பயங்கரவாத அமைப்பு கோவா, தானே மற்றும் பான்வெல்
குண்டுவெடிப்பு களுக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்திலும்
இந்த காவி பயங்கரவாதிகள் ஊடுருவி ஆதிக்கம் செலுத்துவது
கண்டறியப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் கடந்த மார்ச் மாதம் மராட்டிய
மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் கூறுகையில், புனே
குண்டுவெடிப்புக்கு இந்து அமைப்பு களே காரணம் என ஏ.டி.எஸ். (பயங்கரவாத தடுப்புப்
பிரிவு) தலைவர் கூறுவாரேயானால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதைத் தொடர்ந்து ஏ.டி.எஸ். தலைவர் கே.பி. ரகுவன்ஷி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அந்த பதவியிலே தற்போது குற்றப்பிரிவு தலைவரும், மும்பை 26ஃ11 தாக்குதல் வழக்கின்
புலன் விசாரணை அதிகாரியுமான ராகேஷ் மரியா அமர்த் தப்பட்டுள்ளார். இந்த ராகேஷ் மரியா
என்பவர் திருட்டு வழக்கில் கைதான முஸ்லிம் ஒருவரை சோட்டா ஷகில் குழுவைச் சேர்ந்தவர்
என்றும், மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி சாத்வி பிரக்யாவின் வழக்கறிஞர்களை கொல்ல
அனுப்பப்பட்டவர் என்றும் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தி அதனால் மும்பை உயர்
நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளா னவர். இவர் தான் இனி புனே மலேகான் குண்டு
வெடிப்பு வழக்குகளிலே புலன் விசாரணை நடத்துவார்.
முஸ்லிம்களை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி களாக
சித்தரித்து அவர்களின் மேல் தொடர்ச்சியாக பல்வேறு பொய் வழக்குகளை போடுவதன் மூலம்
முஸ்லிம் சமுதாயத்தின் நற்பெயர் கெடுவதோடு மட்டுமல்லாமல் பிற சமுதாயங்களைச் சேர்ந்த
மக்களுடனான முஸ்லிம்களின் உறவும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. அப்பாவி மக்களைக்
கொல்லும் கொலைகாரர்களாக இவ் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள்
அடையாளம் காட்டப்படுகின்றனர். சிறைகளில் இவர்கள் அடைக்கப்படும் போது அங்குள்ள
மாற்று சமூகத்தைச் சார்ந்த கொலைக் குற்றவாளிகள் கூட இவர்களை ஒதுக்கியே
வைக்கின்றனர். இவர்கள் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டாலும் கூட சமூகம் இவர்களை
நிரபராதிகளாக ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களை மட்டுமல்ல இவர்கள் சார்ந்த சமுதாயத்தையே
சந்தேகத்துடன் பார்க்கிறது. இவையெல்லாம் ஊடகங்களின் முழு ஆதரவுடனும்,
ஒத்துழைப்புடனே நடக்கிறது.
காவிமயமாதல் என்பது சமூகப் புற்றுநோய். மக்களின்
சிந்தனையை மழுங்கடிக்கும் நாலாந்தர வியாபார ஊடகங்கள் இந் நோய்க் கிருமிகளை மிக
லாவகமாகவும், வேகமாகவும் பரப்புகின்றன. போலீசும், அதிகாரவர்க்கமும் அதற்கு துணை
நிற்கின்றன. முதல் பத்தியில் நான் குறிப்பிட்டுள்ள ஹிந்து நாளிதழின் தலைப்பு
செய்தியே இதற்கு சான்று.
நன்றி
: மணிச்சுடர் நாளிதழ்
அஞ்சல் :
திரு.J .நிஸார் அஹமது (P .T .M )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக