வெள்ளி, 9 டிசம்பர், 2011

தீபாவளி சரவெடி ஜோக்ஸ்


தீபாவளி சரவெடி ஜோக்ஸ்


1. பறவைகள்  பறந்த  சுவடு
வான  வீதியில்  இருப்பதில்லை.
அது  போல்தான்...
உன்  பார்வைகள்  எனக்குள்
ஏற்படுத்திய  பாதிப்புகளும்...



2. கவிதை  எழுதாத  காதலர்கள்
உலகில்  இல்லை,
கவிதை  எழுதாவிட்டால்
அவர்கள்  காதலர்களே  இல்லை.



3. தலைவருக்கு  விபரமே  பத்தலை,  தியேட்டருக்கு  போறப்ப  எதுக்கு ஊறுகாய்  பாக்கெட்டோட  போறாரு?

வ குவாட்டர்  கட்டிங்  படம்.  தொட்டுக்க  வேணாமா?



4. ஏட்டய்யா,  இவன்  கிரிக்கெட்  ஸ்டேடியத்துல  சீட்டு  ஆடிட்டு  இருந்தான்,

யோவ்,  அதுக்காக  கிரிக்கெட்  சூதாட்ட  கேஸ்ல  இவனை  உள்ளே  தள்ளுவதா?



5. வாழ்க்கையே  எனக்கு  வெறுத்துடுச்சு.

தலைவரே!  உங்களைப்  பார்த்து  வாழ்க்கைதான்  வெறுத்துடனும்.



6. மாப்ளை  டைடல்  பார்க்ல  இருக்காருனு  சொன்னீங்க,  கம்ப்யூட்டர்  எஞ்சினியரா?

அட  நீங்க  வேற,  டைட்டல்  பார்க்ல  பொழுதுபோகாம  உக்காந்திருப்பாரு, வெட்டாஃபீஸ்ங்க.



7. உங்க  படத்துக்கு  எருமைச்சேலைனு  டைட்டில்  வெச்சிருக்கீங்களே, எருமை  எங்கேயாவது  சேலை  கட்டுமா?

நீங்க  வேற,  எருமைச்சேலை  அப்படிங்கறது  ஈரோடு  மாவட்டத்துல  உள்ள ஒரு  ஊரோட  பேருங்க.(மாட்டுத்தாவணி வைக்கலாம்,,  எருமைச்சேலை வைக்கக்கூடாதா?)



8. தியேட்டர்  ஓனர்  ஏன்  கோபமா  இருக்கார்?

பின்னே  என்னங்க?  அய்யனார்  படம்  ஓடற  தியேட்டர்ல  வந்து  அய்யனார்  பட்டாசுகள்  கிடைக்குமா?-னு  கேட்டா?



9. ஹைவேஸ்  ரோடுன்னா  அது  ஹைவே (HIGH WAY) யாக  இருக்கும். ரிங் ரோடுன்னா  அதுல  ரிங்  இருக்குமா?

by  தத்துவங்களை  கவரிங்  பண்ணி  எழுதுவோர்  சங்கம்.



10. தலைவருக்கு  கேரளா  ஸ்டேட்  ரொம்ப  பிடிக்குமாம்.

அதுக்காக  குளிக்கறதுகூட  எர்ணாகுளத்துலதான் -னு  சொன்னா  எப்படி?



11. ஜட்ஜ்: எதுக்காக  உன்  மனைவியை  கொலை  செஞ்சே?

கைதி: இது  என்ன  கேள்வி  எஜமான்?  செத்து  தொலையட்டும்-னு  தான்.



12. ஜட்ஜ்: நீ கொலை  செஞ்சதைப்  பார்த்த  சாட்சிகள்  12  பேர்  இருக்காங்க.

கைதி: யுவர்  ஆனர்  அதைப்  பார்க்காதவங்க  21 பேர்  இருக்காங்க. 12 பெரிசா? 21 பெரிசா?



13. தலைவருக்கு  தண்ணி  அடிக்கறதுல  அலாதி  பிரியம்.

அதுக்காக  உங்களுக்கு  பிடிச்ச  டூர்  ஸ்பாட்  எது?-னு  கேட்டா  சாலக்குடி, காரைக்குடி,  பரமக்குடி,  தூத்துக்குடி  அப்டினு  சொல்லனுமா?



14. அந்த  புதுமுக  நடிகை  ஸ்க்ரீன்  பிரிண்டிங்  பற்றி  படிச்சிட்டிருக்கே,  ஏன்?

இன்னைக்கு  ஸ்க்ரீன்  டெஸ்ட்  வைக்கறதா  டைரக்டர்  சொன்னாராம்.



15. கபாலி  வீட்டு  வாசல்ல  வெச்சிருந்த  போர்டைப்  பார்த்து  போலீஸ்  அதிர்ச்சி  அடைஞ்சிடுச்சாமே?

ஆமா.  மாமூல்  நிலையம்-னு  போர்டு  வெச்சிருக்கானாம்.



16. கபாலி  கிட்டத்தட்ட  தொழில்  அதிபர்  மாதிரியே  செயல்படறான்.

எப்படி  சொல்றே?

போலீஸ்  ஸ்டேஷன்ல  எல்லாருக்கும்  மாமூல்  குடுக்கறானே? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக