வெளவாலுக்கு யார் தாம்பூலம் வைத்தார்கள் ?
Who invited the bat offering Thamboolam?
துலுக்காத ஆயுதம் துருப்பிடிக்கும் .
Weapon which is not polished gets rusted.
வானம் சுரக்க , தானம் சிறக்கும் .
When the sky opens up and rains, charity will be abundant.
பொங்கியும் பால் புறம் போகவில்லை .
Even after boiling the milk hasn’t spilt out of the vessel.
கொண்டையைப் போட்டு விராலை இழுக்கிறது .
Use the small fish as bait to catch the bigger fish.
பால் சட்டிக்கு பூனை காவல் வைக்கிறதுபோல்.
Asking a cat to guard the pot of milk.
சாரத்தை உட்கொண்டு சக்கையை உமிழ்ந்துவிடுவதுபோல்.
Drinking the juice and spitting the pulp.
முன் கை நீண்டால் , முழங்கை நீளும் .
Only if you stretch out your hand, others can stretch out their arm.
தொடையில் புண்ணை நடையில் காட்டுகிறதா ?
Would any one show the wound in their thigh while they walk?
நாவு அசைய , நாடு அசையும் .
When the tounge moves , the country moves.
பூ மலர்ந்து கெட்டது, வாய்
விரிந்து கெட்டது .
Blossoms open and die,
your mouth opens and destroys you.
எரிகிற விட்டிலே
பிடுங்கிறது லாபம்.
Whatever you are able to
secure from a burning house is a gain.
காடுப்பூனைகுச் சிவராத்ரி
விரதமா ?
Will a wild cat observe
the fast of Sivaratri ?
உழக்கு மிளகு கொடுப்பானேன்
, ஒளிந்திருந்து மிளகு சாரு குடிப்பானேன் ?
Why should he give a
measure of pepper and drink the pepperbroth in secret ?
சாதுரியப்பூனை மீன் இருக்க,
புளியங்காயத் திங்கிறதாம்.
The artful cat ate
tamarind when there was fish.
பங்குனி என்று
பருக்கிறதுமில்லை, சித்திரை என்றும் சிறுக்கிறுதுமில்லை.
Neither does he expand in
March nor does he get lean in April.
குறையச் சொல்லி , நிறைய
அள.
Tell the defect to get
more quantity.
அஞ்சும் மூன்றும் உண்டானால்
, அறியாப்பெண்ணும் சமைக்கும்.
If the five and the three
are at hand, even an ignorant girl can cook.
அரைக்காசை ஆயிரம்
பொன்னக்குகிறவளும் பெண்சாதி , ஆயிரம் பொன்னை அறைக்காசு ஆக்கு கிறவளும்
பெண்சாதி.
The one who is capable of
converting half a coin into a thousand gold coins is a wife, and the one who is
capable of reducing a thousand gold coins to half a coin is also a wife.
ஒரு நாளும் சிரிக்காதவன்
திருநாளில் சிரித்தான் , திருநாளும் வேறு நாளாச்சுது .
When one who had never
smiled, smiled on a sacred day, even the sacred day became an ordinary day.
ஒரு நாளுமில்லாமல்
திருநாளுக்குப் போனால் , திருநாளும் வேரு நாளாச்சுது.
When a man, who never
attended a festival, attends one, even the festival day becomes a common
day.
வெறும் வாய் மெல்லுகிற
அம்மையாருக்கு அவல் அகப்பட்டது போல .
It is like a bowl of
Aval(Rice obtained from fried paddy by pestling it) given to a woman who has
been chewing her empty mouth.
பந்தியிலே வேண்டாம்
வேண்டாம் என்றாலும் , இலை போத்தல் இலை போத்தல் என்கிறான்.
Though I repeatedly
refuse to take him to place where food was served, he is constatly saying that
there is holes in the Ilai (leaf plate).
உழுகிற நாளில் ஊருக்குப்
போய், அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தது போல.
During the ploughing
season he goes about visiting places, but returns on time with his sickle for
the harvest season.
கஞ்சி கண்ட இடம் கைலாசம்
, சோறு கண்ட இடம் சொர்க்கம் .
Any place which gives
him rice-gruel is his Kailash, and whatever place which gives him rice is his
Heaven.
சூடு கண்ட பூனை
அடுப்பங்கரையில் சேராது .
The cat that has got
fire burns will never go near the kitchen.
குமரிக்கு ஒரு பிள்ளை ,
கோடிக்கு ஒரு வெள்ளை .
One child for a young
girl and one wash for a new cloth.
வீட்டுக்கு செல்வம் மாடு
, தோட்டச் செல்வம் முருங்கை.
The treasure of a house
is a cow and treasure of a garden is Murungai tree.
பெண்ணின் கோணல் ,
பொன்னிலே நிமிரும்
Unprettiness of a girl
will be shielded by her gold ornaments.
தேரோட போச்சு திருநாளு ,
தாயோட போச்சு பிறந்த அகம்
When the procession of
Temple car ends the festival ends, the support from home ends with death of the
mother.
உயிரோடு இருக்கும்போது
ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை, ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல .
While he was alive
they couldn’t not afford one spoonful of ghee, now they spend nine spoons of
ghee for the cermonial fire.
செல்லம் செரூக்குகிறதா ?
வாசல் படி வழுக்கிறதா ?
Chellam
serukkirathaa ? vaasal padi valukkirathaa?
கடுகு களவும் களவுதான் ,
கற்புரம் களவும் களவு தான்.
Kadugu kalavum
kalavuthaan, Karpooram kalavum kalavu thaan.
Theft is a theft ,be it
stealing a mustard or acamphor.
இன்றைக்கு இலை அறுத்தவன்
நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
Indraikku ilai
aruthavan naaliku kulai arukkamaattaanaa?
Won’t the person who cut
the leaves today , would cut the fruits tomorrow?
கூத்தாடி கிழக்கே
பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
Koothadi kilake
parthaan , koolikaran merke parthaan.
The dancer watched the
east, the labourer watched the west.
பாம்பாடிக்குப் பாம்பிலே
சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .
Paambatikku pambile
saavu, kallanukku kalavile saavu.
Death of snake charmer
would be caused by his snake, death of a thief will be caused by his theft.
கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு
திண்டாட்டம் .Kollum varaikkum kondatam, konda piragu thindaatam.
It’s enjoyment till the marriage and its misery from then.
துட்டு வந்து போட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொடியிலே விழுந்ததோ?
Thuttu vanthu potiyile vilunthatho, thitu vanthu potiyile vilunthatho.
Is it the money or the scoldings , that go into the savings box?
திருவாக்குக்கு எதிர்வாக்குக்கு உண்டா?
Thiruvaakkuku ethirvaakku unda?
Are there any words which can go against God’s words.
ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.
Ottai pannaiyilum sakarai erukkum.
Even a broken pot might contain sugar.
அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி .
Arupukalathil elikku aainthu pensathi.
During the harvest time a rat keeps five wives.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக