சனி, 11 ஆகஸ்ட், 2012

அறியாதசெயற்பாடும் அத்துமீறல்தான்....



சந்தோசங்களிற்கு புறம்பாக துன்பங்களையும் வேதனைகளையும் நாம்
சந்தித்துக்கொண்டிருக்கின்றோம் எனில் .. எமக்கு நாமே நீதிபதியாயிருந்து
காரணம் தேடுவதே சிறப்பானது. நம்மைப்பற்றி யாராவது எப்போதாவது
தவறுசொல்லும்போது, அல்லது சந்தேகப்படும்போது, எவ்வளவு வேதனைப் படுகின்றோம். ? இன்னும் எமது செயற்பாடுகளின் உண்மையறியாமல் தவறானமுடிவுகளை தவறுதலாகத்தான் சொல்கிறார்களென்றும் உணரும்
போதும்கூட எவ்வளவு வேதனைப்படுகின்றோம்!.

நமது வேதனையை நாம் நியாயப்படுத்த முயலும்போது, மற்றையோரது
நிலைமைகளையும் சற்றுக் கற்பனை பண்ணிப்பாருங்கள்.
இவ்வுலகில் நாம் நடமாடித்திரியவோ, பயணங்கள் செய்யவோ வீதி ஒழுங்குமுறைகள், அபாய அறிவுப்புகள் என்று எவ்வளவோ இங்கு இருப்பதுபோலவே இவ்வுலக சஞ்சரிப்புகள் அனைத்துக்கும் நியதிகள்
சாட்சிகளாக இருக்கின்றன என்பதனை மறுப்பதற்கில்லை. இவற்றுக்கு உடன்பாடின்றி அல்லது தவறுதலாகவேனும் கவனியாமல் முன்னேறும் வழிநெடுகில்தான் துன்பங்களையும் வேதனைகளையும் சந்திக்கக்கூடும்.
எமது வாழ்க்கையென்பதும் ஒருபணியெனப்பட்டிருகிறது. பணியிலிருக்கும்
போது பணிவோடிருக்கவேண்டும் என்பதும் ஒரு நியதி. பணிவுடைமையை வைத்தே நீதிநேர்மைக்காரியங்கள் மதிப்பிடப்படுகின்றன என்பதனையும்
ஏற்றுக்கொண்டாகவேண்டும்.
நமது கட்டுப்பாடான செயற்பாடுகளிற்கும், பணிவான உபகாரங்களிற்கும்
ஏற்பவே சந்தோசங்களை உணரமுடியும் என்பதை நிச்சயமாக நம்புங்கள்.
நம்புங்கள் இது நடக்கும் எனும் ஆஸ்திகமல்ல, நம்முன்னே காட்சிகளாயும்
சாட்சிகளாயும் இருப்பவைகளையே நம்புங்கள் என்கின்றேன்.
நம்முன்னே நடப்பவைகளையும் காண்பவைகளையும் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாலும் வேதனையைத்தான் சந்திக்கக்கூடும் என்பதை
உணர்ந்திருங்கள்.
உண்மையில் நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதனைத்
தட்டிக்கழியாமல் இப்பொழுதிலிருந்தே உணர்ந்திடுங்கள்.
உங்கள் உணர்வுகள் உங்களைச் சந்தோசப்படுத்துவனவாகவே இருக்கின்றன
என்றுணர்கிறீர்களாயின், இவ்வுணர்வு மற்றையோருக்கும் நிச்சயமாகக்
கைகூடுவதாய் அமையும்.
நமது எதிர்பார்ப்புக்கள் நம்பிக்கைகள் செய்ற்பாடுகள் போன்றனவெல்லாம் வேடிக்கையானவை, அதுவும் விபரீதமானவை என்று உணரக்கூடியவையா?
என்றறிய மேற்றொடர்வோமாயின்.....!!!!!!
தண்ணீரின் நீட்டத்திற்கேற்ப தாமரையும் நீண்டு மிதக்கும் விதி இருக்கிறது,
என்றால் மண்மீது மனிதர் மடிந்துவிழக்காரணம் சதி என்பதுணர்வீர்கள்.!! 

gnanatheepan. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக